தொடர்பாளர்கள்

Wednesday, July 29, 2009

ஒழுக்கத்தையும் தெளிவையும் ஏற்படுத்தி சிந்திக்கத் தூண்டுவதே உண்மைச் சமயமாகும்! திருமாவளவன் உரை முழக்கம். தொடர் 1

மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் அவர்கள் அண்மையில் சிரம்பான் தேமியாங் வட்டாரத்தில் இயங்கும் இந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடந்த சமய சொற்பொழிவு கூட்டத்தில் ஆற்றிய உரையினை இங்கே வெளியிடுகின்றோம்.

பின்னை நின்றென்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே!

எல்லாம் வல்ல பேரிறைக்கு எனது வணக்கம். இன்று இந்த நிகழ்ச்சியை வழிநடத்திக் கொண்டிருக்கின்ற தேமியாங் வட்டார இந்து சங்க தலைவர் ஐயா கிருட்டிணன் அவர்களே! என்னை இந்த நிகழ்ச்சிக்கு விடாப் பிடியாக நின்று வந்தே தீர வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் தொடர்பு கொண்டு என்னை இங்கு வரும்படியாகச் செய்த தமிழ்த் திரு லோகன் அவர்களே! மற்றும் இந்தத் தேமியாங் வட்டார இந்து சங்க பொறுப்பாளர்களே! தாய்மார்களே அன்புத் தமிழ் நெஞ்சங்களே! உங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தலை தாழ்த்தித் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சி ஒரு சமய அமைப்பின் நடவடிக்கை என்பதால் சமயம் தொடர்பாகவும் கொஞ்சம் விளக்கப் படுத்தி விட்டு பிறகு மற்ற பொது செய்திகளை நான் பேசலாம் என்று நினைக்கின்றேன். தமிழில் மட்டுந்தான் வேறு எந்த மொழிக்கும் இல்லாத பெரிய சிறப்பு உண்டு. பெருமை உண்டு. தமிழில் மட்டும் தான் சமயம் என்ற சொல் மதம் என்ற சொல் கடவுள் என்ற சொல் பொருள் பொதிந்தனவாக உள்ளன. இந்தச் சொற்களை ஆராய்ச்சிச் செய்தால் அவற்றில் தென்படுகின்ற கருத்துகள் மிக ஆழமாக இருக்கும். கடவுள் என்று சொன்னாலே காலங் காலமாக நாம் எதைப் பார்த்தோமோ எதைக் கற்றுக் கொடுத்தோமோ அதைத்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். அந்தப் பொருள் பொதிந்த சொல் தமிழில் மட்டுந்தான் உண்டு. வேறு எந்த மொழியிலும் இந்த மாதிரி பொருள் தரும் சொல் கிடையாது. மலாய் மொழியில் Tuhan என்று சொல்கிறான். ஆங்கிலத்தில் God என்று சொல்கிறான். அதற்கு பொருள் விளக்க முடியாது. ஆனால் கடவுள் என்ற சொல்லுக்கு நாம் பொருள் விளக்கம் சொல்ல முடியும். கட என்றால் கடத்தல் செல்லுதல் என்ற பொருளாகும். உள் என்றால் உள்ளே என்ற பொருளாகும். இதை இன்னொரு மாதிரியும்திருப்பிச் சொல்வார்கள். உள் கட என்று. உள்ளே கடந்து பார். உள்ளே கடந்து செல். என்ற பொருளை உணர்த்துகின்றது கடவுள் என்ற சொல். எனவே அதைப் பார்க்கும் பொழுது அது பொருளாக, அது ஓர் உருவமாக, ஒரு பால் வகைப் பட்டதாக இல்லாமல் எல்லாவற்றுக்கும் அப்பாற் பட்டதாக விளங்குகின்றது. அதை ஒரு பொருளாகவோ ஒரு மனிதனாகவோ விலங்காகவோ பறவையாகவோ எந்த வகையிலும் அடக்க முடியாது. எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பது போல் முன்னோர்கள் சொன்னது போல் அது எல்லையற்றது.
அந்தக் கடவுள் உணர்த்துகின்ற இன்னொரு பெரிய செய்தி என்னவன்றால், திருமந்திரம் என்ற நூல் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த நூலிலே இந்தச் செய்தி சொல்லப் பட்டுள்ளது. நம்மவர்கள் நமது முன்னோர்கள் எழுதிய பண்டைய நூல்களை உள்ளபடியாகவே உணர்ந்து படித்திருப்பார்களேயானால் கண்டிப்பாக இந்த அறிய செய்திகளை அறிந்திருப்பார்கள். நம்மவர்கள் எளிய ஆட்கள் இல்லை. மிகப் பெரிய கருத்துகளையும் சிந்தனைகளையும் தத்துவங்களையும் வாரி வழங்கிச் சென்றவர்கள் நம்மவர்கள். அந்தத் திருமந்திர நூலில் பல பாடல்கள் இருக்கின்றன. அந்தப் பாடல்கள் எவற்றையும் தள்ளத் தக்கன என்று தள்ளிவிட முடியாது. எனவே அதில் குறிப்பிட்ட ஒரு பாடலைத்தான் நான் சொல்ல விருக்கின்றேன்.
தன்னை அறிய தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னை அர்ச்சிக்கத் தானிருப்பானே!
இந்தப் பாடல் இடம் பெற்ற நூல்தான் திருமந்திரம். மிக அரிய கருத்துகளை தத்துவங்களை உள்ளடக்கிய நூல்தான் திருமந்திரம். ஆனால் அதை யாரும் படிப்பதில்லை. நமக்குக் கிடைத்த மற்றொரு அரிய நூல் திருக்குறள். பண்டைத் தமிழ் முன்னோர்கள் எழுதிய நூல்கள் பலவன. இரண்டை மட்டும் குறிப்பிட முடியாது. தொல்காப்பியம் என்ற நூல் இருக்கிறது. அது இலக்கணத்தையும் வாழ்வு இலக்கணத்தையும் குறிக்கிறது.அதுவும் மிகப் பெரிய வாழ்வியல் தத்துவங்களைக் குறிக்கின்ற நூல்தான். அதைச் சிலர் மொழிக்குள்ள இலக்கண நூலாக மட்டுந்தான் பார்ப்பார்கள். ஆனால் அது வாழ்வு இலக்கணத்தையும் மெய்யியல்களையும் தத்துவங்களையும் சொல்லியிருக்கிறது. அதில்தான் ஒரு கருத்து சொல்லியிருக்கிறார்.
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே!
என்பது தொல்காப்பியத்தில் வரும் ஒரு பாடல் வரி. இந்த உலகத்தில் பிறக்கின்ற ஒவ்வொரு உயிரிக்கும் கண்டிப்பாக இறப்பென்று ஒன்று உண்டு. பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பென்று ஒன்று இருக்கும் . அது இயற்கை நீதி. அதிலிருந்து யாரும் மாறவும் முடியாது; விலகவும் முடியாது. இந்தப் பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் இருப்பதுதான் வாழ்க்கை. இந்த தொடக்கம் முடிவு இரண்டுக்கும் நடுவில் மாந்தன் உழலுகின்றான்; வாழுகின்றான். அந்தப் பிறப்பு வாழ்க்கை என்பது எப்படி அமைய வேண்டும். பிறந்த ஒருவன் இறக்கும் போது எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தால் இந்த உலகத்தால் போற்றப் படுவான். அவனை சூழ்ந்திருக்கும் மக்களால் நினைத்துப் பார்க்கக் கூடியவனாக போற்றப் படக் கூடியவனாக இருப்பான் என்பதை நாம் உணர்ந்து பார்க்க வேண்டும். எனவே இந்த வாழ்க்கை மிகவும் முக்கியம். இன்றியமையாதது.
இந்த வாழ்க்கை இலக்கணத்தைத் தெரியாதக் காரணத்தால் முறையாக வகுத்துப் படிக்காத காரணத்தால் இடையில் ஏற்படக் கூடிய பல்வேறு தடங்கல்களில் இந்த மனிதன் மாட்டி சிக்கிக் கொள்கிறான். எப்படிச் சிக்கிக் கொள்கிறான்? திருக்குறளில் சொல்கிறார். ஒரு மனிதனுக்கு மிக மிக இன்றியமையாதது அறம் என்று. அறம் என்றால் என்னவென்றால் மனத்தூய்மை. திருக்குறளில் வள்ளுவர் என்ன சொல்கிறார்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீரப் பிற.
என்பது குறள். மனத்தூய்மை இல்லாத ஒருவன், அவன் பேசினாலோ செயற்பட்டாலோ எழுதினாலோ எப்படி இருந்தாலும் அவன் வெளிப்பாடுகள் என்றும் தூய்மையாக இருக்காது. ஏன் தூய்மையாக இல்லை? மனம் தூய்மையாக இல்லை. புரிகின்றதா? எனவே மனத்தூய்மை என்பது மிக மிக இன்றியமையாதது. மனம் தூமையாக இருக்க வேண்டும் என்றால் அந்த மனத்தைத் தூய்மை படுத்தக் கூடிய தூய்மையாகவே வைத்திருக்கக் கூடிய செய்திகளை அவன் பார்க்க வேண்டும்; கேட்க வேண்டும்; படிக்க வேண்டும். உண்மையா இல்லையா? என்றைக்குமே மனதைத் தூய்மையாக வைத்திருக்கக் கூடிய செய்தியைப் பார்க்க வேண்டும். என்றைக்குமே மன அழிந்து போகா வண்ணம் தூய்மையான சிந்தனைகளையும் கருத்துகளையும் நெறிகளையும் அவன் கேட்க வேண்டும். அப்படியான ஒன்றை அவன் கேட்க வேண்டும். அப்பொழுதான் அவன் மனம் தூய்மையாக இருக்கும். நெறியாக இருக்கும். தூய்மையுடைய ஒன்றுதான் அறமாகும்.
இந்த அறத்துக்கு மேலும் இலக்கணம் வகுத்துச் சொல்கிறார். என்ன சொல்கிறார் என்றால், ஒரு மனிதன் தள்ளத் தக்க கூடிய நான்கு கூறுகளையும் பின்பற்றக் கூடாது என்கிறார். என்ன அந்த நான்கு கூறுகள் என்றால். அழுக்காறு இருக்கக் கூடாது. ஒருவருடைய வளர்ச்சியிலோ பிறரைப் பார்த்தோ ஏற்றுக் கொள்ள முடியாமை. அவன் இப்படி சிறப்பாக வந்து விட்டானே நன்றாக வளர்ந்து விட்டானே என்று மனத்துக்குள்ளே ஏற்றுக் கொள்ள முடியாமை என்கின்ற அழுங்கல் மனப்பான்மை. அழுக்காறு என்றால் அழுக்கு வழி அல்ல. ஏற்றுக் கொள்ள முடியாமை என்று பொருள். அதனைப் பொறாமை என்றும் சொல்வார்கள். இதனால் ஒருவன் பிறருக்குக் கேடு செய்ய தொடங்கி விடுவான்.
தொடரும்

Tuesday, July 28, 2009

பிரபாகரன் நன்றாகவும் பாதுகாப்பாகவும் உள்ளார். ஐயா பழ. நெடுமாறன்

"பிரபாகரன் நன்றாகவும், பாதுகாப்பாகவும் உள்ளார் என்ற உறுதியான செய்தி கிடைத்து இருக்கிறது'' என்று நேற்று பெங்களூர் கருத்தரங்கில் பங்குகொண்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், உலகத் தமிழர் பேரவையின் தலைவருமான பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பு சார்பில் நேற்று பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் `ஈழத்தமிழரும்-நமது கடமையும்' என்ற கருத்தரங்கு நடந்தது. அம்பேத்கார் சட்ட கல்லூரி நிறுவனர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். தமிழ்ச்சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார்.

உலக தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு கருத்தரங்கை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-

"பெங்களூரில் 18 ஆண்டுகளாக மூடப்பட்டு இருக்கும் திருவள்ளுவர் சிலையை திறக்க கர்நாடக அரசே முன்வந்து உள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. திருவள்ளுவர் சிலை திறப்பு போராட்டத்துக்கு தலைமை தாங்க நான் பெங்களூர் வந்தபோது நூற்றுக்கணக்கானவர்களுடன் நான் கைது செய்யப்பட்டேன். ஒற்றுமையாக போராடினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

மின்வேலி முகாம்கள்

சிங்கள அரசு 6 மாதத்தில் மட்டும் 1 லட்சம் தமிழர்களை கொன்று குவித்தது. சர்வாதிகாரி ஹிட்லரால் ïத மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். அதை விட மிகப்பெரிய கொடுமை இலங்கை தமிழர்களுக்கு நேர்ந்து உள்ளது. இந்தியாவில் வாழும் தமிழர்களை மத்திய அரசு நமது நாட்டின் குடிகளாக நினைக்கவில்லை.

ஏறத்தாழ 31/2 லட்சம் தமிழர்கள் ராணுவ கட்டுப்பாட்டில் மின்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். 3 ஆயிரத்து 500 பேருக்கு ஒரு கழிவறை வசதி மட்டுமே செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கெல்லாம் மத்திய அரசு தான் காரணம்.

இலங்கை தமிழர் பேரழிவுக்கு காரணமாக இருந்தவர்களில் மலையாளிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், வெளியுறவு செயலாளர் சிவசங்கர மேனன், இந்தியாவில் முக்கிய பதவி வகிக்கும் பி.கே.நாயர், ஜெனீவாவில் உள்ள மனித உரிமை ஆணையத்தின் இந்திய பிரதிநிதி கோபிநாத், ஐ.நா.சபை செயலாளரின் விவகாரத்துறை அதிகாரி விஜய்நம்பியார், இலங்கை ராணுவ தளபதி பொன்சேகாவின் ராணுவ ஆலோசகரும் விஜய் நம்பியாரின் சகோதரருமான சதீஷ் நம்பியார் ஆகிய அனைவரும் மலையாளிகள். இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி இந்த பேரழிவை ஏற்படுத்தி உள்ளனர்.

தமிழக முதல்-அமைச்சரை ஏமாற்றினர்

சிவசங்கர மேனனும், நாராயணனும் மாதத்துக்கு 4 தடவை இலங்கைக்கு சென்று வந்தனர். போர் நிறுத்தம் பற்றி பேசுவதாக இலங்கை சென்று டெல்லி திரும்பும் வழியில் சென்னையில் இறங்கி அவர் கள் தமிழக முதல்-அமைச்சரையும் ஏமாற்றி விட்டனர்.

இலங்கையில் சீனா நாடுகள் உள்பட நமது எதிரி நாடுகள் கால்பதித்து வருகின்றன. இது நமது நாட்டு பாதுகாப்புக்கு பாதிப்பாக அமையும். இதை புரிந்து கொள்ளாமல் மத்திய அரசு தனது தலையில் தானே மண்ணை அள்ளி போட்டு உள்ளது.

பிரபாகரன் நன்றாக இருக்கிறார்

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் மிகவும் நன்றாக உள்ளார். மிக பத்திரமாக இருக்கிறார். எந்த கட்டத்திலும் மீண்டும் தோன்றி தமிழீழ போராட்டத்துக்கு தலைமை தாங்கி போராடுவார். அதை அவரே அறிவிப்பார். பிரபாகரன் இறந்து விட்டார் என்பது திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி. விடுதலைப்புலிகளின் சர்வதேச செய்தி தொடர்பாளர் பத்மநாபன், பிரபாகரன் இறந்ததாக செய்தி வெளியிடும் முன்பு என்னை தொடர்பு கொண்டு பேசினார். அவ்வாறு செய்தி வெளியிட நீங்கள் யார்? என்று கேட்டேன். எனது கேள்விகளுக்கு அவரால் பதில் அளிக்க முடியவில்லை.

நம்மை குழப்பவும், போராட்டத்தை வலுவிழக்க செய்யும் வகையிலும் பரப்பப்படும் பொய் செய்திகளை யாரும் நம்பக்கூடாது. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று எனக்கு உறுதியான செய்தி களத்தில் இருந்து கிடைத்து உள்ளது. தம்பி பிரபாகரன் தலைமையில் போராட்டம் முன் நிறுத்தப்படும். அப்போது உலக தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கும். அதுவரை நாம் ஒன்று திரண்டு எந்த ஒரு குழப்பத்துக்கும் ஆளாகாமல் போராட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பழ. நெடுமாறன் பேசினார்.

விழாவில் அம்பேத்கார் சட்ட கல்லூரி நிறுவனர் ராமமூர்த்திக்கு பெங்களூர் மாவட்ட குடிசைவாசிகள் நலச்சங்கம் சார்பில் `ஏ.பி.எஸ் சண்முக சுந்தரம்' விருதை பழ.நெடுமாறன் வழங்கினார். அப்போது குடிசைவாசிகள் நலச்சங்க தலைவர் வி.ஜி.ஸ்ரீதர், பெங்களூர் மக்கள் நலச்சங்க தலைவர் செந்தில்குமார் உடன் இருந்தனர்.

முன்னதாக அம்பேத்கார் சட்ட கல்லூரி மாணவர்கள் ஈழத்தமிழர்கள் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

இந்தியா தமிழினத்தின் பகை நாடே!

இந்தியா போன்ற சர்வதேசச் சதிகாரச் சக்திகளின் அரசியல் சதுரங்க விளையாட்டுக் களமாகத் தமிழ்மக்களின் தாயக பூமி.
0000

விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கான போர் என்ற பெயரில்- தமிழ் மக்களுக்கு எதிராகவே இலங்கை அரசாங்கம் யுத்தத்தை நடத்தியது. இந்தப் போர் தனியே இலங்கை அரசாங்கத்தால் மட்டும் நடத்தப்பட்ட ஒன்றல்ல.

உலகின் பல்வேறு பாகங்களையும் சேர்ந்த - இருபது நாடுகள் இணைந்து நடத்திய போர் இது. சர்வதேசம் போரை நிறுத்துமாறு தமக்கு அழுத்தம் கொடுத்தது - ஆனாலும் தனியே நின்று போரை வென்று காட்டினோம் என்று, கடந்த சில வாரங்களாக கூறி வந்த இலங்கை அரசு- இப்போது தான் சில உண்மைகளைப் போட்டுடைக்கத் தொடங்கியிருக்கிறது.

இருபது நாடுகளின் உதவி ஒத்துழைப்புடன் தான் இலங்கை அரசு போரில் வெற்றி பெற்றது என்ற உண்மை - கடந்த செவ்வாயன்று அவசரகாலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தின் போது தான் வெளியே வந்தது.

அப்போது தான் முதல்முறையாக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம, புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிபெற உதவிய இருபது நாடுகளுக்கும் தமது நன்றியைத் தெரிவித்திருந்தார்.

ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பையும்- அதற்கு நிழல் கொடுத்து நின்ற மக்கள் கூட்டத்தையும் அழித்து - அடக்குவதற்கு இருபது நாடுகள் கைகோர்த்தது போன்ற நிகழ்வு உலகில இதற்கு முன்னர் நிகழ்ந்திராத ஒன்று.

உலகில் எத்தனையோ போர்கள் நடந்திருக்கின்றன. இந்தப் போர்களில், ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் கூட்டணி சேர்ந்து போரை எதிர்கொண்டிருக்கின்றன.

ஆனால் அவையெல்லாம் ஏதாவதொரு நாட்டுக்கு எதிராகவே இடம்பெற்றிருக்கின்றன. இரண்டாம் உலகப்போரின் போது - ஜேர்மனிக்கு எதிராக, ஜப்பானுக்கு எதிராக நேச நாட்டுப் படைகள் கூட்டாகத் தாக்குதல் நடத்தின. அதுபோன்றே சோவியத் யூனியனுக்கு எதிராக ஜேர்மனியும் தனது நட்பு நாடுகளுடன் இணைந்து போரை நடத்தியது.

ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், யூகோஸ்லாவியாவிலும் - அமெரிக்கா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் ஒன்றிணைந்து தான் யுத்தத்தை நடத்தின.

அரசியல் கட்சிகள் கூட்டணி சேர்ந்து தேர்தலைச் சந்திப்பதைப் போன்று - உலகப் போர்களின் வரலாற்றில் பல நாடுகள் கூட்டணி சேர்ந்து போரை நடத்திய சம்பவங்கள் நிறையவே நிகழ்ந்துள்ளன.

ஆனால் ஒரு விடுதலை அமைப்புக்கு எதிராக இருபது நாடுகள் இணைந்து நடத்திய யுத்தம் இது. இந்த வகையில் பார்க்கும்போது இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. உண்மையில் புலிகளின் பலத்தை - அவர்களின் போர்த்திறனை இப்போது தான் அதிகமாக மதிப்பிடத் தோன்றுகிறது.

இருபது நாடுகள் இணைந்து நடத்திய போரை - ஒரு சிறிய மக்கள் கூட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விடுதலை அமைப்பு ஒன்று - மூன்று வருடங்களாக எதிர்கொண்டு போராடியது என்ற, வியப்பான உண்மை இப்போது தான் உலகில் பலருக்கும் தெரியவருகிறது.

இலங்கை அரசின் படைகளுக்கு முன்னால் - புலிகள் தோல்வியைத் தழுவவில்லை. உலகில் மிகப் பலம் வாய்ந்த நாடுகளின் இராணுவ வல்லமை, அவற்றின் சதித் திட்டங்களின் விளைவாகவே புலிகளின் இராணுவ வல்லமைக்குத் தோல்வி ஏற்பட்டிருக்கிறது.

புலிகளுக்கு எதிரான போரில் வெற்றியீட்ட இலங்கைக்கு உதவிய இந்த நாடுகளின் பட்டியலை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம வெளியிடவில்லை. ஆனால்
இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மிகவும் முக்கியமானதும் முதன்மையானதுமான நாடாக இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

இந்தியா கொடுத்த ஆயுதங்கள், புலனாய்வுத் தகவல்கள், இராஜதந்திர உதவிகள் என்பன இந்தப் போரில் இலங்கை அரசு வெற்றி பெறுவதற்கு முக்கியமான புறக்காரணிகளாக இருந்துள்ளன.

”இறுதிக் கட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட காலம் வரை வடக்கின் போர் நிலைமைகள் குறித்து இந்தியாவுக்கு அறிவித்துக் கொண்டேயிருந்தோம். இந்திய அதிகாரிகளுடன் இணைந்து இதற்கான கட்டமைப்பு ஒன்றையும் உருவாக்கியிருந்தோம்" என்ற மற்றொரு உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோத்தாபய ராஜபக்ச.

பி.ரி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இந்த விபரங்களை வெளியிட்டிருக்கிறார்.

'புலிகளுக்கு எதிராக நடத்திய இறுதி யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து புலிகள் தோற்கடிக்கப்பட்டது வரை, வடக்கின் நிலைமைகள் குறித்து இந்தியாவுக்கு விரிவாக விளக்கப் பட்டது.

இறுதி யுத்தத்தின் முதல் தினத்திலிருந்து முடிவு வரை இந்தியாவுக்கு சகல விபரங்களையும் அறிவித்தோம். சீனாவுடனோ பாகிஸ்தானுடனோ அல்லது வேறெந்த நாட்டுடனோ நாம் வைத்துள்ள உறவு காரணமாக - இந்தியாவுக்கு எந்தவித சந்தேகமும் ஏற்படாத வகையில் நடந்து கொண்டோம்.

வெளியுறவு அமைச்சின் தொடர்புகளுக்கு அப்பால் - மேலதிகமாக இந்திய அதிகாரிகளுடன் நாம் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தியிருந்தோம்.

இந்தக் கட்டமைப்பில் இந்தியாவின் சார்பில் வெளியுறவு செயலாளர் சிவ்சங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், பாதுகாப்பு செயலாளர் விஜய் சிங் ஆகியோர் இடமபெற்றிருந்தனர்.

இலங்கை அரசின் சார்பில் என்னுடன் லலித் வீரதுங்க, பசில் ராஜபக்ச ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். இரண்டு குழுக்களும் அடிக்கடி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதுடன் சந்திப்புக்களையும் நடத்தி வந்தோம்.

சகல விவகாரங்கள் குறித்தும் அவ்வப்போது இலங்கைக் குழு இந்தியாவுக்குச் சென்று இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தது.

தமிழகம் கொடுத்த கொடுத்துக் கொண்டிருந்த அழுத்தங்களைப் புரிந்து கொண்டு, நாம் மேற்கொண்ட சில செயற்பாடுகள் இந்தியாவுக்கு உதவியாக இருந்தன. புலிகளுடனான போரின் போது இந்தியாவுடன் நட்புறவை வலுப்படுத்தி மிக நெருக்கமாக செயற்பட்டோம்.

வேறு எத்தகைய அழுத்தங்கள் ஏற்பட்டாலும் - இந்த உறவு முறையால் அந்த அழுத்தங்களை சமாளித்து விடலாம் என்பதைத் தெரிந்திருந்தோம். இந்தியாவின் எண்ணமும் புலிகளை தோற்கடிக்க வேண்டுமென்பதாகவே இருந்தது.

யுத்தத்தின் போது விமானத் தாக்குதலை நிறுத்த இலங்கை எடுத்த முடிவுக்கும் இந்தியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விமானத் தாக்குதல் நிறுத்தப்பட்டமை, பாதுகாப்பு வலயம் உருவாக்கப்பட்டமை ஆகிய அனைத்து முடிவுகளும் ஜனாதிபதி மற்றும் படைத் தளபதிகளுடன் கலந்தாலோசித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே தவிர, இந்தியாவுடன் தொடர்புடைய விவகாரங்கள் அல்ல.

இந்தியா இந்த நடவடிக்கைகளை வரவேற்றது. எனவே இந்தியாவும் உதவியாக இருந்தது." என்று இந்தப் போரில் இந்தியாவின் பங்களிப்பு பற்றிய உண்மைகள் பலவற்றை வெளியிட்டிருக்கிறார்.

இந்தியாவின் துணையுடன் இலங்கை நடத்திய போர் இது என்பதும் - இதற்கென்றே தனியான கட்டமைப்பு ஒன்றை இலங்கை - இந்திய அரசுகள் ஏற்படுத்தி வைத்திருந்தன
என்பதும் பலராலும் அதிர்ச்சியோடு பார்க்கப்படும் விடயங்களாவே இருக்கின்றன.

இந்தப் போருக்கு இந்தியா எந்த வழியிலும் உதவவில்லை என்று, மத்திய அரசினது தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை சொல்லி வந்து பொய்களின் முகத்திரை இப்போது கிழிந்து போயிருக்கிறது.

அவ்வப்போது தமிழகத்தில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதெல்லாம் - போரை நிறுத்தப் போகிறார் பிரணாப் முகர்ஜி என்றும், எம்.கே.நாராயணனும் சிவ்சங்கர் மேனனும் தாக்குதலை நிறுத்த வலியுறுத்துவார்கள் என்றும் செய்திகள் வெளியிடப்பட்டதும் இந்தக் கூட்டுச்சதியின் ஒரு அங்கமே.

அவர்கள் கொழும்பு போனதெல்லாமே புலிகளை அழிப்பதற்கான வியூகங்களை வகுப்பதற்கே என்ற உண்மை இப்போது வெளிப்பட்டிருக்கிறது.

இலங்கையும் இந்தியாவும் இணைந்து இரகசியமாக அரங்கேற்றிய இந்தச் சதி நாடகத்தின் உண்மைகளைப் புரிந்து கொள்ளாமல் - ஈழத் தமிழர்கள் இந்தியா உதவும் என்று நம்பி நம்பியே மோசம் போயினர். இப்படி ஏமாந்து போனவர்கள் ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல. தமிழக மக்களும் தலைவர்களும் கூட.

போரை நிறுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுத்தது - கொடுக்கிறது. இலங்கை அரசு போரை நிறுத்தி விட்டது என்று தமிழகத் தலைவர்களுக்கும் மக்களுக்கும் மத்திய அரசு திரும்பத் திரும்ப பொய்யையே கூறிக்கொண்டிருந்தது. ஆனால் என்ன நடந்திருக்கிறது?

பிரணாப் முகர்ஜியோ, எம்.கே.நாராயணனோ, சிவ்சங்கர் மேனனோ போரை நிறுத்த வலியுறுத்தவும் இல்லை - அதற்கு அழுத்தம் கொடுக்கவும் இல்லை. அப்படிச் சொல்லிக்கொண்டு இவர்கள் கொழும்பு போய் வந்தெல்லாம் வெறும் நாடகமே.

இவர்கள் இலங்கை அரசாங்கத்தோடு இணைந்து தமிழகத்தை ஏமாற்றியிருக்கிறார்கள். விமானத் தாக்குதல் நிறுத்தப்பட்டது, பாதுகாப்பு வலயம் உருவாக்கப்பட்டது என்று எதிலுமே இந்தியாவின் தலையீடு இருக்கவில்லையாம். எல்லாமே இலங்கை அரசாங்கத்தினது முடிவுகள் தான் என்று கூறியிருக்கிறார் கோத்தாபய ராஜபக்ச.

அப்படியானால், இந்திய மத்திய அரசு தமிழக மக்களுக்கு இந்தப் போர் பற்றிக் கூறிய அனைத்துமே பொய் என்பது நிரூபணமாகியிருக்கிறது. இலங்கை அரசு தனது நாட்டு தமிழ் மக்களையே கொன்று குவித்தது.

இந்தியாவோ தனது நாட்டு தமிழ் மக்களையே நம்ப வைத்துக் கழுத்தறுத்து - நம்பிக்கைத் துரோகம் செய்திருக்கிறது. அதேவேளை இலங்கையில் நடக்கும் போரில் தாம் எந்த வழியிலும் உதவவில்லை என்றும், ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் இந்திய அரசு தெரிவித்து வந்ததெல்லாம் வெறும் நாடகமே என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது.

காலிமுகத் திடலில் போர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இலங்கை அரசு நடத்திய பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பில் - இந்தியா கொடுத்த ஆயுத தளபாடங்கள் அணிவகுத்துச் சென்றதை எப்படித் தான் மறைக்க முடியும்?

இந்தியா கொடுத்திருந்த ~இந்திரா| ரேடார், 40 மி.மீ எல்-70 ரக விமான எதிர்ப்புப் பீரங்கிகளை விமானப்படையும், ~சயுர|, ~சாகர| போன்ற போர்க் கப்பல்களை இலங்கைக் கடற்படையும் காட்சிப்படுத்தியதைப் பொய்யென்று உரைக்க முடியுமா?

இலங்கைக்கு எந்தவொரு இராணுவ உதவிகளையும் இந்தியா செய்;யவே இல்லை என்றால் - இவையெல்லாம் இந்த அணிவகுப்புக்கு வந்தது எப்படி?

ஒரு உண்மை மட்டும் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருகிறது. ஈழத் தமிழர்களின் ஆயுதப்போராட்டம் தோல்வியடைந்ததற்கு பலரும் புலிகள் தான் காரணம் என்று கூறுகின்றனர்.

எப்போதும் தோல்வியடைந்தவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது தான் வழக்கம். ஆனால் சர்வதேச சக்திகளின் கைககளில் சிக்கித்தான் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் சீரழிந்து போயிருக்கிறது.

இந்தியா போன்ற சர்வதேச சதிகார சக்திகளின் அரசியல் சதுரங்க விளையாட்டுக் களமாக தமிழ்மக்களின் தாயகபூமி மாற்றப்பட்டிருக்கிறது. இப்போதும் கூட இந்தியா இலங்கை அரசுடன் கொஞ்சிக் குலாவவே விரும்புகிறது.

அதிகாரப்பகிர்வு பற்றி இலங்கைக்கு எந்த அழுத்தமும் கொடுக்காதாம். அது அந்த நாட்டின் உள்விவகாரமாம்.

இப்படிச் சொல்லியிருப்பவர் வேறு யாருமல்ல. இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தான். ஆக, ஈழத்தமிழரை இந்தியா ஒருபோதும் கைவிட்டு விடாது. அவர்களைப் பாதுகாக்க- கௌரவமாக வாழ நடவடிக்கை என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அண்மையில் சொன்னதெல்லாம் வெறும் பொய் - பித்தலாட்டம் என்றே முடிவுக்கு வரவேண்டி யிருக்கிறது.

Thursday, July 23, 2009

காக்கத் தவறினோம்!
கழுவாய் தேடுவோம்!!


- பழ. நெடுமாறன்

உலகெங்கும் வாழும் சுமார் பத்துக் கோடி தமிழர்களில் ஏறத்தாழ ஆறரைக் கோடி தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ் கிறார்கள். எனவே உலகெங்கும் வாழ்கிற தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் தங்களுக்கு இடர் சூழும் போதெல்லாம் அதிலிருந்து மீள தமிழகத்தையே எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய கடமை தமிழகத்திற்கு உண்டு.

மியான்மர் முதல் பிலிப்பைன்ஸ் வரை உள்ள தென்கிழக்கு ஆசிய நாடு கள் எல்லாவற்றிலும் சீனர்கள் பெருந் தொகையாக வாழ்கிறார்கள். அவர்களின் நலனில் செஞ்சீனம் மிகுந்த அக்கறைக் கொண்டிருக்கிறது. எனவே இந்நாடுகளில் அவர்களுக்கு எதிராக சுண்டு விரலை அசைப்பதற்கு கூட மற்ற இனத்தவர்கள் அஞ்சுகிறார்கள்.

உலகத் தமிழர்களுக்கு தான் ஆற்ற வேண்டிய கடமையைத் தமிழகம் செவ்வனே செய்திருக்கிறதா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்வது நல்லது.

இலங்கையில் மிக அண்மையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர் கள் சிங்கள இராணுவ வெறியர்களினால் கொல்லப்பட்டார்கள். அதைத் தடுப்ப தற்குக் குரல் கொடுக்க வேண்டிய தமி ழகம் அந்த கடமையை முழுமையாகச் செய்யவில்லை. இந்த இரங்கத்தக்க நிலை இன்னமும் தொடர்கிறது. கடந்த 26-06-2009 அன்று தமிழகச் சட்ட மன்றத்தில் அ.தி.மு.க மற்றும் ம.தி.மு.க., பா.ம.க. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் சார்பில் கீழ்க்கண்ட தீர்மானம் முன் மொழியப்பட்டது. ‘சர்வதேசச் சட்டம் மற்றும் ஜெனிவா உடன்பாட்டில் உள்ள போர் விதிமுறைகள் ஆகியவற்றை முற்றிலுமாக மீறி அய்ம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர் களை கொன்று குவித்து ஓர் இனப் படு கொலையை இலங்கை அரசு நடத்தி யுள்ளது. இது மனித உரிமையை மீறிய செயலாகும். எனவே இலங்கை அரசின் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டி மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட வேண்டும்.’

இத்தீர்மானம் எக்கட்சியின் நலன் சார்ந்த தீர்மானமும் அல்ல. ஈழத் தமிழர் நலன் பற்றிய தீர்மானமாகும். கட்சி எல் லைக் கோடுகளுக்கு அப்பால் அனைத் துக் கட்சிகளும் இத்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் சட்டமன்றப் பேரவையின் தலைவர் இத்தீர்மானத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதைத் தள்ளிப் போட் டார். உடனடியாக எடுக்க வேண்டிய இத்தீர்மானத்தை ஒத்தி வைத்ததற்குப் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்பது வெளிப்படையாகும்.

இலட்சக்கணக்கானத் தமிழர் களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்த இலங்கை அரசை சர்வ தேச நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்த வேண்டியது தமிழனாகப் பிறந்த ஒவ் வொருவரின் கடமையாகும். ஆனால் அந்தக் கடமையை மறந்தும் துறந்தும் செயலாற்றுவது தமிழினத்திற்கு இழைக்கப்படுகிற துரோகமாகும்.

திட்டமிட்ட இனப் படு கொலையை சர்வதேச சமுதாயம் மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளது. இரண் டாம் உலகப் போரில் ஏற்பட்ட அத் தனை அழிவுகளுக்கும் காரணமான ஜெர்மானியத் தலைவர்களைப் போர்க் குற்றவாளியாக்கி விசாரணை செய்ய நூரம்பர்க் எனும் நகரில் விசாரணை நீதிமன்றமும் ஜப்பானியப் போர்க் குற்ற வாளிகளை விசாரிக்க டோக்கியோவில் விசாரணை நீதிமன்றமும் அமைக்கப் பட்டன. இந்த நீதிமன்றங்கள் வகுத்த வரைமுறைகளிலும் அய்.நா பேரவை நிறைவேற்றியத் தீர்மானங்களிலும் 1948-ஆம் ஆண்டு இனப் படு கொலையைத் தடுப்பதற்கும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குமான மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர் மானங்களும் இன்று வரையிலும் இப் பிரச்னையில் உலக நாடுகளுக்கு வழி காட்டி வருகின்றன.

இரண்டாம் உலகப் போரின் போது கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ ஒரு கோடியே இருபது இலட்சம் சிலேவிய, யூத இனங்களைச் சேர்ந்த மக்கள் இனப் படுகொலை செய்யப்பட்டனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவில் வெள்ளை யர் ஆட்சியின் போது கருப்பினத்தைச் சேர்ந்த நீக்ரோ மக்களும் இந்திய மக்களும் இனப் படுகொலைக்கு ஆளானார்கள்.

இஸ்ரேல் ஆக்கிரமித்தப் பகுதி களில் இருந்த எண்ணற்ற அராபிய மக் கள் இனப் படுகொலைக்கு ஆளாயினர்.

வியட்நாமில் அமெரிக்கப் படை யினர் வியட்நாம் மக்களை இனப் படுகொலை செய்தனர்.

சீனா திபெத்திய மக்களைக் கொன்று குவித்தது.

பாகிஸ்தான் கிழக்குப் பாகிஸ் தானைச் சேர்ந்த வங்க இன மக்களை இனப் படுகொலைக்கு ஆளாக்கிற்று.

அதைப் போல இலங்கையில் தமிழ் மக்கள் சிங்கள இராணுவ வெறி யர்களால் திட்டமிட்ட இனப் படு கொலைக்கு தொடர்ந்து ஆளாகி வருகிறார்கள்.

உலகின் பல பகுதிகளில் நிலவி வரும் இத்தகைய இனப் படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்காகவும் குற்ற வாளிகளைத் தண்டிப்பதற்காகவும் சர்வ தேச நீதிமன்றம் அமைக்கப்பட்டது. 1945-ஆம் ஆண்டு அய்.நா இதை அமைத்தது. அய்.நா-வின் பட்டயத்தில் இந்த அமைப்புக் குறித்தும், அதன் அதிகார வரம்புக் குறித்தும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அய். நா பேரவையும் பாதுகாப்புக் குழுவும் கூடி சர்வதேச நீதிமன்றத்திற்குரிய 15 நீதிபதி களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அய். நா-வில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இவர்கள் இருக்க வேண்டும். ஒரே நாட்டைச் சேர்ந்த இருவர் இதில் இடம் பெற முடியாது. இந்த நீதிமன்றம் நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹெக் நகரில் இயங்கும்.

1990-ஆம் ஆண்டில் போஸ்னி யாவின் கிழக்குப் பகுதியில் வாழும் சுமார் 40,000-க்கு மேற்பட்ட போஸ்னிய முஸ்லிம்களை போஸ்னியா-செர்பிய இராணுவம் திட்டமிட்ட இனப்படுகொலைச் செய்தது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. யூகோசிலேவியா, செர்பியா ஆகியவற்றின் முன்னாள் அதிபரான சுலோ போடன் மிலோசெவிக் மற்றும் முக்கியமான 30 பேர்கள் மீது இந்த வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த இடைக்காலத்தில் மிலோசெவிக் இயற்கையாக மரணம் அடைந்தார்.

2007-ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி சர்வதேச நீதிமன்றம் போஸ்னிய இனப்படுகொலை வழக்கில் திட்டமிட்ட இனப்படுகொலை நடை பெற்றிருக்கிறது எனத் தீர்ப்பு அளித்தது. மேலும் இவ்வழக்கில் பலர் தண்டிக்கப் பட்டனர். சிலர் விடுதலையாயினர்.

1992-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி அய்.நா பேரவை நிறைவேற்றிய தீர்மானம் எண் 47/121-இன் படி இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையும் இனப் படுகொலையேயாகும். இந்த தீர்மானத்தின்படி போஸ்னியாவில் செர்பி யர்கள் நடத்திய இனப் படுகொலைக் கண்டிக்கப்பட்டது.

2005-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 27-ஆம் தேதி அமெரிக்கப் பிரதிநிதிகள் அவை போஸ்னியாவில் நடெைபற்ற இனப் படுகொலையைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியது.

எனவே அய்.நா பேரவை, அமெ ரிக்க பிரதிநிதிகள் அவை, சர்வதேச நீதிமன்றம் போன்ற அமைப்புகள் இனப் படுகொலையை மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளன. அதன் அடிப்படையில் தமிழகச் சட்டமன்றமும் இத்தகைய தீர் மானத்தை நிறைவேற்றுவது இன்றியமை யாததாகும். உற்றார் உறவினர் பெற்றோர் பிள்ளைகள் எல்லோரையும் இழந்து சாவின் விளிம்பில் நின்று தத்தளித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு இத்தகைய தீர்மானம் நம்பிக்கைக் கீற்றாக விளங்கியிருக்கும்.

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களைப் படுகொலைச் செய்த கொலைக்காரக் கும்பலை தமிழகம் ஒரு போதும் மன்னிக்காது. அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுக்க முயலும் என்பதை நிலை நிறுத்த ஒரே வழி தமிழகச் சட்டமன்றத்தில் இத்த கையத் தீர்மானத்தை நிறைவேற்றுவ தேயாகும். ஆனால் எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலின் விளைவாக பெறும் விவா தம் மட்டும் நடத்தி பிரச்சனையத் திசை திருப்பியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

தி.மு.க தமிழ்நாட்டில் ஆளுங் கட்சி மட்டுமல்ல. மத்திய அரசை ஆளும் காங்கிரசுக் கூட்டணியில் தி.மு.க-வும் இணைப்பிரிக்க முடியாத அங்கமாக விளங்கி வருகிறது. அப்படி இருந்தும் ஒரு இலட்சம் தமிழர்களைக் காப்பாற்ற தி.மு.க தவறிவிட்டது. இதற்கு கழுவாய் தேடும் வகையிலாவது போர்க் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருக்க வேண்டும். அதையும் செய்ய தி.மு.க. தவறியது வரலாற்றில் என்றும் அழியாத கறையாகும்.

லெப். செல்லக்கிளி - அம்மான்
22/07/2009

--------------------------------------------------------------------------------

சதாசிவம் செல்வநாயகம்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம்.

23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.


1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள்.

நாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்க எல்லோரும் கீழே இறங்குகிறோம். அங்குதான் கண்ணிவெடி புதைக்க வேண்டும். வான் அந்த இடத்தில் நின்று நாங்கள் இறங்க அயல் சனங்கள் அரவம் கேட்டு வெளிவரத்தொடங்க விக்ரரும், செல்லக்கிளியும் (இராணுவச் சீருடை அணிந்து இருந்தனர்) சிங்களத்தில் உரக்கத் கதைத்தபடி றோட்டிலே நடக்கத் தொடங்க வெளியே எட்டிப் பார்த்த தலைகளை காணவில்லை. வெளிச்சம் போட்ட இருவீடுகளின் விளக்குகளும் அணைந்து விட்டது. யாரும் வெளிவரவில்லை. இராணுவத்தினர் வந்து நிற்கின்றனர் என்று நினைத்து விட்டனர்.

முன்பு திட்டமிட்டபடி அப்பையா அண்ணை, விக்ரர், செல்லக்கிளி மூவரும் வெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர். விக்ரரும் செல்லக்கிளியும் பிக்கானால் றோட்டிலே கிடங்கு வெட்டுகின்றனர். கண்ணிவெடி புதைப்பது பெரிய வேலை. வெடிமருந்து தயார்படுத்துகையில் வெடிமருந்தின் நச்சுத் தன்மையால் தலையிடிக்கும். என்னுடைய அனுபவப்படி தாங்க முடியாத தலையிடி. அதன்பின் கிடங்குவெட்டி, (இறுகப் போடப்பட்ட தார் றோட்டிலே கிடங்கு வெட்டுவது அவ்வளவு இலகுவானதல்ல) இவற்றையும விட தாக்குதலின் போது சண்டையும் போடவேண்டும்.

எமது தகவலின் படி சுமார் நள்ளிரவு 12 மணியளவில் பலாலியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஜீப் வண்டியிலும், ஒரு ட்ரக் வாகனத்திலும் இராணுவத்தினர் வருவது வழக்கம். ஜீப்பில் 4 இராணுவத்தினரும் ட்ரக்கில் 10 பேர் அளவிலும் வருவார்கள் எனத் தகவல். எனவே யாழ். பல்கலைக்கழக பின்வீதி பலாலி றோட்டைச் சந்திக்கும் இடமாகிய தபால் பெட்டிச் சந்தியில், கண்ணிவெடி புதைத்து இரண்டாவதாக வரும் வாகனத்துக்கு கண்ணி வெடியால் தாக்க முன்னால் வரும் வாகனத்தைச் சுட்டு மடக்குவது என்று நாம் வகுத்த திட்டம். அதன்படி திருநெல்வேலிச் சந்தியில் ஒரு வோக்கிரோக்கி. அது அவர்களுடைய வரவை எமக்கு அறிவிக்கும்.

விக்ரரும் செல்லக்கிளியும் அப்பையா அண்ணையும் கண்ணிவெடி தயார்படுத்திக் கொண்டிருக்கையில் மற்ற எல்லோரும் அருகில் உள்ள வீடுகளின் சுவர்களின் உள்ளே பாய்ந்து தத்தமக்கு உரிய இடத்தை தேர்ந்தெடுக்கத் தொடங்கினோம். ஒவ்வொருவருக்கும் இடம் கிடைத்தது. கண்ணிவெடியை புதைத்துக் கொண்டிருக்கையில் விக்ரர் விலகி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தின் சுவரின் உள்ளே பாய்கின்றான். சுவர் அவனை விட உயரமாக இருக்க பின்பு வெளியில் குதித்து உயரம் வைப்பதற்காக தெருவில் தேடி சில பெரிய கற்களை எடுத்து உள்ளே போட்டு தன் உயரத்தைச் சரிப்படுத்திக்கொண்டு அந்த சுவரின் மறைவைக் கொண்டு தன் நிலையை சீர்படுத்திக் கொள்கிறான்.

துப்பாக்கியை தோளில் வைத்து இயக்கிப்பார்க்கும் விதங்களையும், துப்பாகியை இலகுவாக இயக்கமுடியுமா என்பதையும் சரி பார்த்துக் கொள்கின்றான். தம்பி (பிரபாகரன்) தபால் பெட்டிச் சந்தியில் இருந்து திருநெல்வேலிப்பக்கமாக உள்ள ஒரு வீட்டின் சுவரின் பின்னே நிலையை எடுத்து தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கையில் வோக்கி செல்லக்கிளியை கூப்பிடுகின்றது.

செல்லக்கிளி அம்மான் மிக அவசரமாக தன் வேலையை முடித்துக்கொண்டு மீதி வேலையை அப்பையா அண்ணையிடம் விட்டுவிட்டு தனது நிலைக்குச் செல்கின்றான். அம்மான் அருகில் உள்ள ஒரு கடையின் மேல் வெடிக்கவைக்கும் கருவியுடனும் தானியங்கி இயந்திரத் துப்பாக்கியுடனும் தயாராகின்றான். வெளிச்சம் எமக்கும் தெரிந்தது. அப்பகூட வேலை முடியவில்லை. விக்ரர் ''அப்பையா அண்ணை வெளிச்சம் வருகின்றது கெதியா மாறுங்கோ"" என்று கத்த அப்பையா அண்ணை வயர் ரோல்களுக்கு ரேப் சுத்திக் கொண்டிருக்கையில், வோக்கி மீண்டும் அலறியது.

"அம்மான் நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான். முன்னால் ஜீப், பின்னால் ட்ரக்" என்று அறிவித்தது. எனவே அம்மான் ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடியால் தாக்க முன்னால் வரும் ஜீப்புக்கு நாம் தாக்குதல் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கையில் வெளிச்சங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. ஜீப்பை எம்மிடம் வரவிட்டு, பின்னால் வரும் ட்ரக்வண்டியை கண்ணிவெடியால் தாக்கி அதில் தப்புபவர்களைச் சுடுவதாக எமது திட்டம்.

ட்ரக் வண்டியில் பின்பக்கமாக இருப்பவர்களை சுடக்கூடியவாறு விக்ரர் நிற்கின்றான். விக்ரரையும் தாண்டுபவர்களை கவனிக்க தம்பியும் சில தோழர்களும் நிற்கின்றனர். வெளிச்சங்கள் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து வந்துகொண்டிருந்தது. நான் எட்டிப்பார்த்தேன். முன்னால் இரு விளக்குகளுடன் ஒரு வாகனம். அந்த விளக்குகளுக்கிடையிலான இடைவெளியைக் கொண்டு அது ஜீப் என்று புரிந்துகொண்டேன்.

அடுத்து ட்ரக். மெல்ல வந்து கொண்டிருக்கின்றன. நாம் ஜீப்பைத் தாக்குவதற்குத் தயாராகிக்கொண்டிருக்க ஜீப் விக்ரர் நின்ற இடத்தைத் தாண்டி கண்ணிவெடி வைத்த இடத்தை அண்மித்த போது கண்ணிவெடி வெடிக்க வைக்கப்பட்டுவிடுகிறது. எமக்கு அதிர்ச்சி. ஏன் அப்படி நடந்தது? சிந்திக்க நேரமில்லை. உண்மையில் ஜீப்வண்டியை விட்டு பின்னால் வரும் ட்ரக் வண்டிக்கே கண்ணிவெடி வைக்க இருந்தோம். இன்றுவரை அது ஏன் ஜீப்புக்கு வெடிக்க வைக்கப்பட்டது என்பது தெரியாது. ஏனென்றால் அதை வெடிக்க வைத்த செல்லக்கிளி அதை விளக்கவில்லை. சண்டை முடிந்தபோது அவனை நாம் இழந்துவிட்டோம்.

சிந்திக்க நேரமில்லை. உடனே நானும் என்னோடு நின்றவர்களும் சுடத்தொடங்கினோம். ஜீப்பின் வெளிச்சம் அணையவில்லை. எனவே பின்னால் நடப்பவை எமக்குத் தெரியவில்லை. எனது G3யால் இரு விளக்குகளையும் குறிபார்த்து உடைத்தேன். விளக்கு உடைந்ததும் பின்னால் நின்ற ட்ரக்கின் வெளிச்சத்தில் ஜீப்பில் இருந்த சில உருவங்கள் இறங்குவதைக் கண்டு அவற்றை நோக்கியும் ஜீப்பை நோக்கியும் ரவைக் கூட்டில் போடப்பட்டு இருந்த அத்தனை குண்டுகளையும் சுட்டேன்.

அது இப்படி இருக்க விக்ரரைப் பார்ப்போம். ஜீப் வண்டி அவனைத் தாண்டும் போது விக்ரர் தன் தலையை சுவருக்கு உள்ளே இழுத்துக் கொண்டு நிற்கையில் மிகப்பெரிய சத்தத்துடன் கண்ணிவெடி வெடிக்கிறது. விக்ரர் தலையை நிமிர்த்திப் பார்க்க ஓரே புழுதிமண்டலம். மங்கலாக ஒருவன் வெடித்த ஜீப்பில் இருந்து ஓடிவருவது தெரிய அவனைக் குறிவைத்து விசையை அழுத்த. சில குண்டுகள் அவனின் உடலில் பாய அவன் தூக்கி எறியப்படுகின்றான். அப்படியே சுருண்டுவிழுந்து விட்டான்.

இன்னுமொருவன் ஓடிவர அவனை நோக்கிச் சுட அவன் மீண்டும் ஓடிவர மீண்டும் சுட குண்டுகள் அவனை வீழ்த்தவில்லை. ஆனால் காயத்துடன் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடினான். விக்ரர் அவனைத் திருப்பிச் சுட்டான். வானளாவ உயர்ந்த புழுதி மண்டலம் அடங்கவில்லை. மற்றும் தகுந்த வெளிச்சம் இல்லை. எனவேதான் சரியாகச் சுடமுடியவில்லை. அவன் ஓடிவிட ஜீப்புக்குக் கிட்டே ஒன்றோ இரண்டோ துப்பாக்கிகள் விக்ரரை நோக்கிச் சுட்டன. அதன் சுவாலையை விக்ரர் கண்டான். தன் இயந்திரத் துப்பாக்கியால் அந்த சுவாலையை மையமாக வைத்து சில வேட்டுக்களைத் தீர்த்தான். பின்பு அடங்கிவிட்டது.

மேலும் ஒருசில உருவங்கள் தெரிய அவற்றை நோக்கியும் சில குண்டுகளைச் சுட்டான் துப்பாக்கி திடீரென்று நின்றுவிட்டது. விக்ரருக்கு விளங்கிவிட்டது. போடப்பட்ட குண்டுகள் தீர்ந்துவிட்டது. குண்டுகள் நிரப்பப்பட்ட மறு ரவைச் சட்டத்தைமாற்றி மீண்டும் சுட்டான். அதேவேளை பின்னால் வந்த ட்ரக் வண்டியின் சாரதி வெடி வெடித்ததைப் பார்த்தான். அவன் உடல் சில்லிட்டது. பெரிய வெளிச்சத்தையும், ஜீப் மேலே தூக்கி எறியப்பட்டதையும் கண்ட சாரதி தன்னை அறியாமலே பிரேக்கை இறுக அமத்தினான். ஏன் பிரேக் அழுத்தும் மிதி மீது ஏறி நின்றான் என்றே கூறலாம்.

ட்ரக் பிரேக் போட்டு நின்றதும் ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர் தம் துப்பாக்கியை தயாராக்கியவாறு இருக்கையிலிருந்து எழத்தொடங்கினர். தம்பி இரு வாகனங்களும் தன்னைத் தாண்டு மட்டும் சுவரின் மறைவிலே குந்தியிருக்க, இரு வாகனங்களும் அவரைத் தாண்டுகிறது. சிறிதாக நிமிர்ந்து பார்க்கையில் ஜீப் வண்டி கண்ணி வெடியை நெருங்கிக் கொண்டிருக்க ட்ரக் அவருக்கு 20 யார் தூரத்தில் சென்றுகொண்டிருக்க கண்ணிவெடி வெடித்தது. ட்ரக் அவருக்கு மிகக் கிட்ட கையில் எட்டிப்பிடிக்குமாப் போல் துரத்தில் பிரேக் போட்டதால் குலுங்கி நிற்க தான் எப்போதும் உடன் வைத்திருக்கும் அவருடைய G3 வெடிக்கத்தொடங்கியது.

ட்ரக்கின் இருக்கையில் இருந்து இராணுவத்தினர் எழுந்தும் எழாததுமான நிலையில் தம்பியின் G3 வெடிக்கத் தொடங்கியது. G3 யிலிருந்து புறப்பட்ட சூடான ரவைகள் தாக்குதலுக்குத் தயாராக எழுந்த இராணுவத்தினரை வரிசையாக விழுத்தத்தொடங்கியது. சற்றும் எதிர்பாரமல் ஏற்பட்ட இத்திருப்பம் தம்பியை ஆபத்தின் உச்ச எல்லைக்குள் சிக்கவைத்துவிட்டது. ஆனால், இந்த எதிர்பாராத திருப்பமே இப்போரின் முழுவெற்றிக்கு வழி அமைத்தது எனலாம். மிகத் துரிதமாகவும் குறிதவறாமலும் துப்பாக்கியை கையாள்வதில் முதன்னமயாளராகத் திகழும் தம்பியிடம் ட்ரக்கில் வந்த 9 இராணுவத்தினரும் சிக்கியதே எமது முழு வெற்றிக்கு வழி கோலியது.

ட்ரக் மிகக் கிட்ட நிற்பதால் இலகுவாக தம்பியால் அவர்களைச் சுடமுடிகிறது. வெடியன் அதிர்வில் தெரு விளக்குகள் அணைந்துவிட்ட பொழுதிலும் மிகக் கிட்டேயிருப்பதால் ஒவ்வொருவராகக் குறிவைத்துச் சுட்டார். ஆனால் மிக அபாயகரமான நிலை அவருக்கு. இராணுவத்தினரைப் பொறுத்தவரையில் தம்பி மிகக் கிட்டே நிற்கிறார். எதிர்பாராமல் இத்தாக்குதலில் மிக அபாயத்தின் எல்லையில் தம்பிதான் நிற்கிறார். ஆனால் தனது ஆளுமையால், ஆற்றலால் வரிசையாக இராணுவத்தினரை விழுத்தி வந்த போதிலும் இரண்டு சாதுரியமான இராணுவத்தினர் ட்றக்கிலிருந்து கீழே சில்லுக்குள் புகுந்துகொண்டு, மறைந்திருந்து தமது தாக்குதலை ஆரம்பித்தார்கள்.

தம்பி நின்ற சுவரில் வேட்டுக்கள் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தன. இத்துடன் ட்றக்கின் முன்புறத்தில் இருந்தவர்களும் கீழே பாய எத்தனித்தனர். இதை நோக்கிய தம்பியின் G3 இவர்களையும் நோக்கி முழங்குகிறது. இதிலே மிகவும் சங்கடம் என்னவென்றால் தம்பிக்கு உதவிக்கு எவரும் இல்லை நாம் எமது திட்டத்தின் படி ஜீப்பை முன்னே விட்டு ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடித் தாக்குதல் செய்வதாக இருந்ததோம். அத்திட்டத்தின்படி தம்பியை மிகப் பின்னுக்கு வைத்திருந்தோம். ஆனால் இப்போ தனியாகவே ட்றக்கை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தம்பி தள்ளப்பட்டு விட்டார்.

இதே நேரம் ஜுப்பை நோக்கி சுட்டுக்கொண்டிருந்த விக்ரர் தனக்கு 20 யார் பின்னே ட்ரக் நிற்பதையும் அதிலிருந்து துப்பாக்கிகள் சடசடப்பதையும் அவதானித்தான். தன் இயந்திரத் துப்பாக்கியை ட்றக்கை நோக்கி திருப்பினான். ட்றக்கின் முன் கண்ணாடிகள் சிதறுகின்றன. கண்ணாடிக்கு குறுக்காக ஓர் நீளவரிசையாகச் சுட்டான். அப்பொதுதான் சாரதி இறந்திருக்க வேண்டும். நாம் பின்பு பார்த்தபோது தனது இருக்கையிலேயே ஸ்ரேறிங்கில் சாய்ந்து வாயால் இரத்தம் கக்கியபடி உயிரை விட்டிருந்தான்.

விக்ரரின் இடத்திலிருந்து சற்று முன்னோக்கி எதிரில் இருந்த ஒழுங்கையிலிருந்து '"பசீர் காக்கா"" றிப்பீட்டரால் ஜீப்பை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தார். றிப்பீட்டரில் தோட்டாக்கள் முடியும்போது அதை மாற்றித் திருப்பித் தாக்கும் படி செல்லி உற்சாகமூட்டிக் கொண்டிருந்தார் காக்காவின் அருகிலிருந்த அப்பையா அண்ணை. அப்போழுது ஒழுங்கையை நோக்கி ஒருவன் S.M.G உடன் ஓடி வந்தான். 'சுடு" என்ற அப்பையா அண்ணை உடனே 'கவனம் எங்கட பெடியளோ தெரியாது பார்த்துச் சுடு" என்றார்.

றிப்பீட்டர் சத்தம் ஓய வந்தவன் பிணமாகச் சரிந்தான். அவனது S.M.Gயை அப்பையா அண்ணை ஓடிவந்து எடுத்துக்கொண்டார். இவனே ரோந்துப் பிரிவுக்கு தலைமை தாங்கிய லெப்ரினன்ட் என்று பின்னர் தெரிந்து கொண்டோம். அவனது விசேட இராணுவப் பட்டிகள் அதை உறுதிப்படுத்தின. இதே நேரம் தம்பி தனியே நிற்பதை உணர்ந்து ரஞ்சனையும் இன்னொரு போரளியையும் ''தம்பியிடம் ஓடு" என்று துரத்தினேன். அவர்கள் அருகிலுள்ள வீடுகளால் பாய்ந்து தம்பியை நோக்கிச் சென்றனர். ஆனால் ரஞ்சனும் சக போராளியும் தம்பியை நோக்கி சென்றடைந்த போது ட்றக்கிலிருந்த அனைத்து துப்பாக்கிகளையும் தம்பியின் தனி ஒரு G3 ஓயவைத்துவிட்டது.

சாதாரணமாக எவரும் நம்புதற்கரிய இவ்வீரச்செயலை முடித்து விட்டு அமைதியாக வீட்டின் அருகேயுள்ள மாமரத்தின் கீழிருந்து முடிந்த ரவைக்கூட்டிற்கு ரவைகளை நிரப்பிக் கொண்டிருந்தார் தம்பி. மதிலேறிக்குதித்த ரஞ்சனும் மற்றைய போரளியும் ஆயுதத்தோடு ஒரு நபர் இருப்பதைக் கண்டு ஆயுதத்தைத் தயார்நிலைக்குக் கொண்டுவந்து ''யாரது"" என்று முன்னே வந்தனர். ''அது நான்ராப்பா"" என்றவாறு ரஞ்சனை அடையாளம் கண்ட தம்பி இங்கே எல்லாம் முடிந்தது. உங்கடை பக்கம் எப்படி என்றார். ''அண்ணை எங்கடை பக்கம் பிரச்சினையில்லை"" என்றார் ரஞ்சன். ''இங்கையும் எல்லாம் முடிந்து விட்டது, ஆனால், எனக்கு சற்று முன்பாக எதிரேயிருந்த புலேந்திரனையும் சந்தோசத்தையும் காணவில்லை, வா பார்ப்போம்" என்றவாறு தன் பிரியத்திற்குரிய G3யை தூக்கிக்கொண்டு விரைந்தார் தம்பி.

மதிலேறிக் குதிப்பதற்குமுன் ரஞ்சனுடன் வந்த போராளி தம்பியின் அனுமதியைப் பெற்று எதற்கும் முன்னெச்செரிக்கையாக ஓர் குண்டை வீசினான். குண்டு ட்ரக்கின் கீழ் விழுந்து வெடித்து எரிபொருள் தாங்கியை உடைத்தது. இதன்பின் மதிலேறிக் குதித்து றோட்டைத் தாண்டி புலேந்திரன் சந்தோசத்தின் இடத்தையடைந்தான். அங்கு புலேந்திரன் சந்தோசத்தைக் காணவில்லை. 'எதற்கும் முதலில் இறந்தவர்களின் ஆயுதங்களைச் சேகரியுங்கள்" எனக் கட்டளையிட்டார் தம்பி.

மதிலேறி றோட்டில் குதிக்க ஆயத்தமான ரஞ்சனுடன் வந்த மற்ற வீரன் தம்பியைப் பார்த்து ''அண்ணா அவன் அனுங்குகிறான்." மீண்டும் ஒருமுறை முழங்கிய G3 அவனின் அனுங்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதன் பின் ட்ரக்கை நெருங்கி ஆயுதங்களை சேகரிக்கத் தொடங்கினர். தம்பி எதற்கும் என்று வெளியே கிடந்த இராணுவத்தினரின் தலையில் இறுதி அத்தியாயத்தை G3ஆல் எழுதிவைத்தார். G3யின் வேகம் மண்டையோடுகளைப் பிளக்க வைத்தது. இதே நேரம் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடிய ஓர் இராணுவவீரனை இன்னோர் போராளி துரத்திச் சென்று சுட்டான்.

ஜீப்பை முற்றாக முடித்துவிட்டு பொன்னம்மானும் நானும் என்னுடைய போரளிகளும் ட்ரக்கை நோக்கி நடு றோட்டால் ஓடினோம். ''கரையால் வாருங்கள்"" என்ற குரல் எம்மை வரவேற்றது. எல்லோரும் தம்பியை சூழ்ந்துகொண்டு மகிழ்சி ஆரவாரம் செய்து கொண்டு ஆயுதங்களைப் பொறுக்கத் தொடங்கினோம். இதற்கிடையில் பொன்னம்மான் அதீத மகிழ்ச்சியுடன் இறந்து கிடந்த இராணுவத்தினரின் ஹெல்மெட்டை தலையில் போட்டுக்கொண்டு ட்ரக்கின் கீழே இறந்து கிடந்த இராணுவ வீரர்களினது ஆயுதங்களை தேடி எடுத்துக்கொண்டான். இத் தாக்குதல் இரவு நேரமாதலால் எம்மையும் இராணுவத்தினரையும் வேறுபிரிக்க நாம் ஹெல்மெட்டைத் தான் குறியீடாகப் பாவித்தோம்.

எனவே ஹெல்மெட்டுடன் ஓர் உருவம் நகர்வதைக்கண்ட தம்பி உடனடியாக துப்பாக்கியை தயார்நிலைக்கு கொண்டு வந்து ''யாரது'' என்று வினவ அம்மான் ''அது நான் தம்பி" என்றவாறு தனது தவறை உணர்ந்து ஹெல்மெட்டைக் கழற்றினார். பொன்னம்மானை செல்லமாக கண்டித்தவாறு எல்லாரையும் சரிபார்க்குமாறு தம்பி பணிக்க ''அம்மானைக் காணவில்லை"" என்று விக்ரர் கத்தினான்.

விக்ரரும் புலேந்திரனும் அம்மான் நின்ற கடையின் மேல் ஏறினர். ''டேய் அம்மானுக்கு வெடி விழுந்திட்டுது" என்ற விக்ரரின் குரல் எங்கும் எதிரேலித்தது. எல்லோரும் அங்கே ஓட நான் வானை எடுத்து வந்தேன். வானில் அம்மானை ஏற்றும்போது அம்மானின் உடல் குளிர்ந்துவிட்டது.

லிங்கம் இறுதியாக இராணுவத்தினரின் தலையில் போட றெஜி ஆயுதங்களைப் பொறுக்கினான். வான் புறப்படத் தொடங்க மழையும் மெதுவாகத் தன் கரங்களால் வாழ்த்துத் தெரிவித்தது. எமக்கு செல்லக்கிளி அம்மானின் மரணத்திற்காக இடியும் மின்னலும் சேர்ந்து இறுதி வணக்கம் செலுத்த வான் எமது முகாம் நோக்கி பறந்தது.

- அன்புடன் கிட்டு

Saturday, July 18, 2009

தமிழர்கள் படிக்கும் மக்களாக இல்லாமல் பார்க்கும் கூட்டமாக மாறிவிட்டார்கள். திருமாவளவன் பேருரை.

ஆசிரியர் சுந்தர் வழிநடத்துகின்றார்
பெரியவர் இரங்கசாமி தலைமை உரை ஆற்றுகின்றார்.


பேருரை நிகழ்த்தும் திருமாவளவன்

தமிழர்கள் படிக்கும் மக்களாக இல்லாமல் பார்க்கும் கூட்டமாக மாறிவிட்டார்கள். எனவே ஊடகங்களே அவர்களை இக்கால் ஆதிக்கம் செய்கின்றன. தமிழ்ப் பண்பாட்டையும் நெறியையும் அறத்தையும் கெடுத்துச் சீரழிப்பதே இன்றைய ஊடகங்களின் பணியாக இருக்கின்றன. வெறும் திரைப்பட மாயைகளையே நம்பி வாழும் கூட்டமாக நம் மக்கள் இன்று ஆகி விட்டார்கள். இதனால் அவர்களுக்குத் தமிழ் தமிழர் தொடர்பான வரலாற்றுச் செய்திகள் எதுவும் தெரிவதில்லை. என்று மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் அவர்கள் கடந்த ௧௮.0௭.௨00௯ ஆம் நாள் மலேசியத் தமிழ் நெறிக் கழக தெலுக் பங்க்ளிமா கரங் கிளையின் ஏற்பாட்டில் நடந்த எழுச்சி உரை கூட்டத்தில் சொற்பொழிவாற்றினார் .
தொடர்ந்து அவர் பேசுகையில் மிக நீண்ட காலமாக தமிழர்கள் இவ்வுலகில் எல்லாவற்றையும் இழந்து நாதியற்றவர்களாகி நாடோடிகளாகி இருப்பதற்குக் காரணமே வெள்ளைத் தோல்களையும் நீல விழிகளையும் நம்பி அவற்றுக்கு அடிமையாகி போனதேயாகும். எவ்வளவு உயர்ந்த இனம். உலகமெல்லாம் நாகரித்தைப் பரப்பிய இனம் . உலகமெல்லாம் தம் மொழியைப் பரப்பிய இனம். இன்று எவ்வாறு இருக்கிறது. எக்கேல் என்கின்ற பிரித்தானிய பேராசிரியர் உலக மாந்தன் தோன்றிய இடம் இன்று இந்தியாவில் தெற்கில் இருக்கின்ற கடல் பகுதிதான் என்றார். ஒரு காலத்தில் அது நிலமாக இருந்தது . தமிழரிடையே இன்று இருக்கின்ற மிகப் பழமை வாய்ந்த ஒரு நூல் தொல்காப்பியம். இத்தொல்காப்பியத்தில் ஏற்கனவே புலவர்கள் இவ்வாறு சொல்லி இருக்கிறார்கள். கூறிச் சென்றுள்ளார்கள் . என்றெல்லாம் எழுதியிருக்கிறார். அந்த நூல் எழுத பட்டக் காலம் ௨௭௫0 . அதிலே "வட வேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம் என்று தொடக்கத்தில் எழுதப் பட்டிருக்கிறது. வடக்கே வேங்கட மலை என்றால் இன்றிருக்கிற திருப்பதியே . ஆனால் இன்று திருப்பதி தமிழர் கையில் இல்லை. தெற்கே குமரி என்பது குமரி மலையாகும். எனவே மிகப் பெரிய நிலப் பரப்பு தமிழர் ஆளுகையில் அன்று இருந்தது என்பதற்குத் தொல்காப்பியம் ஒரு சான்று. சிலப்பதிகாரத்தில்

பஃறு ளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்து
குமரிக் கோடும் கொடுங் கடல்
வடதிசை கங்கையும் இமயமுங் கொண்டு
தென்திசை யாண்ட தென்னவன் வாழி.


என ஒரு பாடல் வருகிறது. இப்பாடலில் மிகப் பெரிய நிலப் பரப்பு கடலுக்குள் மறைந்து போன வரலாற்றுச் செய்தி வெளிப்படையாகச் சொல்லப் பட்டுள்ளது. பின்னால் எக்கேல் சொன்ன செய்திக்கும் சிலப்பதிகாரப் பாடலுக்கும் பொருத்தம் இருப்பதை உணரலாம். இன்றுள்ள இந்தியாவுக்கு ஒரு காலத்தில் நாவலந்தீவு என்று பெயர். இந்தியா என்ற பெயரை வெள்ளைக் காரன்தான் சூட்டினான். இந்தியா முழுமைக்கும் தமிழர்களே வாழ்ந்திருந்தனர் என்பதற்குச் சிந்து வெளி நாகரிக வரலாறு ஒரு சான்று. ௫000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகரிகந்தான் சிந்து வெளி நாகரிகம். அங்குக் கண்டெடுக்கப் பட்ட எழுத்துக்கள் தமிழ் எழுத்துகள் என்பதை பின்னாளில் உறுதி செய்துள்ளனர். பாகிதானுக்கும் மேலே பலுச்சித்தான் என்ற நாடு இருக்கிறது . அங்கு பேசப் படும் பிராகுய் எனும் மொழி திராவிட மொழி என நிறுவி இருக்கிறார்கள். இன்னும் செல்ல செல்ல சுமேரிய நாகரிகத்திற்கும் தமிழர் நாகரிகத்திற்கும் தொடர்பிருப்பதாக ஈராசு பாதிரியார் அவர்கள் கூறியிருக்கிறார். எனவே உலகம் பரவிய தமிழனுக்கு இன்று நாடு இல்லை. சேர சோழ பாண்டியர் ஆண்டதாக வரலாறு கூறுகிறது. எங்கே போனார்கள் அந்த பேரரசர்கள் . எங்கே போயின அவர்கள் ஆண்ட நாடுகள். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த பெருமைகளும் சிறப்புகளும் சொத்துகளும் இன்று தமிழனிடம் இல்லை.


அவற்றை மீட்டெடுக்கும் அரிய முயற்சியைத்தான் தலைவர் பிரபாகரன் அவர்கள் செய்தார்கள். புறநானூற்றுக் கால போர் சூழலை விட மிகக் கொடியதான. இன்றைய போரில் வீரமிக்க நிலையில் போராடி வரலாற்று முத்திரையைப் பதித்தவர்கள் விடுதலைப் புலிகள். இன்று ஏதேதோ பிதற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் மீறி காலம் தகுந்த விடையை விரைவில் வழங்கும் என்று மேலும் விரிவான விளக்கங்களை வழங்கி மக்களுக்குத் தெளிவை ஏற்படுத்தினார். மலேசிய தமிழ் நெறிக் கழகத்தின் தெலுக் பங்க்ளிமா கிளையின் ஏற்பாட்டில் நிகழ்ந்த இந்நிகழ்விற்குத் தலைமை ஏற்று தகவுரை வழங்கியவர் பெரியவர் அரங்கசாமி யாவார். நினைவுச் சின்னம் என்னும் சிறந்த வரலாற்று புதினத்தை எழுதிய பெருமைக்குரியவர்தான் அரங்கசாமி. அவருடைய அந்நூலினை தமிழர் ஒவ்வொருவரும் படித்து தெளிவு பெற வேண்டும் . சயாமிய மரண தொடர்வண்டி பாதை வரலாற்றைக் கருவாக வைத்து எழுதப் பட்ட நூல்தான் நினைவுச் சின்னம். நிகழ்வினை வழி நடத்திய ஆசிரியரும் செயலரும் ஆகிய சுந்தரம் அவர்கள் தமிழன் தற்கால சூடும் சுரணையும் இல்லாது நடைப்பிணமாக இருக்கிறான் என்றும் பிணத்திற்குத்தான் சூடு இருக்காது அதுபோல தமிழீழ மக்களுக்கு மிகப் பெரிய கொடுமை நேர்ந்த நேரும் போது உணர்வற்றவனாக இருக்கிறானே என்ற வேதனை நமக்கு இருக்கிறது என்று உணர்ச்சிப பொங்கக் கூறினார். திரு கதிரவன், திரு செழியன், திரு பழனி முதலானோரின் கடும் உழைப்பின் பயனாக இவ்வட்டாரத்தில் விழிப்புணர்வு தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, July 14, 2009

மாண்புமிகு டத்தோ சிறி ச.சாமிவேலனாருடன் ஒரு சந்திப்பு

சாமிவேலனாருடன் திரு.பழ.கிருட்டிணன், திரு.பழனியாண்டி, திருமாவளவன்,
பெரியவர் இராமசாமி, திரு.வே.கணேசன்.

பழ.கிருட்டிணன், திரு.பத்துமலை, திருமாவளவன்,
சாமிவேலனார், பெரியவர் திருமுகம், பெரியவர் இராமசாமி

திரு.மன்னர், திருமாவளவன், சாமிவேலனார், திரு.எழிலன்


திரு.குமரன், திரு.தமிழ்வாணன், திருமாவளவன், சாமிவேலனார், திரு.பாலா


திரு.இளஞ்செழியன், திருமாவளவன், சாமிவேலனார், திரு.கனல்வீரன்

அண்மையில் மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் தேசியப் பொறுப்பாளர்கள் தேசியத் தலைவர் இரா. திருமாவளவன் அவர்களின் தலைமையில் டத்தோ சிறி ச.சாமிவேலனார் அவர்களுடன் ஒரு சந்திப்பினை நடத்தினர். தமிழ் தமிழர் நலன் தொடர்பாகவும் தமிழ் நெறிக் கழகப் பணி தொடர்பாகவும் பல்வேறு செய்திகள் சந்திப்பின் போது பேசப் பட்டன. தம்மால் ஆன உதவிகளை இயக்கத்திற்குச் செய்வதாக டத்தோ சிறி அவர்கள் உறுதியளித்தார், தம் கடந்த கால வரலாறுகளை நினைவு கூர்ந்து கூறியதுடன் அரசியல் வாதிகளை விட குமுகாயத் தொண்டர்கள் மிகவும் மன நிறைவுடையவர்கள். நிம்மதி மிக்கவர்கள் என்றார்.

இலங்கை அரசுக்கு ஆதரவாக மலேசியா ஐ.நாவில் செயல் படக் கூடாது என்ற தமது வேண்டுகோளை அறிந்த இங்குள்ள இலங்கை தூதர் தமமுடன் தொடர்பு கொண்டு எதிர்ப்பாக வாதிட்டதாகவும் அதற்குத் தாம் "நீங்கள் ஒரு சிங்களவனாக இருந்து பேசுகிறீகள் ஆனால் நான் தமிழனாக இருந்து பேசுகிறேன்" என்றதும் அவர் வாயடங்கிப் போனதாகக் கூறினார்.

எதிர்வரும் ௧௨ ஆம் மாதம் நெகிரி செம்பிலான் பகாவில் நடைபெற விருக்கும் மாணவர் பண்பாளர் விழாவிற்கு வருகை யளித்து நிகழ்வினைத் திறந்து வைக்கும் படி நடுவண் பொறுப்பாளர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று நிகழ்வுக்கு வருவதாக உறுதியளித்தார். ஒன்றரை மணி நேரம் மிகவும் மகிழ்வுடன் டத்தோ சிறி அவர்களுடனான கலந்துரையாடலை முடித்துக் கொண்டு பொறுப்பாளர்கள் இல்லம் திரும்பினர்.

Sunday, July 12, 2009

பாடாங் செராயில் இளந்தையர் பயிலரங்கு

மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் பாடங் செராய் வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில் வட்டார அளவில் இளந்தையர் பயிலரங்கு மிகக் சிறப்பாக நடத்தப் பட்டது. இந்நிகழ்வினை மாணவி நிலாவேணி தலைமையில் முழுக்க முழுக்க கிளையின் இளையோரே முன்னின்று வழிநடத்தினர். சுற்று வட்டாரத்தில் உள்ள இடைநிலைப் பள்ளிகளில் பயிலும் ௫0 மாணவர்கள் இப்பயிலரங்கில் கலந்து கொண்டு பயன் பெற்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Monday, July 6, 2009

மீண்டும் விடுதலைப் புலிகள் உயிர்த்தெழுவார்கள் இரா.திருமாவளவன் வீர முழக்கம்.

எழுச்சிக் கவிதை படிக்கும் செல்வன் கனலன்.தீர்மானங்களை வாசிக்கும் இளந்தமிழன்

உயிர்த்தெழுவோம் பாடலுக்கு எழுச்சி நடனமாடும் இந்திராணி நடனப் பள்ளி மாணவர்கள்.எரியும் தீப பிழம்பிலிருந்து பீறிட்டுச சிறகடித்துக் கிளம்பிய அக்கினிப் பறவையாய் மீண்டும் விடுதலைப் புலிகள் உயிர்த்தெழுவார்கள் என்று மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் கோலாலம்பூரில் நடைப்பெற்ற உயிர்த்தெழுவோம் நிகழ்வில் உணர்வுப் பொங்க உரை நிகழ்த்தினார். பெரும் தீப் பிழம்பாய் வெடித்துச் சிதறிய களத்தில் அகப்பட்ட அக்கினிப் பறவை தன்னைத்தான் மண்ணுக்குள் புதைந்து தற்காத்துக் கொண்டது. அழிந்து விட்டது; இனி வரவே வராது என்று எல்லாரும் எண்ணிக் கொண்டிருந்த வேளையில் இறுக்கமாக மூடியிருந்த சாம்பல் மேட்டைத் தகர்த்தெறிந்து பீறிட்டு வானை நோக்கிச சிறகடித்துக் கிளம்பியது. உலக வரலாற்றில் மிக முகாமையான விடுதலைப் போராட்ட வரலாறாக தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாறு அமைந்துள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது.

உலகத்திற்குப் பண்பாட்டைக் கற்றுக் கொடுத்தவன் தமிழன். நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்தவன் தமிழன். இன்று நாடற்றவனாகக் கிடக்கின்றான். நாதி இல்லாதவனாகக் கிடக்கின்றான். இன்று ஏற்பட்டிருக்கின்ற இந்தப் பின்னடைவு என்பது தமிழினத்திற்குப் புதியதல்ல. வரலாற்றில் எல்லாவற்றையும் இழந்து விட்ட நிலையில்தான் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நமக்குக் கிடைத்திராத தனிப் பெரும் தலைமகன் தவமகன் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடங்கப் பட்டது. எதிரியிடம் இருந்து தமிழ் மண்ணை மீட்டெடுக்க தமிழ் மக்களை மீட்டெடுக்க அதன் வாயிலாகத் தமிழை மீட்டெடுக்க மிகவும் வீரம் செறிந்த ஈகம் நிறைந்த போராட்டமாக இது உருவாகியது.

புறநானூற்றில் ஒரு காட்சி வரும். அன்று யானைப் படையே மிகவும் வலிவுள்ள படையாகும். ஒரு வீரனானவன் தன்னை எதிர்கொண்டு வருகின்ற பாரிய வலிவு பொருந்திய யானைப் படையை எதிர்க்கத் துணிகிறான். இவன் கையிலிருந்த கருவிகள் தீர்ந்து போகின்றன. இருப்பினும் விம்மியும் அஞ்சாமல் விழித்தக் கண்ணோடு தன்னை நோக்கி எய்தப் பட்ட அம்பினை மிக மகிழ்ச்சியோடு பற்றிக் கொண்டு யானைப் படையை வீழ்த்துகிறான். இந்தப் புறநானூற்று வீரத்தைப் பெருமை பட பேசும் தமிழ்க் கூட்டம் அன்றைய சூழலை விட மிக மிகக் கொடிய கொத்துக் குண்டுகளையும் நச்சுக் குண்டுகளையும் வெள்ளைப் பொசியக் குண்டுகளையும் நெருப்புக் குண்டுகளையும் ௨0 நாடுகளின் துணையோடு வீசி சண்டைப் போட்ட சிங்களப் பேரினவாதப் படையை எந்தத் துணையும் இன்றி துணிந்து எதிர்த்து நின்று திக்கு முக்காட வைத்த எந்தமிழர் புலிப் படையின் உண்மை வீரத்தை எண்ணி எண்ணிப் போற்ற வேண்டும்.

இந்த ஊரறிய உலகறிய இலங்கையிலே தமிழர்கள் சிங்கள அரசால் இந்தியச் சதியால் பச்சைப் படுகொலை செய்யப் பட்டிருக்கிறார்கள். இலக்கக் கணக்கானோர் கொத்தடிமைகளாக ஆக்கப் பட்டுள்ளனர். முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப் பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலும் ஏனைய இடங்களிலும் அடக்கு முறைகளுக்குள் உட்படுத்தப் பட்டுள்ளனர். சொந்த நாட்டில் வாழ முடியாத நிலையில் வெளிநாடுகளில் எதிலிகளாக்கப் பட்டுள்ளனர். இந்த உலகத்தில் நீதியும் நேர்மையும் அறமும் உண்மையும் நிலைக்கின்றது என்பது உண்மையானால் இந்தக் கொடுங் கோன்மைகளுக்கு விடை சொல்லியே ஆகவேண்டும் என்று மேலும் விளக்கப் படுத்தியதுடன் எம் தலைவன் சாக வில்லை எனும் தேனிசை செல்லப்பாவின் உள்ளத்தில் உரம் சேர்க்கும் தன்னம்பிக்கை ஊட்டும் பாடலைப் பாடிக் காட்டி எழுச்சியை ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சிக்கு உலகத் தமிழர் நிவாரண நிதி அறங்காவலர் பசுபதி தலைமை ஏற்று தலைமை உரை வழங்கினார்.

Saturday, July 4, 2009

உயிர்க்கு உயிர்மை


காற்றாகி மண்ணாகி
ஒளியு மாகி
கடலுக்குள் நீராகி
வெளியுமாகி
கூற்றாகி பகைவனுக்குத்
தீயுமாகி
ஊற்றாகி தமிழுக்குக்
காவலாகி
நேற்றாகி இருந்தஎம்
அடிமை போக்கை
நூற்றாக்கி ஒளிவாழ்வைத்
தந்தோன் நெஞ்சில்
ஆற்றாகி உயிர்ப்புக்கு
உயிர்மை தந்த
தற்கொடையே தமிழீழ
அறமே போற்றி!

இரா.திருமாவளவன்


இன்று ௫.0௭.௨00௯ ஆம் நாள் தமிழீழத் தற்கொடையாளர் நாள் . மீண்டும் உயிர்த்தெழுவோம் . எம் உயிரான இலச்சியத்தை அடைவோம்.

Wednesday, July 1, 2009

தமிழ் இலக்கியக் கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழாதமிழ் இலக்கியக் கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா எதிவரும் ௨0௪0 கடகத் திங்கள் ௩ ஆம் பக்கல் ( ஆங்கிலம் ௧௯.0௭.௨00௯ ஆம் நாள் ) இலக்கிய நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெறவிருக்கின்றது. தமிழ் மறைச் செம்மலும் தமிழ் அறிஞருமாகிய மு. மணிவெள்ளையன் அவர்களின் அரிய முயற்சியில் பல ஆண்டுகளாக தமிழ் அறிவும் உணர்வும் மிக்க தமிழர்களை உருவாக்கும் நோக்கில் தமிழியல் புலவர் பட்டத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தேர்ச்சி பெற்ற மாணவர்களை ஊக்கப் படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்த்தப் படும் நிகழ்ச்சியே பட்டமளிப்பு விழாவாகும்.