தொடர்பாளர்கள்

Saturday, October 10, 2009

கருணாநிதியைக் கண்டித்து சுவரொட்டி சென்னை குரேம்பேட்டையில் பரபரப்பு


கருணாநிதியைக் கண்டித்து சுவரொட்டி சென்னை குரேம்பேட்டையில் பரபரப்பு


சென்னை குரேம்பேட்டை தொடர்வண்டி நிலையத்தில் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியைக் கண்டித்து ”தமிழர் பேரவை” என்ற அமைப்பின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சிக்கும் அச்சுவரொட்டியில் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழினப் பகைவன் கருணாநிதியின் நச்சு அரசியலுக்கு சாவுமணி அடிப்போம்!

கருணாநிதியே!

தெலுங்கனாய்ப் பிறந்து தமிழனாய் நடித்து, உழைக்கும் மக்களைப் பிரித்தாளுகிறாய்!

திராவிட அரசியலால் தமிழ் இனத்தைச் சீரழித்தாய்!

ஆங்கிலவழிக் கல்வியால் தமிழை அழித்தாய்!

பணத்தினால் வாக்குரிமையின் வலிமையை அழித்தாய்!

தொலைக்காட்சியைத் தொடங்கிப் பண்பாட்டை அழித்தாய்!

ஒரு ரூபாய் அரிசியால் உழவை அழித்தாய்!

9ஆம் உலகத் தமிழ் மாநாட்டில் ஈழத்தமிழரை அழித்ததை கொண்டாட உள்ளாய்!

உலகத் தமிழினமே!

கருணாநிதியின் கருவழிப்புகளுக்கு முடிவு கட்டிட, நம் இனத்தைக் காத்திட உலகத் தமிழர் மாநாட்டை நடத்துவோம்!

- தமிழர் பேரவை

இவ்வாறு அச்சுவரொட்டியில் அச்சிடப்பட்டுள்ளது.

பொது மக்கள் பெருமளவில் கூடுகின்ற குரோம்பேட்டை தொடர்வண்டி நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ள இச்சுவரொட்டிகளை, பொது மக்கள் ஆர்வமுடன் நின்று படித்துச் செல்கின்றனர்.

No comments:

Post a Comment

There was an error in this gadget
There was an error in this gadget