தொடர்பாளர்கள்

Thursday, December 22, 2011

உலகத் திருக்குறள் நாள் வாழ்த்தட்டை வெளியீடு



திருக்குறள் உலக சட்டத்திற்கு வேர் மாந்தர் வாழ்வு நெறிக்கு வழிகாட்டி தமிழர் வாழ்விற்கு அடிப்படை உலக தமிழரை இணைத்துப் பிணைக்ககூடிய உயர்ந்த மறை உலகிலேயே ஒரு மாண்புமிகு நூல் இது ஒன்றே என்ற தொடக்கத்துடன் மலேசியாவில் திருக்குறள் நாள் வாழ்த்து அட்டை வெளிவந்து உள்ளது.

கடந்த 20.01.1996-ல் மலேசியாவில் நடந்த உலகத் தமிழ் மறை திருக்குறள் வாழ்வியல் மநாட்டில் ‘சனவரி முதல் நாளை திருக்குறள் நாள்’ என உலகிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரைக்கு மிக முகாமையாகப் பங்காற்றியவர் மலேசியாவின் மூதறிஞர். தமிழ்ப்புணல் மு. மணி வெள்ளையனர் அவர்களே.

திருக்குறளால் இளைய தலைமுறையினர் அடையும் பயன், திருக்குறளின் நன்மை, அதன் முகாமையான குறிக்கோள் என்ன என்பது போன்ற உலக பொது மறை திருக்குறளின் நோக்கம் இந்த வாழ்த்து அட்டையில் நன்கு விளக்கப்பட்டுள்ளது.

இந்த அற்புதமான திருக்குறளின் வாழ்த்து அட்டையின் மூலமாக பலருக்கு பலருக்கு நன்மை கிடைத்து பயனடைவர் என்பது திண்ணம் என்கிறார் ‘உலக பொது மறை திருக்குறள்’ வாழ்த்து அட்டையை தயாரித்து வெளியீடு செய்த ரவாங்கைச் சேர்ந்த தமிழ் நெஞ்சர் அரசேந்திரன்.

மின்னல் எஃப்.எம்.மில் காலையில் திருக்குறள் விளக்க உரை வழங்கும் மலேசியத் தமிழ் நெறிக் கழக தலைவர் இரா. திருமாவளன் இந்த வாழ்த்து அட்டை சிறப்பாக அமைவதற்கு நல்ல ஆலோசனை வழங்கியதாக கூறுகிறார் அரசேந்திரன்.

ஒவ்வொருவரும் சில திருக்குறள் வாழ்த்து அட்டைகளை வாங்கி நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைத்தால் திருக்குறளின் காலத்தால் அழியாத பல சிறப்புகள் இன்னும் பலருக்கு தெரிய வாய்ப்புண்டு. ஒரு வாழ்த்து அட்டையின் விலை 1.50 காசு மட்டுமே.

தொடர்புக்கு : திருமதி மல்லிகா 016-6129554,

இரா. திருமாவளவன் 016-3262479,

அரசேந்திரன் 019-3243253.

நன்றி மலேசிய இன்று

No comments:

Post a Comment