தொடர்பாளர்கள்

Thursday, December 22, 2011

தமிழியத் தலைமுறையை உருவாக்குவோம் தமிழினத்தை மீட்போம்! மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் உரை

தமிழியத் தலைமுறையை உருவாக்குவோம் தமிழினத்தை மீட்போம்! தமிழ் நெறி மாணவர் பண்பாளர் விழாவில் மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் உரை


மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தால் ஒவ்வோர் ஆண் டும் பேரளவாகக் கொண்டாடப் படும் சிறப்பு நிகழ்வே தமிழ் நெறி மாணவர் பண்பாளர் விழாவாகும். 1999 ஆம் ஆண்டு ஒட்டு மொத்த தமிழ் குடும்பங்களையும் ஒருங்கிணைக்கும் நோக்கிலேயும் தமிழ் நெறி இளந்தலைமுறையை உருவாக்கும் மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தைக் கட்டமைக்கும் நோக்கிலேயும் உயர்ந்த சிந்தனையோடு தமிழ் நெறி மாணவர் பண்பாளர் விழா எம்மால் திட்டமிடப் பட்டது. மலேசியத் தமிழ் நெறிக் கழகம் வெறும் தனி மனிதர்களின் கூட்டல்ல. தனிமனிதர்கள் சார்ந்த குடும்பங்களின் கூட்டே மலேசியத் தமிழ் நெறிக் கழகமாகும். எதிர்காலத் தமிழ் நெறி தலைமுறையை உருவாக்கும் நோக்கில் கடந்த பல ஆண்டுகளாகத் தமிழியச் சிந்தனையை உணர்த்தி சிறந்த தமிழ் நெறிக் குமுகயத்தைக் கட்டமைக்கும் வகையில் நாடெங்கிலும் திருக்குறள் தமிழ் நெறி வகுப்பு சிறந்த முறையில் நடத்தப் பட்டு வருகின்றது.தமிழனை வீழ்த்திய ஆரியம் ஒவ்வொரு நொடிப் பொழுதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு திங்களும் ஒவ்வோர் ஆண்டும் மீள முடியாத வகையில் பல்வேறு விழாக்களை நிகழ்வுகளை கட்டமைத்து இன்றளவும் அந்த மயக்கில் ஆழும் படிசெய்து விட்டது. எனவே சாண் முழம் சறுக்கும் வகையில் வகையில் கொஞ்சம் விழிப்புணர்ச்சி பெற்றாலும் இத்தகு ஆரிய சார்பு விழாக்களால் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக விழிப்புணர்வு பெறாமலேயே அழுத்தப் படுகின்றனர்.


இன்றைய ஊடகங்கள் வெறும் பண நோக்கில் இயங்கி தமிழ் தமிழர் தொடர்பான சிந்தனைகளை மேலும் முடக்கம் செய்து வருகின்றன. இதனால் தமிழனே தமிழனை மறந்து தமிழை மறந்து தமிழ் அடையாளம் இழந்து சிதைந்து வருகின்றான் என்பது ஊழ்வினையாக இன்று அமைந்திருக்கிறது. இதன் வெளிப்பாடாகத்தான் இன்றை தமிழரில் பலர் தமிழ் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவதில்லை பொருளில்லாத பிற மொழி பெயர்களையும் ஓசைகளையும் புதுமை என்ற பெயரில் சூட்டி மகிழ்கின்றனர் . அதே போல் தம் குழந்தைகளிடம் தமிழில் உரையாடுவதில்லை குழந்தைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்புவதில்லை அப்படியே தமிழ் பள்ளியில் பயின்றாலும் அந்த தமிழ் பள்ளிகள் பிள்ளைகளுக்குத் தமிழ் சிந்தனையை ஊட்டுவதில்லை .உலகம் முழுமையிலும் வாழ்கின்ற தமிழர்கள் இவ்வாறுதான் இருக்கிறார்கள்.தொடரும்..

No comments:

Post a Comment