தொடர்பாளர்கள்

Wednesday, September 8, 2010

தொல்காப்பியம் இருக்குவேதத்திற்கு முந்தையது! - முனைவர் க. நெடுஞ்செழியன்

தொல்காப்பியம் இருக்குவேதத்திற்கு முந்தையது!
- முனைவர் க. நெடுஞ்செழியன்
19-ஆம் நூற்றாண்டின் இறுதி யில் (கி.பி.1875) அறிஞர் பர்னல் இரண்டு ஆய்வு நூல்களை வெளியிட்டார். அவற்றுள் ஒன்று, 'தென்னிந்திய எழுத்தி யல் வரலாறு.' மற்றொன்று 'அய்ந்திரப் பள்ளியைச் சார்ந்த இலக்கண ஆசிரி யர்கள்.' இவ்விரு நூல்களுள், இந்திய எழுத்தியல் வரலாறு எனும் நூலில் 'பிராமி முதலான இந்திய எழுத்து வடிவங்களுக்குத் தமிழே அடிப்படை' என்பதை உறுதி செய்திருந்தார். ஆனால் எழுத்தியல் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் இவரின் கருத்தைக் கூடுமானவரை புறக்கணித்தனர். 'அய்ந்திரப் பள்ளியைச் சார்ந்த இலக்கண ஆசிரியர்கள்' (ஒய் ற்ட்ங் ஆய்ண்க்ழ்ஹ நcட்ர்ர்ப் ர்ச் நஹய்ள்cழ்ண்ற் ஏழ்ஹம்ம்ஹழ்ண்ஹய்ள்) என்ற நூலில், 'அய்ந்திரம் என்பது ஒரு சிந்தனைப் பள்ளியே தவிர அது ஒரு தனிமனிதரால் செய்யப்பட்ட இலக்கண நூல் அன்று' என்றார். மேலும் அய்ந் திரம் என்ற இலக்கண நூல் இந்திரன் என்ற கடவுளால் அல்லது தனிமனித ரால் இயற்றப்பட்டது என்பதற்கான எவ்விதச் சான்றும் கிடைக்கவில்லை என்றும் உறுதி செய்திருந்தார். ஆனால் இந்திய அறிஞர்கள், ஏ.சி. பர்னல் அவர் களின் கூற்றை ஒரு தலையாக 'அய்ந் திரம் என்பதைப் பாணினிக்கும் காலத் தால் முற்பட்ட சமற்கிருத இலக்கண நூலாகவே' கருதிவிட்டனர்.

அய்ந்திரத்தைச் சமற்கிருத 'மொழியிலமைந்த இலக்கணப் பள்ளி யாகப் பர்னல் குறிப்பிட்டாலும் கூட, அவர் தரக்கூடிய எடுத்துக்காட்டுகள் அக்கருத்தை வலியுறுத்தக்கூடிய வகை யில் அமையவில்லை. அவர் குறிப்பிடும் அவ் எடுத்துக்காட்டுகளுள் தலையா யவை இரண்டு. ஒன்று பெளத்த இலக்கியமாகிய 'அவதான சாதகத்தில்' புத்தரின் தலைமாணாக்கருள் ஒருவராகிய சாரிபுத்தன் தமிழ்நாட்டில் தன் பிள்ளைப் பருவத்தில் 'அய்ந்திரம் கற்றான்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகும். இதனை விளக்கும் சக்கரவர்த்தி நயினார், 'அய்ந் திரம் என்பதற்கு உலகாய்தம் எனப் பொருளுரைத்தார் (அ. சக்கரவர்த்தி நயினார், நீலகேசி நூலுக்கான ஆங்கில முன்னுரை (ஆய் ஒய்ற்ழ்ர்க்ன்cற்ண்ர்ய் ற்ர் சங்ங்ப்ஹந்ங்ள்ண்). சக்கரவர்த்தி நயினார், அய்ந்திரத்தை உலகாய்தம் எனக் குறிக்க அவரின் ஆங்கில முன்னுரையைத் தமிழ்ப்படுத் திய பேராசிரியர் நா. வானமாமலை, உல காய்தம் என்பதைப் பூதவாதம் எனக் குறித்தார்.

உலகாய்தம், பூதவாதம் ஆகிய இரண்டும் ஒரு பொருள் குறிப்பன. அவை நிலம், நீர், தீ, வளி, விசும்பு என்ற அய்ந்து பூதங்களின் இயல்பை விளக்கிய அணுக்கோட்பாடுகளாகும். அறிவியலையும் தருக்கவியலையும் இணைத்த இக்கோட்பாடுகள் பேச்சுக் கலைக்குச் சிறப்பிடம் தந்தன. தருக்க முறையினால் உண்மையை நிலைநாட்ட வேண்டிய தேவை இருந்ததால் இக் கொள்கையாளர்கள் பேச்சுக் கலைக்குச் சிறப்பிடம் தந்தனர். இதனை விளக்கும் வகையில் அறிஞர் பர்னல் தரும் மற்றொரு சான்று பாணினி பற்றியதாகும்.

காஷ்மீரைச் சார்ந்த சோமதேவா என்பவர் எழுதிய கதாசரிதசாகரம் எனும் நூலிலிருந்து தரும் எடுத்துக்காட்டு அதுவாகும். இந்நூலில் 'சமற்கிருத இலக் கண ஆசிரியராகிய பாணினி அறிவிலியாக இருந்தார் என்றும், அதனால் வரரு சிகாத்தியாயனார் நடத்திய குருகுலத்திலிருந்து விலக்கப்பட்டார் என்றும், அப்படி விலக்கப்பட்ட பாணினி சிவனை நோக்கித் தவம் இருந்தார் என்றும், சிவன் அருளைப் பெற்றபின் மீண்டும் குருகுலத்திற்கு வந்து அவர்களோடு வாதம் புரிந்தார் என்றும் ஏழுநாட்கள் நடந்த அந்த வாதத்தில் பாணினி தோற்றார் என்றும் தன் அருள்பெற்ற பாணினி தோற்றதனால் ஆத்திரமுற்ற சிவன் குருகுலம் பின்பற்றிய அய்ந்திர நூல்களை எல்லாம் அழித்தான்' என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

மேற்காட்டிய இரண்டு சான்று களுமே அய்ந்திரம் அணுக்கோட்பாடு என்பதையும், அவ் அய்ந்திரம் தருக்க முறையில் வாதமுறையை விளக்கிய பேச்சுக்கலையின் இலக்கணம் என்ப தையும் வற்புறுத்தக் காணலாம். எனவே பனம்பாரனார் 'அய்ந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' எனக் குறிப்பது தொல் காப்பியர் பின்பற்றிய மெய்யியலின் அடிப்படை என்பதும், அம்மெய்யியல் தருக்க முறையினை உள்ளடக்கியது என்பதும் தெளிவு. இதனை,

நிலம்நீர் தீவளி விசும்போ டைந்தும்

கலந்த மயக்க முலக மாதலின்

எனும் நூற்பா உறுதிசெய்யும். தொல் காப்பியர் பொருளதிகாரத்தின் இறுதியில் விளக்கும் பத்து அழகு, காட்சி, ஐயம், தெளிவு முதலான தருக்கவியல் இலக்கணங்கள், 32 தந்திர உத்திகள் ஆகிய செய்திகள் யாவும் அக்கருத்தை உறுதிப்படுத்தும் சான்றுகளாகும்.

தொல்காப்பியம் இலக்கண நூலாதலால் அய்ந்திரத்தையும் இலக் கண நூலாகவே கருதிவிட்டனர் அறிஞர் கள். அப்படிக் கருதிய அறிஞர்கள்கூட அய்ந்திரத்தைச் சமற்கிருத நூலாகக் கருதவில்லை. பெளத்த வரலாற்றாசிரி யராகிய தாரநாதர், ''இந்நூல் மிகவும் பழ மையானது; தென்னகத்தில் வழங்கியது; கடவுள் உலகைச் சார்ந்தது; ஆரிய தேசத்தது அன்று'' என உறுதி செய்வார்.

தாரநாதரைப் போலவே இருக்கு வேதத்தையும் தொல்காப்பியத்தையும் ஒப்பாய்வு செய்த எம். சுந்தர்ராஜ், அய்ந் திரத்தைத் தமிழ் இலக்கண நூலாகக் கருதினாலும், அது இருக்கு வேதத்திற்கு முந்தையது என்று உறுதிசெய்கிறார் (ஓங்ம்ள் எழ்ர்ம் டழ்ங்லிஐண்ள்ற்ர்ழ்ண்c டஹள்ற்). எனவே அய்ந்திரம் என்பது இலக்கண நூலன்று. அது அணுவியலும் தருக்கவியலும் சார்ந்த அறிவுமரபுக்குரியது என்பது தெளிவாகும். ஒருவேளை அதை இலக் கண நூலாகக் கருதினாலும் கூட அது இருக்குவேதத்துக்கு முந்தைய தமிழ் மரபுக்குரியது என்பதே மாற்று உண்மை. இருக்குவேதம் எழுதாக்கிளவியாக வாய்மொழியாகவே வழங்கப்பட்டுள்ளது. சமற்கிருதத்திற்கு இன்றைய வரிவடிவம் அமைந்ததே மிகவும் பிற்காலத்தில்தான். எனவே எழுத்துமுறையே இல்லாத ஒரு மொழியில் எழுத்துகள் பற்றிய இலக் கணம் எப்படி இருந்திருக்க முடியும்?

மேலும் பானம்பாரனார், தொல் காப்பியரை 'முந்துநூல் கண்டு முறைப் பட எண்ணிப் புலம் தொகுத்தவராகப்' புகழ்கின்றார். இங்கு சொல்லப்படும் 'முந்துநூல்' என்பதில் தொல்காப்பியரின் இலக்கணப் புலமையும் அடங்கிவிடும். அதனால் அய்ந்திரம் என்பதை நாம் இலக்கண நூலாகக் கருதவேண்டியது இல்லை. அப்படிக் கருதினால் பனம்பார னார் 'கூறியது கூறல்' எனும் குற்றம் புரிந்தவராகிவிடுவார்.

நான்மறை

அதங்கோட்டாசான் நான்மறை முற்றியவர். இந்நான்மறை என்பது நச் சினார்க்கினியர் குறிப்பிடும் தைத்திரியம், பெளடிகம், தலவகாரம், சாமவேதம் எனும் கருத்தும் அண்மைக்கால ஆய்வு களால் மாற்றம் பெற்றுள்ளன. இருக்கு, யஜுர், சாம, அதர்வணம் என நான்காக எண்ணப்படும் முறை மிகவும் பிற்கால வழக்காகும். சாணக்கியரின் பொருள்நூல், வேதங்கள் மூன்று மட்டுமே என்ற பொரு ளில் ''திரையீ'' எனக் குறிப்பிடுகின்றது. அதனால், நான்மறை முற்றிய அதங் கோட்டாசான் என்ற தொடர்கூட ஆய் வுக்குரியதாகிறது. மாகறல் கார்த்திகேய னார், 'நான்மறை என்பதற்கு மூலமறை' எனப் பொருள்கொள்வதையும் இங்கே எண்ணிப்பார்க்க வேண்டும்.

மயங்காமரபின் எழுத்துமுறை காட்டி

பனம்பாரனாரின் பாயிரம் அரிய கருத்துப்புதையலின் திறவுகோலாகும். அறத்தைப் பரப்பும் இயல்பும், வேதப் புலமையில் தேர்ச்சியும் உடைய அதங் கோட்டாசானுக்குத் தொல்காப்பியர், 'மயக்கம்தராத மரபினை உடைய தமிழ் எழுத்துமுறையினைக் காட்டினார்' எனக் குறிப்பது மிகுந்த கவனத்துடன் ஆராயத் தக்கதாகும். வேதத்தில்வல்ல அதங்கோட் டாசானுக்குத் தொல்காப்பியர் தமிழ் எழுத்துமுறையைக் காட்ட வேண்டிய தேவை ஏன் வந்தது? இக் கேள்விக்கான நுட்பத்தை அறிஞர் டி.டி. கோசாம்பி விளக்கக் காணலாம். அவர் தம் நூலில்,

'கி.மு. 14ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியின்போது, தென்னிந்தி யாவில் இருக்குவேதப் பாசுரங் கள் சரியானபடி தொகுத்து ஒழுங்கு செய்யப்பட்டதுடன் எழுத்து வடிவம் பெற்றுக் குறிப் புரையும் வழங்கப்பட்டது. அதற்கு முன்னர் இருக்குவேத மூலத்தைச் செவிவழியே கேட்டு அப்படியே அசை உச்சரிப்புடன் ஒப்பிக்கும் வழக்கமே இருந்தது.... ஆனால் பொதுவாக இது எழுத்து வடிவத் தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட வில்லை.'

எனக் குறிக்கின்றார். இருக்குவேதம் கி.மு. 14ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டு எழுத்து வடிவில் கொண்டுவரப்பட்டது தென்னாட்டில்தான் எனும் டி.டி. கோசாம் பியின் கூற்றைப் பனம்பாரனாரின் மயங்காமரபின் எழுத்துமுறை காட்டி என்ற கூற்றோடு எப்படிப் பொருத்திப் பார்க்காமல் இருக்கமுடியும்?

வேதத்தை உச்சரிக்கும் முறை

தமிழ் எழுத்துமுறையின் சிறப்பை அறியாத ஒருவருக்கு எழுத்துக்களின் எண்ணிக்கை, அவை பிறக்கும் இடம் ஆகியவற்றை விரிவாக விளக்கக்கூடிய வகையிலேயே தொல்காப்பியர் எழுத்த திகாரத்தின் பிறப்பியலை அமைத் துள்ளார். அதங்கோட்டாசான் வேதம் வல்லவராதலால் வேதத்தை ஒலிக்கும் உச்சரிப்பு முறையை எடுத்துக்காட்டி, அப்படி உச்சரிக்கும் முறைக்கும், தமிழ் எழுத்துக்களுடைய பிறப்பிடம், அவற்றின் மாத்திரை (உச்சரிக்கும் கால அளவு) ஆகியவற்றுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை விளக்கக்கூடிய வகையில் இரு நூற்பாக்களை அமைத் துள்ளார். அவை,

எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து

சொல்லிய பள்ளி யெழுதரு வளியின்

பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்(து)

அகத்தெழு வளியிசை யரில்தப நாடி

அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே - நூற்பா - 102.

அஃதிவண் நுவலா தெழுந்துபுறத் திசைக்கும்

மெய்தெரி வளியிசை அளபுநுவன் றிசினே

- நூற்பா - 103.

என்பனவாம். இந் நூற்பாக்கள் இரண்டும் சமற்கிருத ஒலிப்புமுறை, தமிழ் எழுத்து முறைக்கு மாறானது என்பதைப் புலப்படுத்துகின்றன. 'வேதத்தின் ஒலிப் புமுறை பற்றி நான் விளக்க வரவில்லை; மாறாகப் பொருண்மை தெரிகின்ற காற்றினால் ஆகிய தமிழ் எழுத்தின் (மாத்திரையின்) அளவினைக் கூறினேன்' என உறுதி செய்கின்றார். தொல்காப்பியத்தின் அந்நூற்பாக்களுக்கு 'வேதத்தின் ஒலிப்புமுறை பொருள்தெரியா நிலைமை ஆகலின் அவற்றிற்கு அளவு கூறமாட்டார்கள்' என்று உரையாசிரியர் இளம்பூரணார் தரும் விளக்கமும் எண்ணத்தகும். இதனால், அதங்கோட்டாசான் காலத்தில் வேதம் எழுத்து வடிவைப் பெறவில்லை என்பதும், அதன் காரணமாகவே தொல்காப்பியர் மயக்கம் தராத மரபினை உடைய தமிழின் எழுத்துமுறையைக் காட்டினார் என்பதும் உறுதியாகின்றது.

தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையும் வேதக் கடவுளரின் எண்ணிக்கையும்

வேதக் கடவுள்களின் எண் ணிக்கை 33 என்பதை இருக்குவேதம், அதர்வண வேதம் ஆகியவையும் அவற் றின் வழியாகத் தோன்றிய பிராமணங் களும் உறுதிசெய்கின்றன. அவை,

ஆதித்தியர்கள் 12

வசுக்கள் 8

உருத்திரர்கள் 11

வசத்காரர் 1

பிரஜாபதி 1

என்பன. 33 என்ற எண்ணிக்கை வேதநூல்களில் வரையறுக்கப்பட்ட தற்கான காரணத்தை ஆராயும் சுந்தர்ராஜ் அம் முப்பத்து மூன்றும் தொல்காப்பியர் குறிப்பிடும்

உயிரும் உடம்புமாம் முப்பது முதலே

சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே.

எனும் நூற்பாவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்பதைத் தம்நூலில் (தண்ஞ் யங்க்ண்c நற்ன்க்ண்ங்ள் ஆக்க்ங்ய்க்ஹம்) விரிவாக விளக்கியுள்ளார். ஆதித்தியர்கள் 12 என்பது தமிழின் 12 உயிர் எழுத் துக்களே என உறுதி செய்யும் அவர், வசுக்கள் பற்றியும் தக்க சான்றுகளுடன் ஆராய்ந்துரைக்கிறார். 'வழு' என்னும் தமிழ்ச்சொல்லே 'வசு' என ஆகியதை அறிஞர்கள் எமனோ, பர்ரோ தொகுத்த 'திராவிட வேர்ச்சொல் அகராதி'யிலிருந்து (உங்க்.4336) எடுத்துக்காட்டி நிறுவு வார். இந்த வசுக்கள் மொழிக்கு முத

லில் வாரா தமிழ் மெய்யெழுத்துக்கள் என்பதும் இந்த எட்டும் தொல் காப்பியருக்குப் பிந்திய வழக்கு என்பதும் இங்கே எண்ணத்தகும்.

'க' எனும் மெய்யெழுத்து

இருக்குவேதக் கடவுள்களில் ஒன் றாகக் குறிக்கப்படுவது 'க' என்பதாகும். இக்கடவுளைப் பற்றிய வரலாறு தெரி யாமல் அறிஞர்கள் குழம்பியுள்ளனர். (இராகுல சாங்கிருத்தியாயன், ரிக்வேத கால ஆரியர்கள்) பிரஜாபதியாகக் கருதப் படும் 'க' என்பது தமிழ் உயிர் மெய் எழுத்தான 'க' வேயாகும். சங்க காலத்தில் 'க' என்பது ற் என எழுதப்பட்டது. இவ் வடிவத்தையே மனித உருவிலிருக்கும் 'க' வே என இருக்குவேதம் போற்று வதை ஆய்வுகள் உறுதிசெய்கின்றன.

இந்திரனும் வருணனும்

இருக்குவேதத்தில் இரட்டைக் கடவுளராகக் குறிக்கப்படுபவர்கள் இந்தி ரனும் வருணனும் ஆவர். இருவருள் ளும் இந்திரனே போர்க் கடவுளாகவும், மழைக்கடவுளாகவும் போற்றப்படு கின்றான். ஏறத்தாழத் தலைமைத் தெய்வ மாக வணங்கப்படும் இந்திரன் இருக்கு வேதத்தின் இடைப்பகுதியில் அறிமுக மாகித் திடீரெனக் காணாமல் போய் விடு கிறான். இவ்வாறு இந்திரன் புறக்கணிக் கப்படுவதற்கான காரணம் பெரும்புதிராக இருப்பதாக அறிஞர் அம்பேத்கர் (அம் பேத்கர் சிந்தனைகள்-8) குறிப்பிடுவார். திடீரென்று மறைந்துவிடுவது மட்டு மின்றி அகலிகை, இந்திரன் தொடர்பின் வாயிலாக இந்திரனுடைய ஒழுக்கமும் சிதைக்கப்படுகிறது. இந்திரனுடைய புகழ் சிதைக்கப்படும் அதே நேரத்தில், வைதிக எதிர்ப்பை அடிப்படையாகவும் ஆரியர் வருகைக்கு முற்பட்ட சிந்தனை மரபைச் சார்ந்தனவாகவும் கருதப்படும் ஆசீவக, சைன, பெளத்த சமயங்கள் இந்திரனை அறிவுமரபின் மூல வடிவமாகப் போற்றுகின்றன.

தொல்காப்பியரும் இந்திரனை யும், வருணனையும் மருத, நெய்தல் திணைகளின் கடவுள்களாகப் போற்று வார். தொல்காப்பியர் குறிப்பிடும் அதே பொருளிலேயே அதாவது மழைத் தெய்வமாக இந்திரனும் கடல் தெய் வமாக வருணனும் குறிக்கப்படுவதைப் போலவே இருக்குவேதமும் அவர் களைப் பற்றிக் குறித்துள்ளது. இவை எல்லாவற்றையும்விட இருக்குவேதம் இந்திரனையும் வருணனையும் அசுரர் களாகவே (இருக்குவேதம்: முதல் மண்டலம் 174-1, 7-36:2) குறித்துள்ள தும் எண்ணத்தகும். இருக்குவேதத்தில் குறிக்கப்படும் அசுரர்கள் வைதிக எதிர்ப்பாளர்கள் என்பதை அறிஞர்கள் (தருமானந்த கோசாம்பி, தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா) உறுதி செய் துள்ளனர். எனவே தொல்காப்பியர் குறிப்பிடும் தமிழ் மக்களின் நிலத்தெய் வங்களான இந்திரனையும் வருண னையும் இருக்கு வேதம் அப்படியே தழுவி அதே பொருளில் அமைத்துக் கொண்டது என்பது உறுதியாகிறது. கடல் வழிப்பயணத்தை அறியாத இருக்குவேதப் புலவர்கள் வருணனைக் கடற்பயண வழிகாட்டியாகக் குறிப் பதைப் பாவாணர் சுட்டிக்காட்டி விளக்குவதும் இங்கே எண்ணத்தகும்.

ஆறுபருவங்கள்

தமிழ்மரபில் பன்னிரண்டு மாதங்கள் கொண்டது ஓராண்டாகும். இதனை இரண்டு இரண்டு மாதங்கள் கொண்ட ஆறு பருவங்களாக வகைப் படுத்துவார் தொல்காப்பியர். இருக்கு வேதத்தில் பதின்மூன்று மாதங்கள் கொண்டு ஆண்டுமுறை ஒன்றும் பன்னிரண்டு மாதங்கள்கொண்ட ஆண்டுமுறை ஒன்றுமாக இரண்டு வகையான ஆண்டுமுறைகள் குறிக்கப் பட்டுள்ளன. இவற்றுள் பன்னிரண்டு மாதங்களையும் ஆறு பருவங்களையும் கொண்ட ஆண்டுமுறை தமிழர்களிட மிருந்து இருக்குவேதம் கடன் கொண்டது என்பதை இருக்குவேத ஆராய்ச்சியாளராகிய கிரிஃபித் (ஏண்ழ்ண்ச்ச்ண்ற்ட்) உறுதி செய்துள்ளார். இருக்குவேதத்தில் குறிக்கப்படும் விஷ்ணு, பூசன் ஆகிய புகழ்மிக்கக் கடவுள்களின் பெயர்கள் யாவும் தமிழ் வேர்ச்சொல்லின் அடி யாகப் பிறந்தவை என்பதைச் சொல்லியல் அறிஞர்கள் எமனோவும் பர்ரோ வும் விளக்கியுள்ளனர் (உஊஉ) இருக்கு. வேதத்தில் பொருள்தெரியாத பல சொற்களுக்கும் தமிழே மூலமாக இருப்பதை அக்கினிகோத்திரம் தாத்தாச்சாரியர் (ஒய்ற்ழ்ர்க்ன்cற்ண்ர்ய் ற்ர் தண்ஞ் யங்க்ண்c ள்ற்ன்க்ண்ங்ள்) தெளிவுபடுத்தியுள்ளார். இருக்கு வேதம் எனும் பெயரில் உள்ள முதல் எழுத்தான 'ரி' தமிழின் சிறப்பெழுத்துக் களில் ஒன்றான (ற) 'றி' எனும் எழுத் தின் திரிபே என்பார் எம். சுந்தர்ராஜ்.

இவ்வாறு, பல்வேறு சான்று களைக் கொண்டு காணும்போது இருக்குவேதம் தமிழியற் சூழலிலேயே தொகுக்கப்பட்டது என்பது தெளி வாகும். இக்கருத்தினை,

'தமிழுக்கும் இருக்குவேதத் திற்கும் இடையே காணப்படும் நெருக்கத்திற்கான காரணம் ஏதோ தற்செயலாக ஏற்பட்ட ஒற்றுமை என்று யாரும் கருதி விடக் கூடாது. தமிழ்ப் பண் பாட்டுக் கூறுகள்தாம் மாறு வேடம் அணிந்தோ, அல்லது முகமூடி போட்டுக் கொண்டோ இருக்குவேதத்தில் உள்ளன என்பதற்கு நாம் வெளிப்படை யான சான்றுகளைக் கொண் டுள்ளோம்...

சமற்கிருத மொழியும் அதன் இலக் கிய மரபுகளும் தமிழியத்தையே அடிப்படையாகக் கொண்டவை. இதன் விளைவாக ஒரு கலப்பு மொழி (ஙண்ஷ்ங்க் கஹய்ஞ்ன்ஹஞ்ங்) தோற்றம் கொண்டது. அதைத்தான் நாம் இப்போது சமற்கிருதம் என்று அழைக்கின்றோம். இந்த மொழி யில் அமைந்த இலக்கியங்களுக்கு உரிய உள்ளடக்கத்தை வழங்கிய ஆசிரியர்கள் அனைவரும் தமிழர் களே', என வரையறை செய்வார் எம். சுந்தர்ராஜ்.

இருக்கு வேதத்தில் தமிழியக் கூறுகள் மிகுதியாக இடம் பெற்றமைக் கான காரணம் அது தென்னாட்டில் தொகுக்கப்பட்டது மட்டுமல்ல; தொல் காப்பியர் விளக்கிக்காட்டிய தமிழ்எழுத்து முறையில் அது தொகுக்கப்பட்டதே ஆகும். ஓர் இனத்தின் எழுத்து முறை யைக் கடன்பெறும் இனம், எழுத்தை மட்டுமல்லாது அவ் எழுத்துமுறைக்குரிய பண்பாட்டுக் கூறுகளையும் கடன்பெறு வது இயல்பு. ஜப்பானியப் பண்பாட்டில் தமிழ்ப் பண்பாட்டுத் தாக்கம் மிகுதியாக இருப்பதற்கான காரணமும், ஜப்பானிய எழுத்துமுறை, தமிழ் எழுத்துமுறையைப் பின்பற்றி அமைந்ததால்தான் என்பதையும் இங்கே நாம் எண்ணிப்பார்கக வேண்டும்.

தொல்காப்பியத்தின் பழமை

இருக்கு வேதம் முதன்முதலாகத் தென்னாட்டில் எழுத்து வடிவில் தொகுக் கப்பட்டு குறிப்புரைகளும் எழுதப்பட்டன எனவும், அக்காலம் கி.மு. 14 ஆம் நூற் றாண்டு எனவும் டி.டி. கோசாம்பி கூறுவ தாலும், இருக்குவேதம், தொல்காப்பியர் கூறும் தமிழ் எழுத்திலக்கணம் முதலான இலக்கணக் கூறுகளைத் தழுவி அமைந் துள்ளதாலும், இருக்குவேதம் தொகுக்கப் பட, அதாவது தொல்காப்பியர் விளக்கிய எழுத்துமுறையை வேதமொழிக்குரிய வகையில் வடிவமைத்து, அதனடிப்படை யில் வேதத்தை எழுத்துவடிவில் கொண்டுவரக் கொஞ்சம் கால இடை வெளி தேவைப்பட்டிருக்கும். எனவே, தொல்காப்பியம் இருக்கு வேதத்திற்கு முற்பட்டது என்பது தெளிவு.

தொல்காப்பியர் குறிப்பிடும் வழி பாட்டு முறைகளான கொடிநிலை, கந்தழி, வள்ளி எனும் மூன்றும் தந்திர வழி பாட்டுக்குரியன என்பதையும், அவை முறையே சிந்துவெளி அகழாய்வில் கண்டெடுக்கப் பெற்ற லதாசாதனம் (லதா - கொடி, சாதனம் - நிலை) இலிங்கம், பகயாகம் எனும் சகம்பரி (ஆறு வகையான செல்வங்களை வழங்கும் வள்ளன்மை மிக்க தந்திரச் சடங்கு) எனவும் அடையாளம் காணப் பட்டுள்ளன. சிந்துவெளி எழுத்துமுறை பற்றி ஆராய்ந்த உருசிய நாட்டு அறிஞர்கள், அவ்எழுத்துமுறை தொல்காப்பியர் காட்டும் இலக்கண அமைதியோடு மட்டுமே பொருந்துகிறது என்பதை முப்பது ஆண்டுகளுக்கு முன்பே உறுதி செய்தனர். (பட்ங் ஐண்ய்க்ன்

15லி4லி80).

கி.மு. எட்டாம் நூற்றாண்டில் பிரா மணங்கள், ஆரண்யங்கள், தர்மசாத்திரங் கள் முதலான வைதிக இலக்கியங்கள் தோன்றின. இவை உருவாக்கிய சமூகக் கோட்பாடுகளுக்கு மறுப்பாக ஓர் அறிவுப் புரட்சி தோன்றியது. அப்புரட்சியைப் பரிவிராசகர் அமைப்பு நாடுமுழுவதும் கொண்டு சென்றது. அவ் அமைப்பின் மூலவர் எண்ணியக் கோட்பாட்டின் நிறுவனராகிய கபிலர் ஆவார். எண்ணியம் (சாங்கியம்) தொல்காப்பிய அய்ந்திர மரபிலிருந்து கிளைத்தது. வேத வேள்வி எதிர்ப்பும், அணுவியலும், கடவுள் மறுப்பும், எண்ணியத்தின் கூடுதல் அடிப்படை. இவ் எண்ணியம் கி.மு. ஆறாம் நூற்றாண் டில் ஆசீவகத்தோடு இணைந்தது. அதனால் கி.மு. 8ஆம் நூற்றாண்டிலோ, அல்லது அதற்குப் பின்போ தொல் காப்பியம் இயற்றப்பட்டிருக்குமானால் எண்ணியத்தின் தாக்கம் அல்லது ஆசீவகத்தின் தாக்கம் அதில் இருந்தாக வேண்டும். ஆனால், அப்படி ஒரு சுவடே தொல்காப்பியத்தில் இல்லை.

எனவே மெய்யியல், பண்பாட்டி யல், தருக்கவியல், எழுத்தியல், தொல்லியல் முதலான அனைத்துத் துறைகளின் அடிப்படையில் ஆராய்கின்றபோது, இருக்குவேதத்திற்கு மட்டுமல்ல. உலகில் எழுதப்பெற்ற நூல்கள் அனைத்திற்கும் தொல்காப்பியமே முந்தையது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை; உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.

(மேலும் கூடுதல் செய்திகளுக்கு கட்டுரையாசிரியரின் 'தொல்காப்பியம் - திருக்குறள் காலமும் கருத்தும்' எனும் நூலினைக் காண வேண்டுகிறோம்)

நன்றி தென்செய்தி

1 comment:

 1. ஆன்றோர் வாழ்ந்த மண்ணில் தொடர்ந்து
  அவர்களின் பாதையைப் பற்றும்;உங்களைப்
  போன்றோர் வாழும் முறைமை நமக்குப்
  புறமும் அகமும் பெருமையைத் தருவன!
  சான்று இந்தத் திருநெறித் தளம்:இதைச்
  சார்வதில் எமக்குப் பலவிதம் நிறைவு;
  தோன்றாத் துணையாய்த் தொல்காப்பிய முனி
  தொடர்வான்;உம்பணி உலகிதில் படர்க!
  -வாழ்த்தும்,
  -கிருஷ்ணன் பாலா-உலகத் தமிழர் மையம்
  http://ulagathamizharmaiyam.blogspot.com

  ReplyDelete