தொடர்பாளர்கள்

Sunday, June 14, 2009

மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் தமிழ் நெறி மாணவர் இளந்தையர் பயிலரங்கு 2009சிறப்பாக நடந்தேறியது.











மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் தமிழ் நெறி மாணவர் இளந்தையர் பயிலரங்கு 2009சிறப்பாக நடந்தேறியது.

சென்ற 7.6.2009 முதல் 9.6.2009 வரை கெடாவில் அமைந்துள்ள சிக், பெண்டாங் மான் கெடா எனும் ரிசோர்ட்டில் தமிழ்நெறி மாணவர் இளந்தையர் பயிலரங்கு மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. ஏறக்குறைய 70 மாணவர்கள் இப்பயிலரங்கில் பங்கேற்றனர். முழுக்க முழுக்க தமிழ் மாணவர்களை மேம்படுத்துவதற்கும் தமிழினத்தைக் கட்டிக்காக்கக் கூடிய சிறந்த தலைமைத்துவமிக்கவர்களாக உருவாக்குவதற்காகவும் இப்பயிலரங்கு நடைப்பெற்றது.இது 3 ஆவது முறையாக மலேசிய தமிழ்நெறி கழகத்தால் நடத்தப்படுகின்ற பயிலரங்காகும். இக்கழகத்தின் தலைவரான பாவலர் ஐயா இரா. திருமாவளவன் அவர்களின் ஆலோசனைப்படியும் முயற்சியின் பாலும் இந்த இளந்தையர் பயிலரங்கு நடைப்பெற்று வெற்றி கண்டது என்பதில் மிகையில்லை.

பல பயிற்சிகளும் விளையாட்டுகளும் உள்ளடங்கிய இந்நிகழ்வு மாணவர்களுக்கு மிகவும் உள்ளக்களிப்பை ஏற்படுத்தியுள்ளது.முதல் நாளன்று 3 மணி தொடங்கப்பட்ட இந்நிகழ்வு மாணவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுத்தது. முதலில் பனிப்பாறை உடைத்தலும் பிறகு தமிழர் விளையாட்டும் குழு உருவாக்கம் போன்ற நிகழ்வுகளும் மாணவர்களை இன்னும் வலுப்படுத்தியன. மாணவர்கள் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.ஒவ்வொரு குழுவிலும் 10 மாணவர்கள் நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிற்கும் தலைவரும் செயலாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உள உரப் பயிற்சி, உடல் உறப் பயிற்சி, நள்ளிரவு தனிமைப் பயிற்சி, ஓடை நடைச் செலவு காட்டு நடைச் செலவு, அருவி குளிப்பு, பல்வகை உளவியல் விளையாட்டுகள் என மாணவர்களுக்கு களிபையும் நன்மையையும் தந்த நடவடிக்கைகள் வழங்கப் பட்டன.

ஏடலர் தமிழழகனார் மாணவர்களுக்கு பல விளையாட்டு நடவடிக்கைகளை வழங்கினார். தேசியப் பொருளர் மு.தமிழ்வாணன் பண்பாட்டுச் சீர்கேடுகள் பற்றிய எழுச்சியுரை நிகழ்த்தி மாணவர்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்டினார். தேசிய உதவித் தலைவர் மு.கனலன் அவர்கள் மாணவர்களின் பாதுகாப்பிலும் நலனிலும் முழு பொறுப்பெடுத்து கவனம் செலுத்தியதுடன் பயிலரங்கில் கலகலப்பையும் ஏற்படுதினார். மலாயாப் பல்கலைக்கழக மாணவர் கன்னித்தமிழனும் தமிழ்ச்செல்வனும் மாணவர் குழு கண்காணிப்பாளர் பொறுப்பேற்றுத் திறம்படச் செயல்பட்டனர். ஏனைய பொறுப்பாளர்களாகிய மன்னன், பத்துமலை, குமரன், பெரியவர் திருமுகம், பாடங்செறாய் கிளை மகளிர் பொறுப்பாளர்கள் பலரும் இப்பயிலரங்கு வெற்றி பெற பெரிதும் உழைத்தனர்.

செய்தி: அருள்விழி, அருள்நங்கை

No comments:

Post a Comment