தொடர்பாளர்கள்

Sunday, May 23, 2010

எம்.ஆர்.ராதாவும் எஸ்விசேகரும், திருமாவும் குஷ்புவும் -இளமாறன்

எம்.ஆர்.ராதாவும் எஸ்விசேகரும், திருமாவும் குஷ்புவும்

திராவிட முன்னேற்றக் கழகம் 1949ல் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அதன் அசைவுகள், அதன் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் வாழ்வியல் கலாச்சார தன்மைகளோடு இணைந்தே வந்திருக்கிறது. அதற்கு அடிப்படை காரணம், திரைப்படம் எனும் ஊடகத்தை திராவிட முன்னேற்ற கழகம் தமது முழு ஆதிக்கத்திற்கு கொண்டு வந்ததே என்பதை நாம் அறிவோம்.
திரைப்பட காலங்களுக்கு முன்னர் தமிழ் மக்களின் பொழுதுபோக்கு என்ற நிலையிலிருந்து, அதை மாற்றி மக்களுக்கான அறிவுணர்ச்சி என்கின்ற ஒரு மேம்பட்ட தளத்திற்கு நாடகம் என்ற கலையை நகர்த்தி வந்தவர்கள் பலர் இருந்தாலும், எம்.ஆர்.ராதா இதுவரை யாராலும் மறுதலிக்கமுடியாத பகுத்தறிவு கொள்கைகளின் விளக்கமாக, விளக்காக இருப்பவர் என்பது யாவரும் அறிந்த ஒரு உண்மை. தந்தை பெரியாரின் திராவிட இயக்க கொள்கைகளை தமது இறுதி காலம் வரை இடைவிடாமல் கடைபிடித்த ஒரு ஆற்றல்வாய்ந்த சிந்தனையாளனாகவும், அரசால் அடக்கமுடியாத கலகக்காரனாகவும், நாடகத் தளத்தை அவர் நகர்த்தினார்.
மக்களை எழுச்சிக்குள்ளாக்குவது மட்டுமல்லாமல், அவர்களின் எண்ணங்களில் உள்ள மூட நம்பிக்கைகளை களைந்தெறிய அவர் ஆற்றிய பணி தமிழக வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத அத்தியாயமாக இன்றுவரை நீடித்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் அரசால் நாடகத்தின் எழுத்துருக்களை சமர்பித்து, அதிலிருக்கும் உரையாடல்களுக்கு ஒப்புதல் பெற வேண்டும் என்கிற சட்டம் எம்.ஆர்.ராதா அவர்களின் உரையாடல்களால் ஏற்பட்டதுதான் என்கின்ற கருத்து எல்லோராலுமே அங்கீகரிக்கப்படுகிறது.
எம்.ஆர்.ராதா திராவிட இயக்கத்தின் அசைக்க முடியாத பரப்புரையாளனாக தமது வாழ்நாளை நிறைவு செய்தார். தந்தை பெரியாரின் பெருந்தொண்டனாக அவர் இறுதி காலம்வரை பணியாற்றினார். எம்.ஆர்.ராதா அவர்களின் நூற்றாண்டுவிழா வருகிறது. அவரின் நூற்றாண்டு விழாவை திராவிட இயக்கங்கள் எவ்வாறு கொண்டாடப் போகிறது என்கின்ற எதிர்பார்ப்பு பொதுவாக பழங்கால திராவிட சிந்தனையாளர்களின் மனங்களில் இருந்து பொங்கி வருகிறது.
ஆனால் அது எந்த கால அளவை எட்டப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இன்றுவரை ரத்தக்கண்ணீர் திரைப்படத்தை பார்த்தவர்கள், ஏதோ புதிய திரைப்படத்தை பார்த்த உணர்வோடு இந்த காலத்திற்கும் பொருத்தமான கருத்தை அது தருவதாக நினைக்கிறார்கள். அது உண்மையும் கூட. கடவுள் மறுப்பு என்பதை கடந்து, மூடநம்பிக்கைக்கு எதிராக பெரும் முழக்கம் எழுப்பியவர், புயலாக களத்தில் நின்றவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள். ஆனால் நடிகவேள் எம்.ஆர்.ராதாவோடு நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் அவர்களை ஒப்புமைப்படுத்தி, எம்.ஆர்.ராதா அவர்களை சிறுமைப்படுத்திய பெருமையை தமிழக முதல்வர் தக்கவைத்துக் கொண்டார்.
எம்.ஆர்.ராதாவைப் போன்றே எஸ்.வி.சேகர் அவர்களும் நாடகங்கள் நடத்துவதாக புகழாரம் சூட்டிய முதல்வர், எஸ்.வி.சேகரை தி.மு.க.வில் சேர்ப்பதற்கான பணிகளில் மூழ்கிவிட்டார். ஒருவரை வேறொருவரோடு ஒப்புமைப்படுத்தும்போது சில அடிப்படை ஒற்றுமைகளாவது அவர்களுக்குள் இருக்கிறதா? என சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு சொற்பொழிவாளனாக இருந்தாலும், படைப்பாளியாக இருந்தாலும் இருக்க வேண்டும். ஆனால் நடிக்கிறார்கள் என்ற காரணத்திற்காக மட்டுமே இருவரையும் ஒரே நடிகராக பார்க்கக்கூடிய அந்த தன்மை உண்மையிலேயே திராவிட சிந்தனைக் கொண்டவர்களை களங்கடித்திருக்கும். ஆனாலும் அதை எப்படி வெளிக்காட்டுவது என்று தெரியாமல் அனைவரும் அமைதிக் காக்கலாம். இல்லையெனில் தமிழக முதல்வரின் அரசு அதிகாரத்தால் கிடைக்கும் பலன்கள் அற்றுப்போய்விடக் கூடாது என்பதற்காகவும்கூட அவர்கள் அடங்கி இருக்கலாம். ஆனால் நாம் எதிர்பார்த்த எதுவும் நிகழாத காரணத்தால்தான் இதை நாம் சுட்டிக்காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.
திராவிட இயக்கங்கள் குறித்து நாம் விவாதிப்பதற்கு முன்னால், இந்த திராவிட இயக்கங்கள் நிகழ்த்திய பல்வேறு களப்பணிகள் நம் கண்முன்னே விரிந்து கிடக்கிறது. குறிப்பாக தமிழருக்காக தமது இயக்கம் செயல்பட வேண்டும் என்றால், அது பார்ப்பனர்களுக்கு எதிரான கருத்துக்களமாக அமைய வேண்டும். தமிழர் என்றால் பார்ப்பனர்களும், நானும் தமிழ் பேசுபவன்தான் ஆகையால், நானும் தமிழன் என்று சொல்லிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது என்கிற காரணத்தினால், திராவிடம் என்ற வார்த்தை கையாளப்பட்டு, அது பார்ப்பனர்களை தனிமைப்படுத்த துணைபுரியும் என்ற வாதம் ஒருவேளை ஏற்றுக் கொள்ளப்படுமேயானால் இப்போது பார்ப்பனர்களே நேரிடையாக திராவிட இயக்கங்களுக்குள் ஊடுருவுவதை எப்படி தடுக்கப் போகிறார்கள் என்பதை திராவிட இயக்கத் தளபதிகள் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.
எஸ்.வி.சேகர் என்ற ஒரு தனி மனிதனைக் குறித்து எவ்வித முரண்பாடும் இல்லை. ஆனால் எஸ்.வி.சேகர் என்பவர் பார்ப்பன சங்கங்களின் பங்காளி என்பதுதான் நமக்குள் இருக்கும் முரண்பாடு. அதோடு இல்லாமல் தமிழ் மக்களின் இன அடையாளங்களை ஒன்றுபடுத்த முடியாமல், சாதிய கோட்பாட்டால் பிளவுபடுத்தி, அதை இன்றுவரை கட்டிக்காக்க முனைப்புக் காட்டும் சங்கரா மடத்தின் தலைமை பூசாரி சங்கராச்சாரியாரின் செயலாளராக செயல்படுபவர்தான் எஸ்.வி.சேகர் என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். தமக்கு மைலாப்பூர் சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டவுடன், அவர் சென்று ஆசி பெற்ற இடம் பார்ப்பனிய சங்கத்தின் தலைவரிடம்தான். அதோடு மட்டும் அல்ல. சட்டமன்றத்திலே தனது முதல் உரையை துவக்கும்போது எதெல்லாம் மூடநம்பிக்கை என்று திராவிட கட்சிகளால் சுட்டிக்காட்டப்படுகிறதோ, அதெல்லாம் தமக்கு இருக்கிறது என்றுகூறி பகுத்தறிவுக்கு பாடைக் கட்டியவர்தான் எஸ்.வி.சேகர். அந்த அடிப்படையிலே நான் வெற்றிப் பெற்றேன் என்று திராவிட கொள்கையை நக்கல் அடித்த ஒரு நல்ல நடிகர் எஸ்.வி.சேகர்.
இவ்வாறு எந்த நிலையிலும் ஒட்டாத, எண்ணெயும் தண்ணீரும் போன்ற முரண்பாட்டுத் தன்மைக் கொண்ட இருவரை ஒப்பிட்டு பேசும் அளவிற்கு தமிழக முதல்வர் எவ்வாறு தடம் மாறினார் என்பது நமக்கு விளங்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தில் வி.பி.ராமன் என்ற பார்ப்பனர் இணைந்தபோது, திராவிட முன்னேற்றக்கழகம் பிளவுபட்டு சம்பத் வெளியேறி, தனி கட்சிக் கண்ட வரலாற்றை எல்லாம் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஜெயலலிதா என்ற பார்ப்பனர் தலைமையேற்று, தமது பார்ப்பனிய ஆளுமையை திராவிட தன்மைக்கு எதிராக நிறுத்தி, சட்டமன்றத்திலே நான் பார்ப்பாத்தி. என்னை யாரும் அசைக்க முடியாது என்று கூறியதை மனமுவந்து ஏற்றுக் கொண்டு அம்மையாருக்கு சமூக நீதி காத்த வீராங்கணை என்ற பட்டத்தை வாரி வழங்கிய வரலாற்று செய்திகள் எல்லாம் திராவிட இயக்க வழித் தடங்களில் சிதைவுகளாக இன்றுவரை சித்தரிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆக, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக திராவிடம் தேய்ந்து பார்ப்பனியமாகிக் கொண்டிருக்கிறது.
இது, இந்த நாட்டை எங்கு கொண்டுபோய் சேர்க்கும் என்பது விளங்காத புதிராக உளுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் திராவிட முன்னேற்ற கழகம் என்னவோ புதிது புதிதாக கொள்கை முரசங்களை தமது கட்சியிலே இணைத்துக் கொண்டு, திராவிட கொள்கைக்கு ஆற்றல் வாய்ந்த புதிய தத்துவத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையிலே தான் தமிழ்நாடு முழுக்க ஒரு கருத்தியலுக்காக எதிர்க்கப்பட்ட குஷ்பு, திராவிட முன்னேற்ற கழக உறுப்பினராகி தமது பேராற்றல் மிக்க பெரும்பணியால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூணாக நிற்கப் போகிறார்.
அவரின் கொள்கை பரப்புரையால் திராவிட முன்னேற்றக்கழகம் புத்துணர்ச்சி அடையப் போகிறது, புதுப்பொலிவு காணப் போகிறது. ஏனென்றால் அவர் பச்சை தமிழர். தமிழரின் வாழ்வுக்காக குரல் கொடுக்கக்கூடியவர். அவரின் ஒரு கருத்துக்காக தமிழ்நாடெங்கும் கொந்தளிப்போடு இயக்கங்கள் கண்ட விடுதலை சிறுத்தைகள் இனிமேல் குஷ்புவின் மேடையில் அமர்ந்து, அவர் கால் மேல் கால் போட்டுக் கொண்டிருந்தாலும்கூட, கொள்கை விளக்கம் குஷ்பு என்று வாழ்த்தித்தான் பேச வேண்டும். காரணம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் அவர்கள் இருக்கிறார்கள்.
இதை சொன்னால்கூட, விடுதலை சிறுத்தைகளைத்தான் இவர்கள் திட்டுகிறார்கள், அல்லது விமர்சிக்கிறார்கள் என்றெல்லாம் பின்னூட்டங்கள் வெளிவரும். உள்ளபடி இவர்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும். நாம் பதிவு செய்திருக்கும் கருத்துக்களிலிருந்து ஏதாவது மாறுதல் இருக்குமேயானால் இவர்கள் மறுப்பு சொல்லட்டும்.
இனிமேல் குஷ்புவும் விடுதலை சிறுத்தைகளும் ஒரே மேடையில் பரப்புரை மேற்கொள்வார்களா? எப்படி இது சாத்தியப்படும் என்ற சிந்தனையெல்லாம் தமிழர்களுக்கு வேண்டாம். காரணம் காங்கிரசை ஒழிக்காமல் வேறு பணி இல்லை என்று வீர வசனம் பேசிய களங்கள்கூட மறக்கடிக்கப்பட்டு, காங்கிரசின் கைப்பற்றி அன்னை சோனியாவிடம் மண்டியிட்ட வரலாற்றையும் தாண்டி, ராசபக்சேவின் பக்கத்தில் நின்று பயபக்தியோடு வலம்வந்த நிகழ்வுகள் எல்லாம் நீடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆக, ஒன்று நமக்கு தெளிவாகப் புரிகிறது. இங்கு கொள்கை, கோட்பாடு, தத்துவம் என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது. வாக்கு, சட்டமன்றம், மந்திரிப் பதவி என்கிற மனப்பக்குவம் செழித்தோங்கி வளர்ந்து விட்டது. மக்கள் தொண்டு என்பது இப்போது ஏதோ ஒரு விமர்சனத்திற்குரிய இல்லையென்றால் தமது வாழ்க்கையில் ஒரு அம்சமாக மாறிவிட்டதே ஒழிய, முழுநேர மக்கள் தொண்டு என்பதெல்லாம் நம் எதிர்பார்த்தால் நாம் ஏமாந்துதான் போவோம்.
திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சி இதைத்தான் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. திராவிட பாரம்பரியம் இதைத்தான் நமக்கு அழுத்தமாக நினைவூட்டுகிறது. எந்த தமிழ் வாழ, இந்த பார்ப்பனர்கள் ஊரு செய்வார்கள் என்பதற்காக திராவிடம் என்ற பெயரை இதுவரை மாற்றாமல் இருக்கிறார்களோ, அந்த பார்ப்பனர்கள் புறவாயில் வழியாக அல்ல, நடு வாயில் வழியாகவே சிகப்பு கம்பளம் சிரித்து வரவேற்கப்படுகிறார்கள் என்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதன் வெளிபாடுதான் செம்மொழி மாநாட்டிற்கு தினமலர், தினமணி பார்ப்பனிய ஏடுகள் பெரும் தொண்டாற்றிக் கொண்டிருப்பதை காண முடிகிறது.
ஒன்று, நமக்கு தெளிவாக புரிந்துவிட்டது. திராவிடம் என்பது வீழ்த்தப்பட்டுவிட்டது. அது, பார்ப்பனியம் என்கின்ற பெரும் ஆற்றலோடு ஓங்கி வளரத் தொடங்கிவிட்டது. எந்த காரணத்திற்காக இந்த இயக்கம் தொடங்கப்பட்டதோ, அந்த காரணம் குழி தோண்டி புதைக்கப்பட்டுவிட்டது. இனி எந்த காரணத்திற்காக இவர்கள் இயக்கம் நடத்தப்போகிறார்கள் என்பது புரியவில்லை.
செம்மொழி மாநாட்டை சீரோடு நடத்துவதற்கு சிறந்ததொரு பாட்டை இயற்றிய முத்தமிழ் அறிஞர், அதை இசையமைக்க ஒரு மலையாள இசையமைப்பாளரை தேர்வு செய்ததில் இருந்தே செம்மொழியின் நேர்த்தி, அதன் வளர்ச்சி எதை நோக்கி நகர்கிறது என்பதை பார்வையாளர்கள் எல்லோரும் நன்றாக புரிந்து கொண்டிருப்பார்கள்.
நாளை ஒரு இந்தி நடிகர் தி.மு.க.வில் உறுப்பினராக விரும்பினால், விருப்பத்தோடு அவர் ஏற்றுக் கொள்ளப்படுவார். காரணம், தி.மு.க. என்பது தமிழ் தேசிய அடையாளத்திலிருந்து இந்திய தேசிய அடையாளத்தை முழுமையாக அணிந்து கொண்டது. இதிலிருந்து விலக தி.மு.க.வாலும் முடியாது, இதை தவிர்க்க காங்கிரசாலும் முடியாது.
இப்போதெல்லாம் திராவிடம் என்பது மருவி, இந்திய தேசியம் பேச தி.மு.க. தயாராகி விட்டது. டெல்லியிலே காங்கிரஸ் கொள்கை எதுவோ அதுதான் தமிழ்நாட்டில் தி.மு.க. கொள்கை. இனி தி.மு.க.விற்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்பதற்கு பதிலாக தி.மு.காங்கிரஸ் என்று பெயர் வைக்கலாம். அந்த அளவிற்கு திராவிட இயக்கம் தமது வீழ்ச்சியை நோக்கி நாலுக்கால் பாய்ச்சலில் ஓடுகிறது.
– மீனகம் இளமாறன்

Wednesday, May 19, 2010

கருணாநிதியின் இயற்கையான குரூர குணம் - பழ. நெடுமாறன்

கருணாநிதியின் இயற்கையான குரூர குணம் -


''தானும் செய்யார் பிறரையும் செய்ய விடார்'' என்பது ஆன்றோர் வாக்கு. இதற்கு முழுமையான எடுத்துக் காட்டாகத் திகழ்பவர் முதலமைச்சர் கருணாநிதி ஆவார்.ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் அவர்களுக்கு உதவியாக எதுவும் செய்வதற்கு இவர் துணிவதில்லை. வேறு யாரேனுேம் செய்ய முன்வந்தா லும் அதை எப்படியாவது தடுப்பதற்கு முழுமுயற்சி செய்வார்.இலங்கையின் நாடாளுமன்றத் தில் அங்கம் வகிக்கும் தமிழ் உறுப்பினர் கள் இந்தியா வந்து பிரதமரையும் மற்றவர்களையும் சந்திப்பதற்குப் பெரு முயற்சி செய்தார்கள். 2006ஆம் ஆண் டில் இதற்கான முயற்சி நடைபெற்ற போது முதலில் அவர்கள் பிரதமரைச் சந்திக்க உதவும்படி தமிழக முதல்வர் கருணாநிதிக்கு வேண்டுகோள் கடிதம் எழுதி அனுப்பினார்கள். ஆனால் அவரி டமிருந்து எந்தப் பதிலும் கிடைக்க வில்லை. அவரை நேரில் சந்தித்துப் பேசி னால் ஒருவேளை ஏற்பாடு செய்துதரக் கூடும் என்ற நம்பிக்கையில் சென் னைக்கு வந்து முதல்வரைச் சந்திக்க பல முயற்சிகள் செய்தார்கள். எந்த முயற்சிகளுக்கும் பயனில்லை.இதற்கிடையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் டில்லி சென்று பிரதமரிடம் முறையிட்டார். சிங்கள அதிபரும் பிரதமரும் மற்ற அதிகாரிகளும் நினைத்தபோதெல்லாம் தில்லி வந்து இந்தியப் பிரதமரைச் சந்திக்க முடிகிறது. ஆனால் இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாண்டு காலமாக எவ்வளவோ முயற்சி செய்தும் சந்திக்க முடியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி சந்திப்புக்கு நேரம் ஒதுக்கும்படி வேண்டிக்கொண் டார். அவருடைய முயற்சியின் விளை வாக பிரதமர் மன்மோகன்சிங் ஈழ நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க ஒப்புக்கொண்டார்.தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் களின் குழுவுக்குச் செய்தி தெரிவிக்கப் பட்டு அவர்களும் புறப்பட்டு டில்லி வந் தார்கள். 1990ஆம் ஆண்டுக்குப் பிறகு 16 ஆண்டுகாலமாக ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளைச் சந்திக்க மறுத்துவந்த இந்தியப் பிரதமர் இறுதியாக ஒப்புக் கொண்டது அனைவருக்கும் மகிழ்ச் சியை அளித்தது. பொறுப்பாரா கருணாநிதி? தன்னை மீறி இவர்கள் செல்வதும் அங்கு பிரதமரைச் சந்திக்க இருப்பதும் கண்டு எரிச்சலடைந்தார். அதுவும் வைகோவின் முயற்சியினால் இச்சந்திப்பு நடைபெறுவது அவருக்குக் கொதிப் புணர்வை ஏற்படுத்திற்று. டில்லியுடன் தொடர்புகொண்டு அவர் பேசியதின் விளைவாக பிரதமர் சந்திப்பு இரத்து செய்யப்பட்டது. ஆவலுடன் டில்லி சென்ற ஈழத்தமிழர் பிரதிநிதிகள் சில அதிகாரிகளை மட்டுமே சந்தித்துவிட்டு திரும்ப நேர்ந்தது.இந்நிகழ்ச்சி தமிழ்நாட்டுத் தமிழர் களிடையே மட்டுமல்ல, உலகத் தமிழரி டையே பெரும் எதிர்ப்பை உருவாக்கி விட்டது. முதல்வர் கருணாநிதிக்கு உல கெங்குமிருந்து மிகக்கடுமையான கண் டன கடிதங்கள் வந்துகுவிந்தன. இதைக் கண்ட அவர் மிரண்டார். அதை எப்படி சரிசெய்வது எனத் திண்டாடினார்.அதற்குள் தில்லி சென்ற தமிழ்ப் பிரதிநிதிகள் தங்கள் நாட்டிற்குத் திரும் பிச் சென்றுவிட்டனர். அவர்களுக்கு செய்தி அனுப்பி மீண்டும் வரவழைப்ப தற்கு படாதபாடு பட்டார். தமிழகமுதல் வரின் அழைப்பை ஏற்க மறுப்பது பண்பாடு அல்ல என்ற காரணத்தினால் அவர்கள் திரும்ப வந்தனர். வந்தவர்களி டம் அவர்களின் முந்திய வருகை குறித்து தனக்கு ஒன்றுமே தெரியாது எனப் பசப்பினார். அவருக்கு எழுதப் பட்ட கடிதங்கள் எதுவுமே கிடைக்க வில்லை என்றும் கூறினார்.தமிழ்ப் பிரதிநிதிகள் மனதிற்குள் சிரித்துக்கொண்டனர். ஏனென்றால் முதல்வருக்கு அனுப்பப்பட்ட வேண்டு கோள் கடிதங்களை ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே நேரில் கொண்டுபோய் முதலமைச்சரின் செயலாளரிடம் கொடுத் தார். மேலும் மின்னஞ்சல் மூலமும் தொலைநகலி மூலமும் அவருக்கு அந்தக் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந் தன. எனவே எந்தக் கடிதமும் கிடைக்க வில்லை என்று அவர் சொல்வதில் கொஞ்சமும் உண்மையில்லை என்பது அவர்களுக்குப் புரிந்தாலும் நனிநாகரிகம் கருதி வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.பிறகு பிரதமரைச் சந்திக்க இவரே ஏற்பாடு செய்து டில்லிக்கு அனுப்பி வைத்தார் என்பது சுவையான தனிக் கதை.யாழ் உதவிப் பொருட்கள் அனுப்பத் தடையாழ்ப்பாண மக்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்பாமல் சிங்கள அரசு தடை செய்தபோது, பட்டினியால் வாடிய அந்த மக்களுக்கு உதவுவதற் காகத் தமிழகத்தில் உணவு, மருந்து மற்றும் பொருட்கள் மக்களிடம் திரட்டப் பட்டன. இரண்டு மாத காலத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்களை மக்கள் அள்ளி அள்ளிக் கொடுத்தார்கள். இந்தப் பொருட்களை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் யாழ் மக்களுக்கு அனுப்பிவைக்க முடிவு செய்தோம். செஞ்சிலுவைச் சங்கமும் அவ்வாறே செய்வதற்கு முன்வந்தது. ஆனால் வெளிநாடு ஒன்றிற்கு அனுப்ப வேண்டியிருப்பதால் இந்திய அரசின் அனுமதியைப் பெறவேண்டியிருந்தது. செஞ்சிலுவைச் சங்கமும் இந்திய அரசுக்கு வேண்டுகோள் கடிதம் அனுப் பிற்று. பல நினைவூட்டுக் கடிதங்கள் அனுப்பிய பிறகும் பதில் எதுவும் இல்லை.இதற்குப் பிறகு தமிழக முதல் வருக்கும் இந்திய பிரதமருக்கும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் வேண்டுகோள் தந்திகள் அனுப்பப்பட்டன. பல போராட் டங்கள் நடத்தப்பட்டன. எதற்கும் பயனில்லை.எனவே இராமேசுவரம், நாகப் பட்டினம் ஆகிய இடங்களில் இருந்து இப்பொருட்களைப் படகுகள் மூலம் அனுப்புவதற்கான போராட்டமும் நடத் தப்பட்டது. அந்தப் போராட்டத்தையும் தடைசெய்து, போராட்ட வீரர்களையும் கருணாநிதி கைதுசெய்தார்.எல்லா வகையான முயற்சிகளுக் கும் எவ்விதப் பயனும் இல்லாத நிலை மையில் இதற்காக சாகும்வரை உண்ணா நிலைப் போராட்டத்தை நான் மேற் கொண்டேன். அனைத்துக் கட்சித் தலை வர்களும் மக்களும் இந்தப் போராட்டத் திற்கு ஆதரவாகக் கிளர்ந்தெழுந்தார்கள். இதற்குப் பின்னால் முதல்வர் கருணாநிதி மறுசிந்தனை செய்யத் தொடங்கினார். அவசரஅவசரமாக 13-09-2007 அன்று எனக்கு அவர் கைப்பட வேண்டுகோள் ஒன்றை எழுதி உயர் காவல் அதிகாரி கள் மூலம் கொடுத்தனுப்பினார். அக் கடிதத்தில் இந்தப் பொருட்களை யாழ் அனுப்புவதற்கான முயற்சிகளில் தாமும் ஈடுபடுவதாகவும் உண்ணாவிரதத்தை நிறுத்துமாறும் வேண்டிக்கொண்டார். மறுநாள் மருத்துவர் ச. இராமதாசு அவர் கள் உண்ணாவிரதப் பந்தலில் என்னை நேரில் சந்தித்து முதலமைச்சரின் உறுதி மொழியை மீண்டும் கூறி போராட் டத்தை நிறுத்தும்படி வேண்டிக்கொண் டார். அதற்கிணங்க நான்கு நாள்கள் கழித்து உண்ணாவிரதப் போராட்டத்தை நான் நிறுத்தினேன். அதற்குப் பிறகு இப்பொருட்களை அனுப்புவது குறித்துப் பேசுவதற்காக முதலமைச்சரைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டு நான் எழுதிய கடிதத்திற்கு இன்றுவரை எந்தப் பதிலையும் அவர் அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.பட்டினி கிடக்கும் யாழ் மக்க ளுக்கு அவரும் உதவ முன்வரவில்லை. நாங்கள் செய்த உதவியையும் அவர் தடுத்தார். இது அவரது இயற்கையான குரூரமான குணமாகும்.தமிழக மக்கள் தங்களின் சகோ தர ஈழத்தமிழர்களின் பசிப்பிணியைப் போக்க அன்போடு திரட்டித் தந்த ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பெரு மானமுள்ள உணவுப் பொருட்களும் மருந்துகளும் வீணாகிவிட்டன. இதற்கு முழுமையான பொறுப்பாளி கருணா நிதியே ஆவார்.அன்னை பார்வதிக்கு இழைக்கப்பட்ட அநீதிதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பெற்றெடுத்த அன்னை திருமதி பார்வதி அம்மையார் தன் கணவரை இழந்து சிங்கள இராணு வச் சிறையில் பலமாத காலம் கொடுமை களுக்கு ஆளாகி உடல் நலிவுற்ற நிலையில் தமிழகம் வந்து சிசிச்சை பெற அவரை அழைத்தோம். அவரும் அதை ஏற்றுக்கொண்டு கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி விமானத்தில் சென்னை வந்த போது அதே விமானத்தில் அவர் திருப்பியனுப்பப்பட்ட கொடுமை நிகழ்ந் தது. விமான நிலையத்தில் அவரை வரவேற்று அழைக்கச் சென்ற சகோதரர் வைகோ அவர்களையும் என்னையும் விமான நிலையத்திற்குள்ளேயே அனும திக்க கருணாநிதியின் காவல் படை மறுத்தது. பெரும் போராட்டத்திற்கிடை யேதான் நாங்கள் உள்ளே செல்ல முடிந்தது.எண்பது வயதைத் தாண்டிய அந்த மூதாட்டியை இரக்கமேயில்லாமல் திருப்பியனுப்பிய அரக்கத்தனமான செயலுக்குப் பொறுப்பாளி யார்? இந்தக் கேள்வியை உலகத் தமிழர்கள் எழுப்பிக் கொந்தளித்தார்கள். அதைக் கண்டவுடன் வழக்கம்போல கருணாநிதி பல்டி அடித்தார். மாறி மாறி முன்னுக்குப்பின் முரணாக பொருந்தாத காரணங்களை கூறினார்.விடிந்து பத்திரிகைகளைப் பார்த்த பிறகே தனக்கு செய்தி தெரியவந்தது என்று சட்டமன்றத்திலேயே கூசாமல் பொய் சொன்னார். விடிந்துதான் இவருக்குச் செய்தி தெரியவந்தது என்று சொன்னால் இரவு 10 மணிக்கு எங்களை விமான நிலையத் தில் அனுமதிக்க இவரது காவல்படை மறுத்தது ஏன்? இவரது உத்தரவு இல்லா மல் அந்த உயர் காவல் அதிகாரிகள் எங்களைத் தடுத்திருக்க மாட்டார்கள். பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாக சொல்லவேண்டும். '2003ஆம் ஆண்டில் செல்வி செயலலிதா முதலமைச்சராக இருந்த போது பிரபாகரனின் பெற்றோர்களை இந்தியாவிற்குள் மீண்டும் அனுமதிக்கக் கூடாதென அவர் எழுதிய கடிதத்தின் விளைவாகக் கருப்புப் பட்டியலில் பார் வதி அம்மையார் பெயர் சேர்க்கப்பட்டு விட்டது. ஆகவேதான் அவர் திருப்பி யனுப்பப்பட்டார்' என்று இன்னொரு காரணத்தையும் கூறினார்.இது உண்மை என்று சொன்னால் இந்திய அரசின் கருப்புப் பட்டியல் உலகமுழுவதும் இருக்கும் இந்திய தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுவிடும். மலேசியாவில் உள்ள இந்தியத் தூதர் எப்படி பார்வதி அம்மையாருக்கு ஆறு மாதத்திற்கு விசா கொடுத்தார்? அவர் தவறாக விசா கொடுத்திருந்தால் அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? ஆக இந்த இரண்டாவது பொய்யும் அம்பலமாகிவிட்டது.அந்த அம்மையார் வருகிற விவரம் தெரிந்தபிறகு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களுக்கு முதலமைச்சர் மூலம் செய்தி தெரிவிக்கப் பட்டு அவர் ஆணையின்படியே பார் வதி அம்மையார் திருப்பி அனுப்பப் பட்டார் என்பதுதான் உண்மை. கருணாநிதியின் இந்த அடாத செயல் உலகெங்கும் தமிழர்கள் மத்தி யில் ஏற்படுத்திவிட்ட கொதிப்புணர் வைக் கண்டபிறகு வழக்கம் போல பல்டி அடித்தார்.பார்வதி அம்மையார் மீண்டும் தமிழகம் வரவிரும்பினால் தான் இந்திய அரசுக்கு கடிதம் எழுதி அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறுகிறார். பார்வதி அம்மையார் என்ன பந்தா? இங்கிருந்து மலேசியாவிற்கும் மீண்டும் இங்குமாக உதைத்து விளையாடுவதற்கு?உலகத் தமிழர்களால் மதித்துப் போற்றப்படும் ஒரு தாயை தமிழ் மண் ணில் அடியெடுத்துவைத்து நுழைய மறுத்ததோடு ஈவு இரக்கமில்லாமல் அந்த மூதாட்டியை ஓய்வெடுக்கக்கூட விடாமல் அதே விமானத்தில் திருப்பி அனுப்பிய கருணாநிதியையும் இந்திய அரசையும் தமிழர்கள் ஒரு போதும் மன்னிக்கப்போவதில்லை.எந்தப் பிரச்சினையாய் இருந்தாலும் தன்னலத்துடனும் தனது பதவியைக் காக்கும் நோக்கத்துடனும் மட்டுமே செயல்பட்டு எதிராகச் செயல்படுவது பிறகு அதற்கு எதிர்ப்புக் கிளம்பியவுடன் பல்டி அடித்துப் பசப்புவது இது அவருக்கு ஆகிவந்த கலை. தமிழர்கள் அவரைப் பற்றி நன்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள். அவரது ஏமாற்று நாடகங்கள் ஒருபோதும் பலிக்கப்போவதில்லை.எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடுகொள்ளாத கொள்ளாது உலகு.'உலகத்தார் இகழாத நெறிகளை ஆராய்ந்து செயலாற்ற வேண்டும். ஒரு தலைவனின் தகைமைக்குப் பொருந்தாத செயலை உலகம் ஒப்புக்கொள்ளாது' என்றார் வள்ளுவப் பெருந்தகை.குறளோவியம் தீட்டியவருக்கு இந்த உண்மை புரியாமல் போனது ஏன்?

Wednesday, May 12, 2010

பார்வதியம்மாள் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவார்: சிவாஜிலிங்கம்

பார்வதியம்மாள் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவார்:
செய்திகள்
மலேசியாவிலிருந்து கொழும்பை வந்தடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் நேற்று யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தார். இவரை முன்னாள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அம்புலன்ஸ் வண்டி மூலம் நேற்றுக்காலை கொழும்பிலிருந்து அழைத்துச் செனறார்.
இவரை வழியில் வவுனியாவில் சந்தித்த போது, யாழ்ப்பாணத்திற்குச் செல்கின்ற பார்வதியம்மாள் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார் என சிவாஜிலிங்கம் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
கடந்த பத்து வருடங்களாக பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருப்பதனால், பார்வதியம்மாளை வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெறவேண்டியவராக இருக்கின்றார்.
அவருக்கு வீடு இருந்தால் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெறலாம். ஆனால், இப்போது வீடு இல்லாத காரணத்தினால் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்போகிறோம்.
அவருக்கு தினசரி வைத்தியருடைய கண்காணிப்பும் மருத்துவ பராமரிப்பும் தேவையாக இருக்கின்றது. வைத்தியசாலையில் அனுமதித்தால் அவரது நெருங்கிய உறவினர்கள் பலரும் வந்து அவரைப் பார்க்கவும் பராமரிக்கவும் முடியும்.
இந்திய அரசு அவருக்கு நிபந்தனையின் அடிப்படையிலேயே கிகிச்சையளிக்க முன்வந்துள்ளது. ஆயினும் அவரது குடும்பத்தினர் நிபந்தனையின் அடிப்படையில் அவர் சிகிச்சை பெறுவதையும் தொடர்ந்தும் அவரை ஓர் அரசியல் சர்ச்சைக்குள் இழுக்கப்படுவதையும் விரும்பவில்லை. இதனாலேயே அவர் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்கின்றார்.
நிபந்தனைகள் எதுவும் இல்லாத நிலையில் அவருக்கு சிகிச்சையளிப்பதற்கு இந்திய அரசு முன்வருமாக இருந்தால் பார்வதியம்மாளின் குடும்பத்தினர் அவரை இந்தியாவுக்கு அனுப்பி சிகிச்சை பெறச் செய்வார்கள்.
அத்தகைய ஒரு நிலைமையை பரிசீலனை செய்வதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றார்கள். இருப்பினும் பார்வதியம்மாளின் இந்திய பயணம் அங்கு ஓர் அரசியல் சர்ச்சையாக போய்க்கொண்டிருப்பதனால் அவரும் அவரது குடும்பத்தினரும் அவர் தமது சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்வதையே பெரிதும் விரும்புகின்றார்கள்.

வரலாற்றில் ஏற்பட்டுள்ள அழிக்க முடியாத தீராக்கறையை மாற்றிவிடலாம் என எண்ணிய அரசியல் பிழைப்புவாதிகளுக்கு சரியான சவுக்கடியாகும்


அன்னை பார்வதி இலங்கைக்கு திரும்பி சென்றது அவருக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் தமக்கு வரலாற்றில் ஏற்பட்டுள்ள அழிக்க முடியாத தீராக்கறையை மாற்றிவிடலாம் என எண்ணிய அரசியல் பிழைப்புவாதிகளுக்கு சரியான சவுக்கடியாகும் என்று இயக்குநர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஆறு மாத விசா பெற்று சென்னை வந்த தமிழ்த் தேசிய தலைவர் அண்ணன் பிரபாகரன் அவர்களின் தாயார் பெருமாட்டி பார்வதியம்மாள் அவர்களை மாநில போலீசின் துணையோடு மத்திய அதிகாரிகள் கடந்த மாதம் திருப்பி அனுப்பி தீராக் களங்கத்தை உருவாக்கினர்.
ஈவிரக்கமில்லாத இந்தப் போக்கு உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்த இப்போது பார்வதியம்மாளுக்கு அரசு செலவில் அரசு சொல்கிற மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற வேண்டும். சிகிச்சைக்காலம் முடிந்ததும் வந்த இடத்திற்கே திரும்பிச் சென்று விட வேண்டும். தடை செய்யப்பட்ட அமைப்பின் ஆதரவாளர்களோ, அரசியல் வாதிகளையோ சந்திக்கக் கூடாது. என்கிற நிபந்தனைகளின் பேரில் விசா வழங்க இந்தியா முன் வந்திருப்பதாக தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் கருணாநிதியும், துணை முதல்வர் ஸ்டாலினும் அறிவித்துள்ளனர்..
சிகிச்சைக்கு உரிய அனுமதியுடன் வந்தவரை அவமரியாதை செய்து திருப்பி அனுப்பியவர்கள் இப்போது மனிதாபிமான நிபந்தனைகள் என்னும் பெயரில் கடுமையான நிபந்தனைகளை விதித்து தமிழ்த் தாயை அவமதித்து விட்டார்கள்
மனிதாபிமானம் என்பது விதிகளுக்கோ, விதிமுறைகளுக்கோ அப்பாற்பட்டது. சட்ட விதிகளுக்குட்பட்டும் அதைச் செய்யலாம். என்கிற நிலையில் எண்பது வயதில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு நிலையான நினைவுகள் இன்றி இருக்கும் தாயை ஒரு பயங்கரவாதி போல சித்தரித்து ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தையுமே ஏனைய இனங்கள் எள்ளி நகையாடும் விதமாக நடந்து கொண்டன மத்திய மாநில அரசுகள்.சிகிச்சைக்கு வந்த எம் தாயாரை வயதான முதியவர் என்றும் பார்க்காமல் திருப்பி அனுப்பி அலைக்கழித்த மத்திய மாநில அரசுகள் இன்று ஒரு மாதம் கழித்து அவரைக் கொலைக் குற்றவாளியைப் போல் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி என்ற பெயரில் அனுமதித்து சிறைக் கைதியாக நடத்த முயற்சிக்கின்றது.
ஆனால் எம் தாயோ, இவர்களைப் போன்று அதிகாரத்திற்கும்,காசுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கும், இனத்தைக்காட்டிக் கொடுப்பவர்களை நன்குஅறிந்தவர்.அவர் கணைக்கால் இரும்பொறை வந்த இனத்தின் பெருமை பேசுகிற மாவீரனைப் பெற்ற தாய் ஆவார். அவர் இவர்களை நன்கு அறிந்ததால் தான், துரோகியின் கருணையால் வாழ்வதைவிட எதிரியால் வீழ்த்தப்பட்டு சாவது மேலானது�என்ற தமிழ் வீரத்திற்கு ஏற்ப சிகிச்சைக்கு இந்தியா வரமறுத்துள்ளார்.அவரது தாய் மண் இன்று எதிரியான சிங்களனின் ஆதிக்கத்தில் இருந்தாலும் அது குறித்து கவலைப்படாமல் சென்றுள்ளார்.
அன்னையின் இந்த முடிவு அவருக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் தமக்கு வரலாற்றில் ஏற்பட்டுள்ள அழிக்க முடியாத தீராக்கறையை மாற்றிவிடலாம் என எண்ணிய அரசியல் பிழைப்புவாதிகளுக்கு சரியான சவுக்கடியாகும். துரோகியின் கருணையால் வாழ்வதைவிட எதிரியால் வீழ்த்தப்பட்டு சாவது மேலானது�என்ற தமிழ் வீரத்திற்கு ஏற்ப இந்தியா வரமறுத்த அன்னையே உன் பாதம் தொட்டு வணங்குகின்றேன்.

சீமான்,

நாம் தமிழர் இயக்கம்.