தொடர்பாளர்கள்

Wednesday, May 12, 2010

பார்வதியம்மாள் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவார்: சிவாஜிலிங்கம்

பார்வதியம்மாள் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவார்:
செய்திகள்
மலேசியாவிலிருந்து கொழும்பை வந்தடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் நேற்று யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தார். இவரை முன்னாள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அம்புலன்ஸ் வண்டி மூலம் நேற்றுக்காலை கொழும்பிலிருந்து அழைத்துச் செனறார்.
இவரை வழியில் வவுனியாவில் சந்தித்த போது, யாழ்ப்பாணத்திற்குச் செல்கின்ற பார்வதியம்மாள் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார் என சிவாஜிலிங்கம் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
கடந்த பத்து வருடங்களாக பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருப்பதனால், பார்வதியம்மாளை வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெறவேண்டியவராக இருக்கின்றார்.
அவருக்கு வீடு இருந்தால் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெறலாம். ஆனால், இப்போது வீடு இல்லாத காரணத்தினால் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்போகிறோம்.
அவருக்கு தினசரி வைத்தியருடைய கண்காணிப்பும் மருத்துவ பராமரிப்பும் தேவையாக இருக்கின்றது. வைத்தியசாலையில் அனுமதித்தால் அவரது நெருங்கிய உறவினர்கள் பலரும் வந்து அவரைப் பார்க்கவும் பராமரிக்கவும் முடியும்.
இந்திய அரசு அவருக்கு நிபந்தனையின் அடிப்படையிலேயே கிகிச்சையளிக்க முன்வந்துள்ளது. ஆயினும் அவரது குடும்பத்தினர் நிபந்தனையின் அடிப்படையில் அவர் சிகிச்சை பெறுவதையும் தொடர்ந்தும் அவரை ஓர் அரசியல் சர்ச்சைக்குள் இழுக்கப்படுவதையும் விரும்பவில்லை. இதனாலேயே அவர் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்கின்றார்.
நிபந்தனைகள் எதுவும் இல்லாத நிலையில் அவருக்கு சிகிச்சையளிப்பதற்கு இந்திய அரசு முன்வருமாக இருந்தால் பார்வதியம்மாளின் குடும்பத்தினர் அவரை இந்தியாவுக்கு அனுப்பி சிகிச்சை பெறச் செய்வார்கள்.
அத்தகைய ஒரு நிலைமையை பரிசீலனை செய்வதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றார்கள். இருப்பினும் பார்வதியம்மாளின் இந்திய பயணம் அங்கு ஓர் அரசியல் சர்ச்சையாக போய்க்கொண்டிருப்பதனால் அவரும் அவரது குடும்பத்தினரும் அவர் தமது சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்வதையே பெரிதும் விரும்புகின்றார்கள்.

No comments:

Post a Comment