தொடர்பாளர்கள்

Tuesday, July 14, 2009

மாண்புமிகு டத்தோ சிறி ச.சாமிவேலனாருடன் ஒரு சந்திப்பு

சாமிவேலனாருடன் திரு.பழ.கிருட்டிணன், திரு.பழனியாண்டி, திருமாவளவன்,
பெரியவர் இராமசாமி, திரு.வே.கணேசன்.

பழ.கிருட்டிணன், திரு.பத்துமலை, திருமாவளவன்,
சாமிவேலனார், பெரியவர் திருமுகம், பெரியவர் இராமசாமி

திரு.மன்னர், திருமாவளவன், சாமிவேலனார், திரு.எழிலன்


திரு.குமரன், திரு.தமிழ்வாணன், திருமாவளவன், சாமிவேலனார், திரு.பாலா


திரு.இளஞ்செழியன், திருமாவளவன், சாமிவேலனார், திரு.கனல்வீரன்

அண்மையில் மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் தேசியப் பொறுப்பாளர்கள் தேசியத் தலைவர் இரா. திருமாவளவன் அவர்களின் தலைமையில் டத்தோ சிறி ச.சாமிவேலனார் அவர்களுடன் ஒரு சந்திப்பினை நடத்தினர். தமிழ் தமிழர் நலன் தொடர்பாகவும் தமிழ் நெறிக் கழகப் பணி தொடர்பாகவும் பல்வேறு செய்திகள் சந்திப்பின் போது பேசப் பட்டன. தம்மால் ஆன உதவிகளை இயக்கத்திற்குச் செய்வதாக டத்தோ சிறி அவர்கள் உறுதியளித்தார், தம் கடந்த கால வரலாறுகளை நினைவு கூர்ந்து கூறியதுடன் அரசியல் வாதிகளை விட குமுகாயத் தொண்டர்கள் மிகவும் மன நிறைவுடையவர்கள். நிம்மதி மிக்கவர்கள் என்றார்.

இலங்கை அரசுக்கு ஆதரவாக மலேசியா ஐ.நாவில் செயல் படக் கூடாது என்ற தமது வேண்டுகோளை அறிந்த இங்குள்ள இலங்கை தூதர் தமமுடன் தொடர்பு கொண்டு எதிர்ப்பாக வாதிட்டதாகவும் அதற்குத் தாம் "நீங்கள் ஒரு சிங்களவனாக இருந்து பேசுகிறீகள் ஆனால் நான் தமிழனாக இருந்து பேசுகிறேன்" என்றதும் அவர் வாயடங்கிப் போனதாகக் கூறினார்.

எதிர்வரும் ௧௨ ஆம் மாதம் நெகிரி செம்பிலான் பகாவில் நடைபெற விருக்கும் மாணவர் பண்பாளர் விழாவிற்கு வருகை யளித்து நிகழ்வினைத் திறந்து வைக்கும் படி நடுவண் பொறுப்பாளர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று நிகழ்வுக்கு வருவதாக உறுதியளித்தார். ஒன்றரை மணி நேரம் மிகவும் மகிழ்வுடன் டத்தோ சிறி அவர்களுடனான கலந்துரையாடலை முடித்துக் கொண்டு பொறுப்பாளர்கள் இல்லம் திரும்பினர்.

No comments:

Post a Comment