தொடர்பாளர்கள்

Saturday, December 31, 2011

இரா.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை இறுதிப் பாகம் காணொளி காண்க.

கிள்ளான் திருக்குறள் மன்ற ஏற்பாட்டில் நிகழ்த்தப் பட்ட திருக்குறள் விழாவில் மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை இறுதிப் பாகம் காணொளி காண்க.

இரா.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை பாகம் 6 காணொளி காண்க.

கிள்ளான் திருக்குறள் மன்ற ஏற்பாட்டில் நிகழ்த்தப் பட்ட திருக்குறள் விழாவில் மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை பாகம் 6 காணொளி காண்க.

இரா.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை பாகம் 5 காணொளி காண்க.

கிள்ளான் திருக்குறள் மன்ற ஏற்பாட்டில் நிகழ்த்தப் பட்ட திருக்குறள் விழாவில் மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை பாகம் 5 காணொளி காண்க.

இரா.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை பாகம் 4 காணொளி காண்க.

கிள்ளான் திருக்குறள் மன்ற ஏற்பாட்டில் நிகழ்த்தப் பட்ட திருக்குறள் விழாவில் மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை பாகம் 4 காணொளி காண்க.

இரா.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை பாகம் 3 காணொளி காண்க.

கிள்ளான் திருக்குறள் மன்ற ஏற்பாட்டில் நிகழ்த்தப் பட்ட திருக்குறள் விழாவில் மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை பாகம் 3 காணொளி காண்க.

இரா.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை பாகம் 2 காணொளி காண்க.

கிள்ளான் திருக்குறள் மன்ற ஏற்பாட்டில் நிகழ்த்தப் பட்ட திருக்குறள் விழாவில் மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை பாகம் 2 காணொளி காண்க.

இரா.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை பாகம் ௧ காணொளி காண்க.

கிள்ளான் திருக்குறள் மன்ற ஏற்பாட்டில் நிகழ்த்தப் பட்ட திருக்குறள் விழாவில் மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை பாகம் ௧ காணொளி காண்க.

Thursday, December 22, 2011

தமிழ் நெறி மாணவர் பண்பாளர் விழாவில் மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் உரை தொடர்










































தமிழியத் தலைமுறையை உருவாக்குவோம் தமிழினத்தை மீட்போம்! தமிழ் நெறி மாணவர் பண்பாளர் விழாவில் மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் உரை தொடர்

தமிழன் மத வெறியனாக இருந்து தன் அடையாளத்தை இழக்க முனைகிறானே ஒழிய தமிழனாக வாழ முற்படுவதில்லை .இந்த இழிநிலையிலிருந்து தமிழனை மீட்டெடுக்க வேண்டும் குழந்தை முதலாகவே இப்பணியை மேற்கொண்டு எதிர்கால தமிழிய தலைமுறையை உருவாக்கும் முயற்சிகளுள் ஒன்றாகவே தமிழ்நெறி மாணவர் விழா கொண்டாடப்படுகிறது .
இக்கால் இவ்விழாவினை தொடக்கத்தில் பங்கேற்று சிறப்பு பெற்ற மாணவர்களே முன்னின்று நடத்துவது பெருமைக்குரியது .எதிர்காலத்திலும் ஒவ்வொரு கட்டத்திலும் வளர்கின்ற தலைமுறையினர் இவ்விழாவினை மட்டுமல்லாமல் மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தையே சீரிய முறையில் ஏற்று வழி நடத்துவார்கள் என்பது திண்ணம் .இத்தகு இளைய தலைமுறையை நோக்கி நாம் இளந்தையர் பயிலரங்கு , திருக்குறள் வகுப்பு , தலைமைக்குரிய பயிற்சிப் பட்டறை தமிழ்நெறி பண்பாளர் விழா முதலானவற்றை தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றோம் .
இவ்விழ சிறக்க எல்லா வகையாலும் உழைத்த உழைத்துக்கொண்டிருக்கின்ற நம் பொறுப்பாளர்களுக்கு நான் என் மனமுவந்தபாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் .குறிப்பாக மலேசியத் தமிழ் நெறிக் கழக தேசியப் பொதுச் செயலர் இரா .கனல்வீரன் அவர்களுக்கும் ,தேசிய அமைப்புச் செயலர் கன்னித்தமிழன் அவர்களுக்கும் ஏனைய தேசிய பொறுப்பாளர்களுக்கும் நிகழவினைப் பொறுப்பேற்று செலாமா வட்டாரத்தில் நடத்த உழைக்கும் செலாமா கிளை பொறுப்பாளர்களுக்கும் பாடாங் செராய் கிளை பொறுப்பாளர்களுக்கும் எம் வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக ...











































விழா எல்லா வகையாலும் சிறக்க பங்கேற்கும் மாணவர்களுக்கும் ஒத்துழைத்த பெற்றோர்க்கும் எம் வாழ்த்துகளும் பாராட்டுகளும் ... வாழ்க வெல்க.. தனித்தமிழியம் ..

தமிழியத் தலைமுறையை உருவாக்குவோம் தமிழினத்தை மீட்போம்! மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் உரை





















































































































































தமிழியத் தலைமுறையை உருவாக்குவோம் தமிழினத்தை மீட்போம்! தமிழ் நெறி மாணவர் பண்பாளர் விழாவில் மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் உரை










மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தால் ஒவ்வோர் ஆண் டும் பேரளவாகக் கொண்டாடப் படும் சிறப்பு நிகழ்வே தமிழ் நெறி மாணவர் பண்பாளர் விழாவாகும். 1999 ஆம் ஆண்டு ஒட்டு மொத்த தமிழ் குடும்பங்களையும் ஒருங்கிணைக்கும் நோக்கிலேயும் தமிழ் நெறி இளந்தலைமுறையை உருவாக்கும் மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தைக் கட்டமைக்கும் நோக்கிலேயும் உயர்ந்த சிந்தனையோடு தமிழ் நெறி மாணவர் பண்பாளர் விழா எம்மால் திட்டமிடப் பட்டது. மலேசியத் தமிழ் நெறிக் கழகம் வெறும் தனி மனிதர்களின் கூட்டல்ல. தனிமனிதர்கள் சார்ந்த குடும்பங்களின் கூட்டே மலேசியத் தமிழ் நெறிக் கழகமாகும். எதிர்காலத் தமிழ் நெறி தலைமுறையை உருவாக்கும் நோக்கில் கடந்த பல ஆண்டுகளாகத் தமிழியச் சிந்தனையை உணர்த்தி சிறந்த தமிழ் நெறிக் குமுகயத்தைக் கட்டமைக்கும் வகையில் நாடெங்கிலும் திருக்குறள் தமிழ் நெறி வகுப்பு சிறந்த முறையில் நடத்தப் பட்டு வருகின்றது.



தமிழனை வீழ்த்திய ஆரியம் ஒவ்வொரு நொடிப் பொழுதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு திங்களும் ஒவ்வோர் ஆண்டும் மீள முடியாத வகையில் பல்வேறு விழாக்களை நிகழ்வுகளை கட்டமைத்து இன்றளவும் அந்த மயக்கில் ஆழும் படிசெய்து விட்டது. எனவே சாண் முழம் சறுக்கும் வகையில் வகையில் கொஞ்சம் விழிப்புணர்ச்சி பெற்றாலும் இத்தகு ஆரிய சார்பு விழாக்களால் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக விழிப்புணர்வு பெறாமலேயே அழுத்தப் படுகின்றனர்.


இன்றைய ஊடகங்கள் வெறும் பண நோக்கில் இயங்கி தமிழ் தமிழர் தொடர்பான சிந்தனைகளை மேலும் முடக்கம் செய்து வருகின்றன. இதனால் தமிழனே தமிழனை மறந்து தமிழை மறந்து தமிழ் அடையாளம் இழந்து சிதைந்து வருகின்றான் என்பது ஊழ்வினையாக இன்று அமைந்திருக்கிறது. இதன் வெளிப்பாடாகத்தான் இன்றை தமிழரில் பலர் தமிழ் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவதில்லை பொருளில்லாத பிற மொழி பெயர்களையும் ஓசைகளையும் புதுமை என்ற பெயரில் சூட்டி மகிழ்கின்றனர் . அதே போல் தம் குழந்தைகளிடம் தமிழில் உரையாடுவதில்லை குழந்தைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்புவதில்லை அப்படியே தமிழ் பள்ளியில் பயின்றாலும் அந்த தமிழ் பள்ளிகள் பிள்ளைகளுக்குத் தமிழ் சிந்தனையை ஊட்டுவதில்லை .உலகம் முழுமையிலும் வாழ்கின்ற தமிழர்கள் இவ்வாறுதான் இருக்கிறார்கள்.



தொடரும்..





























































உலகத் திருக்குறள் நாள் வாழ்த்தட்டை வெளியீடு



திருக்குறள் உலக சட்டத்திற்கு வேர் மாந்தர் வாழ்வு நெறிக்கு வழிகாட்டி தமிழர் வாழ்விற்கு அடிப்படை உலக தமிழரை இணைத்துப் பிணைக்ககூடிய உயர்ந்த மறை உலகிலேயே ஒரு மாண்புமிகு நூல் இது ஒன்றே என்ற தொடக்கத்துடன் மலேசியாவில் திருக்குறள் நாள் வாழ்த்து அட்டை வெளிவந்து உள்ளது.

கடந்த 20.01.1996-ல் மலேசியாவில் நடந்த உலகத் தமிழ் மறை திருக்குறள் வாழ்வியல் மநாட்டில் ‘சனவரி முதல் நாளை திருக்குறள் நாள்’ என உலகிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரைக்கு மிக முகாமையாகப் பங்காற்றியவர் மலேசியாவின் மூதறிஞர். தமிழ்ப்புணல் மு. மணி வெள்ளையனர் அவர்களே.

திருக்குறளால் இளைய தலைமுறையினர் அடையும் பயன், திருக்குறளின் நன்மை, அதன் முகாமையான குறிக்கோள் என்ன என்பது போன்ற உலக பொது மறை திருக்குறளின் நோக்கம் இந்த வாழ்த்து அட்டையில் நன்கு விளக்கப்பட்டுள்ளது.

இந்த அற்புதமான திருக்குறளின் வாழ்த்து அட்டையின் மூலமாக பலருக்கு பலருக்கு நன்மை கிடைத்து பயனடைவர் என்பது திண்ணம் என்கிறார் ‘உலக பொது மறை திருக்குறள்’ வாழ்த்து அட்டையை தயாரித்து வெளியீடு செய்த ரவாங்கைச் சேர்ந்த தமிழ் நெஞ்சர் அரசேந்திரன்.

மின்னல் எஃப்.எம்.மில் காலையில் திருக்குறள் விளக்க உரை வழங்கும் மலேசியத் தமிழ் நெறிக் கழக தலைவர் இரா. திருமாவளன் இந்த வாழ்த்து அட்டை சிறப்பாக அமைவதற்கு நல்ல ஆலோசனை வழங்கியதாக கூறுகிறார் அரசேந்திரன்.

ஒவ்வொருவரும் சில திருக்குறள் வாழ்த்து அட்டைகளை வாங்கி நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைத்தால் திருக்குறளின் காலத்தால் அழியாத பல சிறப்புகள் இன்னும் பலருக்கு தெரிய வாய்ப்புண்டு. ஒரு வாழ்த்து அட்டையின் விலை 1.50 காசு மட்டுமே.

தொடர்புக்கு : திருமதி மல்லிகா 016-6129554,

இரா. திருமாவளவன் 016-3262479,

அரசேந்திரன் 019-3243253.

நன்றி மலேசிய இன்று