வள்ளுவர் காட்டும் வாழ்க்கை நெறி 1 - இரா.திருமாவளவன்
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு
நம் மனத்தைப் போகின்ற திசைகளில் எல்லாம் போக விடாது , தீமைகளை நீக்கி நன்மையின் பக்கம் செலுத்துவது அறிவின் பணியாகும் . மனம் ஒரு குரங்கு போல ;ஆசைக்கு ஆட்பட்டது ; அதைக் கட்டுப்படுத்த தவறிவிட்டால் எதை எதையெல்லாம் விரும்பிகிறதோ அதை அடைய எண்ணும்; இதனால் நமக்குத் துன்பமே ஏற்படும் ; கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா ? மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா ? மனிதன் போன பாதையை மறந்து போகலாமா ? என்பது நல்வழி காட்டும் ஒரு பழைய பாடல் . மனிதனை மனிதப் பண்புகளோடு வாழச் செய்வது அவனிடம் உள்ள அறிவு. அவன் மனம் போன போக்கிலே வாழ முற்பட்டால் அவனுக்கும் பிறருக்கும் துன்பத்தையே விளைவித்து விடுவான் ; கடிவாளம் இன்றி செல்லும் உணர்வினை நெறிப்படுத்தி ஒழுங்கு படுத்தி நல்லவற்றின் பக்கம் படியச் செய்கின்ற பொழுதுதான் ஒரு மனிதன் பிறருக்கு எந்தக் கெடுதலையும் செய்ய மாட்டான் . இவ்வாறு ஒரு மனிதனை மனிதனாக நெறியாளனாக, பண்பாளனாக, ஒழுங்குடையவனாக எண்ணிப் பார்க்கக் கூடியவனாக நல்லவனாக உருவாக்கக் கூடியது அறிவு ; எனவே ஆசைக்கு அடிமையாகி பெரும் சிக்கலுக்குள் மாட்டாமல் அறிவு வழிபட்டு நின்று நன்மை புரியுங்கள் இதனால் துன்பம் நீங்கும் , எல்லா உயிரும் இன்புற்று வாழும்.
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு
அறிவு வழிபட்டு நின்று நன்மை புரியுங்கள் இதனால் துன்பம் நீங்கும் , எல்லா உயிரும் இன்புற்று வாழும்.//
ReplyDeleteசிறப்பான கருத்துக்கள். வழிகாட்டியாக வாழ்வில் திகழும்.