சோழ மன்னன் இராசேந்திரன் தென்கிழக்காசிய நாட்டுப் பகுதிகளுக்கு வந்து கடாரப் பேரரசை நிறுவிய செய்தி தஞ்சைப் பெரிய கோயிலில் கல்வெட்டாகச் செதுக்கப் பட்டுள்ளது. யாரும் பார்க்க இயலாத அளவு சுவர் இடுக்கில் இருக்கும் இக்கல் வெட்டு இருக்கும் பகுதியைக் குறிக்க எந்தக் குறிப்புப் பலகையும் இல்லை. அதில் குறிக்கப் பட்டுள்ள பாடல் இதோ..
அலைகடல் நடுவில் பலகலம் செலுத்தி
சங்கிராம விசையோத் துங்க வர்மன்
ஆகிய கடாரத் தரசனை வாகையம்
பொருகடல் கும்பக் கரியொடு மகப்படுத்
துரிமையில் பிறக்கிய பெருநிதிப் பிறக்கமும்
ஆர்த் தவ னகனகர் போர்த்தொழி வாசலில்
விசாதிரத் தோரணமு மொய்த்தொளிர்
புனைமணிப் புதவமும் கணமணிக் கதவமும்
நிறைஸ்ரீ விசயமும் துறைநீர்ப் பன்னையும்
வன்மலை யூரெயில் தொன்மலை யூரும்
ஆழ் கடல் சூழ் மாயிரு டிங்கமும்
கலங்கள் வல்வினை லங்கா சோகமும்
காப்புறு நிறைபுனல் மா பப்பாளமும்
காவலம் புரிசை மேவிலிம்பங்கமும்
விளைப் பந்தூரிடை வளைப் பந்தூரும்
தலைத் தக்கோர் புகழ் தலைத்தக் கோலமும்
தீதமர் வல்வினை மாதமர் லிங்கமும்
கலாமுதிர் கடுந்திறல் இலாமுரி தேசமும்
தேனக்க வார்பொழில் மானக்க வாரமும்
தொடு கடல் காவல் கடுமுறள் கடாரமும்
மாப்பொரு தண்டால் கொண்ட ....
உங்களின் இந்த சிறப்பான பனி மேலும் சிறப்பாக இருக்க எனது வாழ்த்துகள் இப்படிக்கு தமிழ் நெறியன்..
ReplyDeleteதமிழினத்தின் தொன்மையையும், வரலாற்றையும் இந்திய ஆய்வாளர்கள் சரியான முறையில் ஆராய வில்லை என்பதே தமிழர்களின் மனக்குறையாக உள்ளது. ஆயினும் அவ்வப்போது தமிழார்வலர்கள் இது போன்ற ஆய்வுகளை மேற்கொண்டு தமிழினத்தின் பெருமையினை வெளிக்கொணர்வது தமிழினத்தை மேன்மையுறச் செய்யும் என்பதில் அய்யமில்லை! வளரட்டும் உங்கள் தொண்டு!!! செந்தமிழே வெல்லும்!!!
ReplyDelete