தமிழிசை வளம் - 1
இசைஅறிஞர் வீ.பா.கா. சுந்தரம் அவர்களின் இக்கட்டுரை ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது தமிழகப் புலவர் குழுவின் சார்பில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.வி. அவர்களின் ஆதரவில் வெளியிடப்பட்டது........
1. சென்ற பல நூறாண்டுகளிலும் வட சொல்கள்:
பத்தாம் நூற்றாண்டுக்கு மேல் தமிழகத்தில் இசைத் துறையில் வட சொல்கள் மிகவும் வழக்குக்க வந்து வளர்ந்தோங்கிப் படிப்படியாய்த் தமிழிசைத் துறைச் சொல்களை அழியத் செய்துவிட்டன. இன்று தமிழ் நாட்டின் இசைக் கல்லூரிகளில் நூற்றுக்கு 95 விழுக்காடு வடமொழிச் சொற்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் இசைக் கல்லூரிகளில் தமிழிசைக்கு மூலம் வடமொழியில் எழுதப்பட்ட நூல்கள் என்று ய பரும்பாலும் சொல்லி வருகின்றார்கள். வடமொழிச் செய்யுட்களையே மேற்கோள்கள் காட்டி வருகின்றார்கள். வடமொழிச் செய்யுட்களையே மேற்கோள்கள் காட்டி வருகின்றார்கள். வடமொழிச் சொற்கள் இல்லை யயனில் தமிழிசை இலக்கணத்தை விளக்கவே முடியாது என்னும் கருத்தும் உளது. தென்னக இசைக்கல்லூரிகளில் பாடமாக வைத்துள்ள இசையியல் நூல்களில் எல்லாம் நூற்றுக்கணக்கான வடமொழிச் சொல்கள் வழங்கி வருகின்றன.
2. பிறதுறை நூல்களில் புதுமலர்ச்சி:
தமிழக அரசு‡சென்ற ஆண்டுகளில் பெரிதும் முயன்று கலைச் சொல் அகராதிகள் வெளியிட்டுள்ளது. அறிவியல், நிலவியல், மெய்யியல், பயரியல், உயிரியல், ஆட்சியியல் முதலிய இயல்களுக்குத் தமிழ்த்துறைச் சொல் அகராதி வெளியிட்டுள்ளது தமிழக அரசு. ஆனால் இசையியலுக்குத் தமிழ்த் துறைத்சொல் அகராதி வெளியிடவில்லை.வெளியிடும் திட்டமும் வகுத்துத் தெரியப்படுத்ததவில்லை. தமிழக அரசு‡தமிழ் இசைத்துறைக்குச் செய்து வரும் ஆக்கப் பணிகளுள், இசைத்துறைச் சொல் அகராதித் திட்டமும் சேருதல் நலமாகும்.
3. தமிழிசை இயக்கம் செய்துள்ள தொண்டு:
அண்ணாமலையில் தோன்றி, நாளொரு மேனியாய் வளர்ந்து, வளம் நல்கி வரும் தமிழிசை இயக்கம் தமிழகத்திற்கு விழிப்புணர்ச்சி ஊட்டியது; அரும் தொண்டு ஆற்றியுள்ளது. தமிழிசை இயக்கம் ஒரு பறவை எனலாம். அதற்கு இரு இறக்கைகள். ஓர் இறக்கை, கீர்த்தனை யாத்தலும் இசையமைத்தலும். மற்றோர் இறக்கை ‡ இசை இலக்கணம், இசையியல். இசையிலக்கணத்தை இன்று வரை உரிய தமிழ்த்துறைச் சொற்களைக் கொண்டு எழுதி வெளியிட்ட நூல் ஒன்று கூட இல்லை.
இசையியில் பகுப்பு:
தமிழக இசையியலைக் கீழ்க்கண்டவாறு பகுத்து அமைக்கலாம்:
1. கோவை இயல் (சுவர சாஸ்திரம்)
2. ஒத்து இயல் (ஸ்ருதி சாஸ்திரம்)
3. பாலை இயல் (இராகம் உண்டாக்கும் முறை)
4. பண் இயல் (இராக சாஸ்திரம்)
5. பண் பகுப்பு வகையியல் (மேளகர்த்தா ஜன்ய ராகங்கள்)
6. ஆளத்தி நெறிமுறைகள் (இராகம் பாடும் இலட்சணம்)
7. தானம், பல்லவி பாடும் நெறிமுறைகள்
8. தாளவியல் (இது பல பகுப்புடையது)
4. தமிழிசை வரலாறு:
தமிழிசையியல் வரலாறு, தமிழிசைப் புலவர்கள் வரலாறு, முதலிய நூல்கள் நெறிமுறையாக வெளிவரவில்லை. ஆக்ஃச் போர்டுப் பல்கலைக் கழகம் ‡ வெளியிட்டுள்ள இசைககலைக் களஞ்சியம் போன்று ,(வீஜுe நுமுக்ஷூலிrd ளீலிதுஸ்ரீழிஐஷ்லிஐ மிலி னிற்விஷ்உ - ய்ஷ்rவிமி edஷ்மிஷ்லிஐ 1938; விeஸeஐமிஜு edஷ்மிஷ்லிஐ 1947) ஒரு இசைக் கலைக் களஞ்சியம்வெளியிடுதல் வேண்டும். இதனை அரசு வெளியிடாமல் போகுமோ என்ற கவலை நமக்கு வேண்டாம். இறையருள் கூட்ட இசைக் கலைக் களஞ்சியம் மலரும். ஒரு நாளில் நம் நாட்டுப் பெருமைகளுள் பண் அமைப்பும் தாளக் கொட்டு முழக்கு அமைப்புக்களும் தனிப்பெரும் சிறப்புடையன; உலக நாடுகட்கு நாம் கற்பிக்கத் தக்கன.
5. தமிழிசைக்கு மூலக் குறிப்புடைய நூல்கள்:
உயர்தனிச் செவ்விசை(உயிழிவிவிஷ்உழியி துற்விஷ்உ) பற்றிய குறிப்புகள் ஆயிரக் கணக்கில் பழந்தமிழ் நூல்களில் உள்ளன. அவற்றை ஆராய்ந்து தொகுத்தும் வகுத்தும் விளக்கியும் நூல்கள் எழுதுதல் வேண்டும். பழந்தமிழ்ச் செவ்விசை தொல்காப்பியத்தில் கருவாகவும், பத்துப்பாட்டில் பத்துமாதம் வளர்ந்து பிறந்த குழந்தையாகவும், சிலப்பதிகாரத்தில் சீரிய குமரிப் பெண்ணாகவும், சிலம்பின் செப்பரிய இரு பெரும் உரைகளிலே மண முடித்துச் சேய் ஈன்ற தாயாகவும் காட்சி அளிக்கின்றாள்.
இசை ஆராய்ச்சிக் கடலில் பயிற்சி பெற்றவர்கள் முறையாக நெறியாக நடுநிலை பூண்டு மூழ்சினால், கொற்கை முத்திலும் நற்பெரும் இசைமுத்துகள் கிடைக்கப் பெறலாம். தமிழைப் புறக்கணிக்காமல், இகழ்நத தள்ளாமல் இரக்கப்பட்டுக் கூடி ஆராயும் உள்ளம் வேண்டும்.
( இசை அறிஞர் வீ.ப.கா. சுந்தரம் எழுதிய தமிழிசை வளம் என்னும் நூலிலிருந்து..)
No comments:
Post a Comment