தொடர்பாளர்கள்

Sunday, June 20, 2010

மலேசியத் தமிழ் நெறிக் கழக பத்துமலைக் கிளை இளைஞர் பிரிவினரால் நடத்தப் பெற்ற குடும்ப விழாவும் தந்தையர் நாள் விழாவும்மலேசியத் தமிழ் நெறிக் கழக பத்துமலைக் கிளை இளைஞர் பிரிவினரால் நடத்தப் பெற்ற குடும்ப விழாவும் தந்தையர் நாள் விழாவும்

கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பதாகவே முறையாகத் திட்டமிட்டு மலேசியத் தமிழ் நெறிக் கழக பத்துமலைக் கிளையின் இளைஞர் பிரிவினர் உளுயாம் எனும் மனமகிழ் தளத்தில் குடும்ப மற்றும் தந்தையர் நாள் விழாவினை இன்று 20.06.2010 சிறப்பாக நடத்தி முடித்தனர். இந்நிகழ்வில் இயக்கத்தின் பிள்ளைகளும் பெற்றோர்களும் மிக ஆர்வமுடன் பங்கேற்றனர். புதையல் தேடும் விளையாட்டு, கண்கட்டு விளையாட்டு, புதுப் புனைவாக்க விளையாட்டு, பொருத்த வினா விடை விளையாட்டு, குழு ஒத்துழைப்பு விளையாட்டு எனப் பல்வேறு விளையாட்டுகள் இந்நிகழ்வில் நடத்தப் பெற்றன.

குடும்பத்தார் அனைவரும் வீட்டில் சமைத்துக் கொணர்ந்த உணவினை அனைவர்க்கும் பகிர்ந்தளித்து மகிழ்வுடன் உண்டு நீரோடையிலும் குளித்து பின்னர் இனிதே இல்லம் திரும்பினர்.

No comments:

Post a Comment