தொடர்பாளர்கள்

Tuesday, August 11, 2009

இர.ந.வீரப்பனாரின் ௧0 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு. பழ.நெடுமாறன் சிறப்புப் பேருரை.


எதிர்வரும் 06.09.2009 ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 2.30 மணிக்குத் தலைநகர் சோமா அரங்கத்தில் இந்நாட்டில் தமிழிய எழுச்சிக்காகப் பாடாற்றி உலகளாவிய நிலையில் தமிழரை ஒன்றிணைக்கும் பெரும்பணியை மேற்கொண்டு வரலாற்றில் நிலைநின்ற இர.ந.வீரப்பனாரின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக நடைபெற விருக்கிறது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புப் பேருரை நிகழ்த்த தமிழகத்திலிருந்து உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா பழ.நெடுமாறன் வருகை தர விருக்கின்றார். இதனை இர.வீரப்பனாரின் அன்பு மகளார் திருவாட்டி வீ.முல்லை அவர்கள் அறிவித்து அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றார்.

நாட்டில் தொடர்ந்து நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளிலும் பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் கலந்து உரை நிகழ்த்த உள்ளார்கள். இதற்கான ஏற்பாட்டினை மலேசியத் தமிழ் நெறிக் கழகம் செய்திருக்கின்றது. ஏனைய செய்திகள் அவ்வப் பொழுது வழங்கப் படும்

No comments:

Post a Comment