தொடர்பாளர்கள்

Wednesday, June 3, 2009

பழைய காலம் பொற்காலம்

பழைய காலம் பொற்காலம்


பழைய காலம் பொற்காலம் - தமிழா

புதிய காலம் கற்காலம்

சிந்தனை செய்தால் எதிர்கால்ம்

சிறப்பாய் வாழ்வாய் நற்கால்ம்

அறிவை வளர்த்தாய் அறத்தைச் செய்தாய்

ஆளும் இனமாய் உலகில் வாழ்ந்தாய்

அரிய நூல்கள் பலவன செய்தாய்

அவனி தழைத்தது அக்காலம்

அறிவை கெடுக்கும் வழியினைத் தொட்டாய்

அடிமை சகதியில் சிக்கித் தவித்தாய்

சிறுமை சேர்க்கும் நூல்கள் புகழ்ந்தாய்

பெருமை இழந்த்து இக்காலம் (பழைய )

உலகில் மூத்தச் செந்தமிழ் மொழிந்தாய்

உலகெலாம் போய் வாணிகம் செய்தாய்

அயல்மொழி யில்பார் உன்மொழி வேர்கள்

வியந்தது உலகம் அக்காலம்

சங்கத் தமிழைத் தூக்கி எறிந்தாய்

சங்கத மொழியைத் தெய்வம் என்றாய்

ஆங்கிலம் கலந்து தமிழைச் சிதைத்தாய்

அடிமையானது இக்காலம் (பழைய)

வானியல் உண்மைகள் வாழ்வியல் மெய்மைகள்

வானம் அளந்த ஆட்சித் திறமைகள்

இலக்கிய இலக்கண செம்மை வளமைகள்

எல்லாம் சிறந்தன் அககாலம்

சோதிட்ப் புரட்டுகள் போலிப் புனைவுகள்

வீதிக்கு வீதி புராணக் குப்பைகள்

பாலியல் வெறிமைகள் கழிசடைப் புதுமைகள்

பழிகள் நிறைந்தது இக்காலம் (பழைய )

மானம் நாணம் சூடு சுரணைகள்

மாண்பு பண்பு அறம்சார் வீரம்

ஒழுக்கம் நேர்மை தூய்மை சீர்மை

ஓங்கி வளர்ந்தது அக்காலம்

மானங் கெட்டு வெட்கங் கெட்டு

மண்டை முழுவதும் இருளைச் சேர்த்து

தமிழன் என்னும் பேரும் கெட்டு

தறிகெட் டிழிவது இககாலம் (பழைய காலம்)

இரா.திருமாவளவன்

No comments:

Post a Comment