தொடர்பாளர்கள்

Monday, August 17, 2009

திருத்தமிழ் தந்த நற்குணன் வாழ்க!

திருத்தமிழ் எனும் தமிழ் மரபையும் மாண்பையும் காக்கும் அருந்தமிழ் வலைப்பூவினை நற்குணன் எனும் நற்றமிழ் நெஞ்சர் நெறிப்படுத்தி மலேசிய வலைப்பூ வரலாற்றில் பெருமை சேர்த்து வருகின்றார். அன்னாரைப் போற்றி திருநெறி வாழ்த்துகின்றது.

நற்குணன் என்னும் நற்றமிழ் நெஞ்சன்
முற்புகழ் திருத்தமிழ் முன்மையை உணர்ந்தான்
அற்ப அகத்தினர் கசடுகள் தகர்ப்பான்
எற்படும் கதிரொளி எழுச்சியைத் தந்தான்
என்றும் தமிழுக்குத் திருச்செல்வ மேலான்
நன்று செய்நெறி வலைத்தள வேலான்
பண்டு புகழ்சொல் மரபுகள் காப்பான்
நீண்டு அவன்புகழ் வாழிய! வாழிய!


இரா. திருமாவளவன்

2 comments:

  1. ஐயா தமிழியன் அவர்களுக்கு வணக்கம்.

    தங்களின் வாழ்த்தில் மனம் நெகிழ்ந்து இருக்கிறேன். ஒருகணம் விழித்திரையில் நீர் கப்பியது. மிக்க நன்றி ஐயா! வணங்குகிறேன்!

    ReplyDelete
  2. தமிழ் நலம் காக்கும் ஐயா நற்குணன் அவர்களே!
    வணக்கம் தங்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

    ReplyDelete