தொடர்பாளர்கள்

Friday, June 5, 2009

புறப்படட்டும் புலிகள்

புறப்படட்டும் புலிகள்
பாவேந்தர் பாரதிதாசன்

தமிழ்நாட்டு விடுதலை தமிழ்ப்புலவர் விடுதலை!
நமக்கென்ன என்றிருப்பாரோ புலவர்
நமக்கென்ன என்றிருப்பாரோ (தமிழ் )

தமிழைப் பேச உரிமையும் இல்லை!
தாயை வாழ்த்தினும் வந்திடும் தொல்லை!

தமிழ்மொழி எல்லாம் வடமொழி என்று
சாற்றுவார் பார்ப்பனர் பொய்யிலே நின்று!
தமிழ்மொழி எல்லாம் தமிழ்மொழி என்று
சாற்றுவார் தமிழர்கள் மெய்யிலே நின்று!
தமிழ்ப்பகைப் பார்ப்பனர் அடைவது நன்மை
தமிழ்ப்புலவோர்கள் அடைவது தீமை (தமிழ்)

நற்றமிழ் என்பது தில்லிக் காகாது!
நம் அமைச்சர்க்கும் காதுகே ளாது!
புற்றிலே மோதினால் பாம்புசா காது!
புறப்படட்டும் புலிகள் இப்போது! (தமிழ் )

தமிழ்விடுதலைப் போரைத் தட்டிக் கழிப்பதா?
தட்டியே மனைவியின் முகத்தில் விழிப்பதா?
தமக்குள்ள பெருமையைத் தாமே அழிப்பதா?
தமை ஈன்ற தாயின் குடரைக் கிழிப்பதா? (தமிழ் )

ஆட்டிப் படைப்பவர்க் கஞ்சுதல் வேண்டா!
அமைச்சர் என்பார்க்கும் அஞ்சுதல் வேண்டா!
காட்டிக் கொடுப்பார்க்கும் அஞ்சுதல் வேண்டா!
கருத்திலாக் கட்சிகட்கும் அஞ்சுதல் வேண்டா! (தமிழ் )

No comments:

Post a Comment