தொடர்பாளர்கள்

Wednesday, November 10, 2010

போராளிகளைப் பிளவுபடுத்தியவரே கருணாநிதிதான் பழ.நெடுமாறன் வெளியிட்ட உண்மை

போராளிகளைப் பிளவுபடுத்தியவரே கருணாநிதிதான்
பழ.நெடுமாறன் வெளியிட்ட உண்மை

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திடீரென ஈழத்தமிழர் பிரச்னை பற்றி முதல்வர் கருணாநிதி பேசியிருக்கிறார். திருச்சிக்கு வந்த சோனியாவை இடையில் சென்னையிலேயே சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தவர், அதையடுத்து இராசபக்சேவுக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அடுத்தடுத்து நடக்கும் அவரின் இந்த கருத்துவெளிப்பாடுகள் தமிழ் இன உணர்வாளர்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. இது பற்றி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறனிடம் பேசினோம்.

''போரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழரின் மறுவாழ்வு பற்றி முதல்வர் கருணாநிதி மீண்டும் முக்கி யத்துவம் கொடுத்து பேசியிருக்கிறாரே?''

இலங்கையில் தமிழர்களின் பேரழிவுக்கெல்லாம் காங்கிரசும் தி.மு.க. வும்தான் பொறுப்பு. ஒரு லட்சம் அப்பாவி தமிழர்களை பதைக்கப்பதைக்க படுகொலை செய்ய சிங்கள அரசுக்கு இந்திய அரசு ஆயுதம் தந்தது. மத்திய அரசில் ஒரு அங்கமாக இருந்தும் தி.மு.க. தமிழர் அழிவைத் தடுக்க எதுவுமே செய்யவில்லை. மாறாக, தமிழக மக்களை ஏமாற்ற வரிசையாக நாடகங்கள் மட்டும் அரங்கேற்றியது. முள்வேலி முகாமிலிருந்து மூன்று இலட்சம் தமிழ் மக்களை விடுவிக்குமாறு தமிழகமே... கொதித்துப் போராடியபோது, சர்வகட்சிக் குழுவை அனுப்புமாறு வலியுறுத்தப்பட்டது. ஆனால் கருணாநிதி தி.மு.க. காங். கூட்டணி எம்.பி.க்களை மட்டும் அங்கு அனுப்பி வைத்து அவர்கள் திரும்பி வந்த பிறகு அவரே ஒரு அறிக்கை தந்தார். முகாம்களில் உள்ள மக்கள் 3 மாதங்களில் அவரவர் ஊர்களில் குடியேற்றப்படுவார்கள் என்று இராசபக்சே உறுதி தந்துவிட்டார் என்றும் மக்களுக்குச் செய்யப்படும் உதவிகள் ஓரளவு திருப்தி தருவதாகவும் கூறியவர் கருணாநிதி. ஆனால் இன்ன மும் அந்த மக்கள் பெரும் துன்பத்தில் இருக்கிறார்கள் என அவரே இப்போது இடம் பெயர்ந்த மக்களுக்கு இந்தியா உதவ வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறார். காங்கிரசுக்கும்-தி.மு.க.வுக் கும் உறவில் நெருடல் ஏற்படும்போது ஈழத்தமிழர் பிரச்சினையைக் கையில் எடுப்பதும் திராவிடம் பற்றிப் பேசுவதும் உறவு இணக்கமாக இருக்கும்போது அதைப் பற்றி மூச்சுகூட விடாமல் இருப்பதும் கருணாநிதியின் வழக்கம்.

''போர் மேகங்கள் சூழத் தொடங்கியதில் இருந்தே அதை மத்திய அரசு தடுக்கவேண்டும் என முதல்வர் தொடர்ந்து கூறினார்தானே?''

''மன்மோகன் பிரதமராகப் பதவி யேற்ற 2004ம் ஆண்டு முதல் 2009 வரை சிங்கள ராணுவத்தினருக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளித்தது. சிங்கள இராணுவத்தில் 63 சதவீதம் பேர் இப்படி இந்தியாவில் பயிற்சி பெற்றனர். 2008 - 09 ஆண்டுகளில் விடுதலைப் புலிகளுக்கு உதவிப்பொருள்கள், ஆயுதங்களைக் கொண்டுவந்த 13க்கும் மேற்பட்ட கப்பல்களை இந்தியக் கடற்படையின் உதவியுடன் சிங்களக் கடற்படை அழித்தது. வெளியிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு எந்தவித ஆயுத உதவியும் வராதவாறு இந்தியக் கடற்படை தடுத்தது. இது மட்டுமல்லாமல் இந்திய இராணுவத்தின் முன்னாள் லெப். ஜெனரல் சதீஷ் சந்திரா நம்பியார், இலங்கை இராணுவத்துக்கு ஆலோசகராகப் பணியாற்றினார். உச்சக்கட்டமாக ஏவுகணைகள், ராடார்களுடன் அவற்றை இயக்க ராணுவப் பொறியாளர்களையும் டெல்லி அரசு அனுப்பிவைத்தது. இதெல்லாம் நடந்தபோது மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகித்தது. இவர்களின் தயவில்தான் மன்மோகன் அரசு உயிர்பிழைத்துக்கொண்டு இருந்தது. உண்மையிலேயே ஈழத்தமிழர்கள் மீது கருணாநிதிக்கு அக்கறை இருந்திருந்தால். மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் மன்மோகன் அரசு கவிழ்ந்திருக்கும். காங்கிரசு உதவியில் பதவியில் இருக்கும் தி.மு.க. அரசை காங்கிரசு கவிழ்த்திருக்கும். தனது அரசைக் காப்பாற்ற ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களைக் கருணாநிதி பலி கொடுத்தார்.

''போர் நிறுத்த முயற்சி பற்றி எம்.கே. நாராயணனும் சிவசங்கர் மேனனும் அவ்வப்போது பேசிவிட்டுச் சென்றதாக முதல்வர் கூறியிருந்தாரே?''

''இலங்கையில் போர் முடிந்தவுடன் மகிந்த இராசபக்சேவின் தம்பி பசில் இராசபக்சே சில உண்மைகளை வெளியிட்டார். போர் நெருக்கடியான நேரத்தில் இந்திய - இலங்கை அரசுகள் இணைந்து செயல்படுவதற்காகக் குழு அமைக்கப்பட்டது. இந்தியத் தரப்பில் எம்.கே. நாராயணன், சிவசங்கர் மேனன், உள்துறைச் செயலாளர் ஆகியோரும் இலங்கைத் தரப்பில் பசில், கோத்தபாய இராசபக்சே, வெளியுறவுச் செயலாளர் ஆகியோர் இடம் பெற்றனர். அந்தக் காலக்கட்டத்தில் இலங்கை இராணுவத்துக்கு என்னென்ன உதவிகள் வேண்டும் என இக்குழு கூடிப்பேசி அதன்படி இந்திய அரசு உதவிகளைச் செய்தது. இதற் காகவே நாராயணனும் சிவசங்கர் மேனனும் அடிக்கடி கொழும்பு வந்து சென்றனர் என்பது பசில் இராசபக்சேவின் ஒப்புதல் வாக்குமூலம். ஆனால் போர் நிறுத்தத்திற்கு இராசபக்சேவை வலியுறுத்துவதற்காகவே அவர்கள் கொழும்பு சென்றதாக கருணாநிதி உண்மையைத் திரித்துக்கூறி தமிழக மக்களை ஏமாற்றினார்.

''போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படத்தான் செய்வார்கள் எனப் பேசிய ஜெயலலிதாவிற்கு ஆதரவாக ஈழத் தமிழர் பற்றாளர்கள் குரல் உயர்த்தி பிரச்சாரம் செய்வதாக கருணாநிதி குறிப்பிட்டு இருக்கிறாரே?''

ஜெயலலிதா அவ்வாறு பேசியது மன்னிக்க முடியாததாகும். ஆனால் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் இவர் என்ன செய்தார் என்பதுதான் முக்கியமானது. ஈழத்தமிழர் பிரச்னை ஒரு புறம் இருக்க, தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் கடற்படை வேட்டையாடு வதைத் தடுத்து நிறுத்த இவர் என்ன செய்துவிட்டார்? தமிழ்நாட்டின் முதல மைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு தன் குடிமக்களைப் பாதுகாக்க முடியாதவர் மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவதற்கு அருகதையை இழந்துவிட்டார். இராசபக்சேவைப் பாதுகாப்பதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அதை யெல்லாம் தவறாது செய்துகொண்டு இருக்கிறார்.

''உங்கள் குற்றச்சாட்டு கடுமையாக இருக்கிறதே?''

''நடந்ததைத்தான் நான் சுட்டிக்காட்டுகிறேன். ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்து ரத்தக்கறை படிந்த இராசபக்சேவின் கையைக் குலுக்குவ தற்கு, தி.மு.க. காங்கிரஸ் எம்.பி.க்களை இவர் கொழும்புக்கு அனுப்பினார்.இது எந்தக் கட்டத்தில் என்பதுதான் வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் வெளி யுறவு அமைச்சர்கள், ஐ.நா. பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதி, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதி நிதிகள், ஐ.நா. மனித உரிமை ஆணைய அதிகாரிகள், சர்வதேச பத்திரிகையாளர் கள் யாரையும் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டு இருந்த மக்களைப் பார்க்க இராசபக்சே அனுமதிக்கவில்லை. ஏன், அந்தப் பகுதிக்கான தமிழ் எம்.பி. களையும் அனுமதிக்கவில்லை. ஆனால், கருணாநிதி அனுப்பிய தூதுக்குழுவை மட்டும் இராசபக்சே வரவேற்றது எப்படி? ஏன்? அவர்களுக்கு விருந்து உபச்சாரம் அளித்தது ஏன்? அடுக்கடுக் கான இந்தக் கேள்விகளுக்கு கருணா நிதியின் பதில் என்ன?

தூதுக்குழு சென்று வந்தபிறகு கருணாநிதி வெளியிட்ட அறிக்கை இராசபக்சேவை பெரும் சங்கடத்திலிருந்து காப்பாற்றியது என்பது உண்மை. 27-5-09 அன்று ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இராசபக்சே ராணுவத்தின் மனித உரிமை மீறல் குறித்த விசாரணையில் பேசிய இலங்கையின் பிரதிநிதி, ''எங்கள் நாட்டுக்கு அருகில் இருக்கும் இந்தியா வைச் சேர்ந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் தூதுக்குழுவை அனுப்பிப் பார்வையிட்டு வன்னி முகாம்களில் சிற்சில குறை களைத் தவிர பெருமளவு முகாம்கள் நல்ல முறையில் நடத்தப்படுவதாகவும் தமிழ் மக்கள் அவரவர்கள் ஊர்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்பதை நம்பு வதாகவும் அறிக்கை தந்துள்ளார். ஆனால் இலங்கைக்கு தொலைவில் உள்ள மேற்கு நாடுகள்தான் உண்மை தெரியாமல் எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றன'' என்று கூறினார். ஆக இராசபக்சேவுக்கு ஒவ்வொரு முறையும் இக்கட்டான நிலை ஏற்படும்போ தெல்லாம் அவரைக் காப்பாற்ற இவர் உதவுகிறார் என்பதுதான் அப்பட்டமான உண்மையாகும்.

இராசபக்சேவை உலக நாடுகள் எல்லாம் போர்க்குற்றவாளி எனக் குற்றம் சாட்டுகின்றன. பத்துக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் அடங் கிய டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் இராச பக்சேவைப் போர்க்குற்றவாளி எனப் பகிரங்கமாக அறிவித்துள்ளனது. அவர் நிகழ்த்திய மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கிமூன் அமைத்த விசாரணைக் குழுவை பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வரவேற்றுள்ளன. ஆனாலும் அக்குழுவை இலங்கைக்குள் அனு மதிக்க இராசபக்சே மறுத்துவிட்டார். இதுதான் இப்போதைய முக்கிய பிரச்னை. இராசபக்சேவின் செயலைக் கண்டித்தோ ஐ.நா. குழுவை வர வேற்றோ கருணாநிதி ஒரு வார்த்தை கூடப் பேசாதது ஏன்? இராசபக்சேவைக் கண்டிக்க மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் தராதது ஏன்?

''இலங்கையில் சகோதர யுத்தம் நடக்காமல் இருந்தால் வரலாறு வேறு வடிவம் பெற்றிருக்கும் என ஆதங் கத்தோடுதானே முதல்வர் சொல்கிறார்?''

சரியாகச் சொன்னால் மதுரை டெசோ மாநாடு முடிந்த பிறகு 1986ஆம் ஆண்டு மே மாதம் ஈழத்தில் மோதல் ஏற்பட்டது. 'ரா' உளவுத்துறைதான் அதற் குக் காரணம். டெலோ இயக்கத்துக்கு ஏராளமான ஆயுதங்களைக் கொடுத்து, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மோதும்படி தூண்டிவிட்டது 'ரா'. அதன் படி அவர்கள் ஆங்காங்கே விடுதலைப் புலிகளைச் சுட்டார்கள். சிலரைப் பிடித் துக்கொண்டு போனார்கள். அப்போது விடுதலைப் புலிகளின் சார்பில் இது குறித்து டெலோ தலைவர் சிறீசபாரத்தி னத்திடம் பேச்சு நடத்த கேப்டன்

லிங்கத்தை தளபதி கிட்டு அனுப்பி வைத்தார். சமாதானப் பேச்சு நடத்தச் சென்ற லிங்கத்தின் இரு கண்களையும் தோண்டி எடுத்து, அவரைக் கொடூர மாகக் கொலை செய்தார் சிறீசபாரத்தி னம். இதற்குப் பதிலடியாகத்தான் விடுதலைப்புலிகளின் தாக்குதல் நடந்தது. போராளிகளுக்கு இடையிலான மோதலுக்கு உண்மையான காரணம் 'ரா' உளவுத்துறைதான் என்பதை கருணாநிதி ஆரம்பம் முதலே மறைத்துப் பேசுகிறார்.

தமிழகத்தில் அனைத்து போராளி இயக்கங்களும் இயங்கியபோதுகூட அவர்களுக்கிடையில் பிளவை ஏற்ப டுத்த முயன்றவரும் கருணாநிதி தான். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது 1983 சூலையில் எல்லா போராளிக் குழுக்களின் தலைவர்களை யும் அழைத்து ஒற்றுமையை உண்டாக்க முனைந்தார். அவர் அழைத்தது தெரிந்ததும் அதுவரை போராளிகள் குழுக்களைச் சந்திப்பதை தவிர்த்துவந்த கருணாநிதி, அவர்கள் எம்.ஜி.ஆரைச் சந்திப்பதற்கு முந்தைய நாளில் தன்னை வந்து சந்திக்குமாறு கருணாநிதி அழைத் தார். இவரின் அழைப்பை ஏற்று டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈரோஸ் குழுவினர் மட்டுமே சென்றனர். இச் சந் திப்பை பத்திரிகைக்கு கருணாநிதி தந்து விளம்பரம் தேடினார். விடுதலைப் புலிகள் மட்டுமே முதலில் அழைத்த எம்.ஜி.ஆரை திட்டமிட்டபடி சந்திக்க வேண்டும் என முடிவெடுத்துச் சந்தித்தனர்.

தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கும், அதி.மு.க.வுக்கும் இடையிலான போட்டா போட்டியில் போராளி இயக்கங்களைப் பிளவு படுத்தியவர் கருணாநிதியே ஆவார். பலமுறை தன் கட்சிக் கண்ணோட்டத்தில் ஈழத்தமிழர்களைப் பிளவுபடுத்தியவர் இவரேதான். போராளி களின் சகோதரச் சண்டை பற்றிப் பேசும் இவர். முதலில் தன் குடும்பத்தில் நடக்கும் சகோதரச் சண்டையை நிறுத்தட்டும்'' என்றார் நெடுமாறன்.

No comments:

Post a Comment