தொடர்பாளர்கள்

Tuesday, December 1, 2009

மலேசியாவில் பரவலாக மாவீரர் நாள் நாடு தழுவிய அளவில் நிகழ்த்தப் பட்டது.

மலேசியாவில் பரவலாக மாவீரர் நாள் நாடு தழுவிய அளவில் நிகழ்த்தப் பட்டது.ஈகச் சுடர் ஏற்றும் திரு எழிலன்


மாவீரர் நாள் பாடல் பாடும் செல்விகள் அருள்விழி அருள்நங்கைசுடர் ஏந்தும் மக்கள்
பொதுச் சுடரேற்றும் பாவலர் பாதாசன்

நிகழ்வை வழிநடத்தும் செல்வி அருளினி

மலேசியாவில்
நாடு தழுவிய அளவில் மலேசிய மக்களால் மாவீரர் நாள் நிகழ்த்தப் பட்டது. பேராக் மாநிலம், கெடா மாநிலம், பினாங்கு மாநிலம், கோலாலம்பூர் ,சிலாங்கூர் மாநிலம் , சோகூர் மாநிலம் என முகாமையான மாநிலங்கள் பலவற்றில் உணர்வார்ந்த முறையில் மாவீரர் நாள் கொண்டாடப் பெற்றது. மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன், உலகத் தமிழர் துயர்துடைப்பு நிதி அறங்காவலர் வழக்கறிஞர் பசுபதி, மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தேசியப் பொருளர் மு.தமிழ்வாணன் முதலானோர் பல்வேறு இடங்களில் மாவீரர் நாள் உரை நிகழ்த்தினர். மலேசியத் தமிழ் நெறிக் கழகம், கிள்ளான் செம்பருத்தி இயக்கம், சோகூர் செம்பருத்தி இயக்கம், உலகத் தமிழர் துயர் துடைப்பு நிதி வாரியம் முதலான அமைப்புகள் மாவீரர் நாள் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

1 comment:

 1. தமிழீழ விடுதலைக்காக உயிர் நீத்த வீரத் தமிழர்களுக்கு வீர வணக்கம் செய்திட்ட எல்லாத் தமிழர்களையும், ஏற்பாடு செய்த பொறுப்பாளர்களையும் சிரம் தாழ்த்தி வாழ்த்துகிறேன்.

  வாழ்க தமிழ்.. வளர்க தமிழ் இனம்..
  நாம் தமிழர்.. நம் மறை திருக்குறள்..

  தமிழ்க் குமரன்
  கோல கெட்டில்,
  கெடா
  tamizhan66@gmail.com

  ReplyDelete