தொடர்பாளர்கள்

Thursday, December 22, 2011

தமிழ் நெறி மாணவர் பண்பாளர் விழாவில் மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் உரை தொடர்


தமிழியத் தலைமுறையை உருவாக்குவோம் தமிழினத்தை மீட்போம்! தமிழ் நெறி மாணவர் பண்பாளர் விழாவில் மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் உரை தொடர்

தமிழன் மத வெறியனாக இருந்து தன் அடையாளத்தை இழக்க முனைகிறானே ஒழிய தமிழனாக வாழ முற்படுவதில்லை .இந்த இழிநிலையிலிருந்து தமிழனை மீட்டெடுக்க வேண்டும் குழந்தை முதலாகவே இப்பணியை மேற்கொண்டு எதிர்கால தமிழிய தலைமுறையை உருவாக்கும் முயற்சிகளுள் ஒன்றாகவே தமிழ்நெறி மாணவர் விழா கொண்டாடப்படுகிறது .
இக்கால் இவ்விழாவினை தொடக்கத்தில் பங்கேற்று சிறப்பு பெற்ற மாணவர்களே முன்னின்று நடத்துவது பெருமைக்குரியது .எதிர்காலத்திலும் ஒவ்வொரு கட்டத்திலும் வளர்கின்ற தலைமுறையினர் இவ்விழாவினை மட்டுமல்லாமல் மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தையே சீரிய முறையில் ஏற்று வழி நடத்துவார்கள் என்பது திண்ணம் .இத்தகு இளைய தலைமுறையை நோக்கி நாம் இளந்தையர் பயிலரங்கு , திருக்குறள் வகுப்பு , தலைமைக்குரிய பயிற்சிப் பட்டறை தமிழ்நெறி பண்பாளர் விழா முதலானவற்றை தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றோம் .
இவ்விழ சிறக்க எல்லா வகையாலும் உழைத்த உழைத்துக்கொண்டிருக்கின்ற நம் பொறுப்பாளர்களுக்கு நான் என் மனமுவந்தபாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் .குறிப்பாக மலேசியத் தமிழ் நெறிக் கழக தேசியப் பொதுச் செயலர் இரா .கனல்வீரன் அவர்களுக்கும் ,தேசிய அமைப்புச் செயலர் கன்னித்தமிழன் அவர்களுக்கும் ஏனைய தேசிய பொறுப்பாளர்களுக்கும் நிகழவினைப் பொறுப்பேற்று செலாமா வட்டாரத்தில் நடத்த உழைக்கும் செலாமா கிளை பொறுப்பாளர்களுக்கும் பாடாங் செராய் கிளை பொறுப்பாளர்களுக்கும் எம் வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக ...விழா எல்லா வகையாலும் சிறக்க பங்கேற்கும் மாணவர்களுக்கும் ஒத்துழைத்த பெற்றோர்க்கும் எம் வாழ்த்துகளும் பாராட்டுகளும் ... வாழ்க வெல்க.. தனித்தமிழியம் ..

No comments:

Post a Comment

There was an error in this gadget
There was an error in this gadget