மேலை மொழியில் விரிந்த தமிழ். “அம்”
தமிழில் அம் எனுஞ் சொல் நீரையுங் குறிக்கும்.
உ> உல்> அல்> அம்
உல்= கூடல் , சேர்தல் பொருளில் வரும் கருத்து வேர்.
நீர் ஐம்பூதத்துள்ளும் இயைந்து கலக்கும் சேரும் தன்மையதால் சேர்தல் பொருளில் அம் என்றாயிற்று . கூடுவது பெரிதாகுமாகையால் பெருமைப் பின்னொட்டாகவும் அம் அமைந்தது. நீர்போல் இயைந்தது குளிர்மை, மென்மையாதலால் அழகும் ஆயிற்று .
நீர், பெருமை, அழகு முதலானப் பொருளை அம் தரும்.
அம் வழியே அம்பம் எனுஞ் சொல் நீரைக் குறித்தது.
அம்> அம்பி = நீரில் ( பெருங்கடலில்) செல்லும் பெருங்கலம், தெப்பம்
“பெருவலை இடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார் நிறையப் பெய்த அம்பி” ( நற் : 74:2:3)
அம்> அம்பு= தண்ணீர்
“அம்பு உலாவு மீனும் ஆகி ஆமை ஆகி” ( திருமழிசை சந்த விருத்தம்: 35)
அம்> அம்பு> அம்பம் = நீர்
அம்>அம்பு>அம்பணம் = நீர், நீர் விழுங்குழாய்
“காதல் செய்பவர் தீர்த்திடு உகு அம்பமே” ( திருக்கடைக் காப்பு : 3:114:11)
அம்>அம்பு > அம்பரம்= கடல், ஆழி
ஆழி பெரு நீர் அம்பரம் முந்நீர் கடல் எனக் கருதுவர் ( திவாகரம் 5:41)
அம்> அம்புதம் = நீரால் ஆன மேகம் .
அம்புதம் நால்களால் நீடுங் கூடல் ( சம்பந்தர் தேவாரம் : 1:7:5)
அம்புதி = கடல்
“பணி எனக்கு அம்புதியே” ( அட்டப் பிரபந்தம் 6:10)
அப்பு = நீர்
அம்> அம்பு > அப்பு
அம்முதல்= பொருந்துதல், கலத்தல்
அப்பு > அப் ( சமற்கிருதம்)
Ap = water > ( A SANSKRIT ENGLISH DICTIONARY > page 47
தமிழின் சேர்தல் கூடுதல் கருத்து வளர்ச்சிப் பொருளைத்தரும் அம் சமற்கிருதத்திற்கும் மேலை ஐரோப்பிய மொழிகட்கும் வேராகும் என்பதைக் காய்தல் உவத்தல் இன்றிப் பார்ப்பாரே உணர்வார். பார்ப்பாரியச் கருத்தாளர் பாரார் ;
அஃகு தமிழில்கூர்த்துச் சுருங்கும் பொருளைத் தரும்.
அஃகு = கூர்மை
Ac , to be sharp, to pierce
L. accus = needle, ac-uere, to sharpen
E. accute, sharp, pointed
உல்>அல் > அஃகு ஒடுங்கிச் சிறுத்து ஒழுகும் நீரூற்றைக் குறிக்கும். தமிழின் அஃகு மேலை மொழியில் Aqua எனப் பரவியது.
அஃகு = ஊறு நீர்
அஃகம் = ஊறல், நீரூற்று
அஃகுதல் = நீரூறுதல்
Ap (áp-) is the Vedic Sanskrit term for "water", which in Classical Sanskrit only occurs in the plural āpas (sometimes re-analysed as a thematic singular, āpa-), whence Hindi āp. The term is from PIE hxap "water".[note 1] The Indo-Iranian word also survives as the Persian word for water, āb, e.g. in Punjab (from panj-āb "five waters"). In archaic ablauting contractions, the laryngeal of the PIE root remains visible in Vedic Sanskrit, e.g. pratīpa- "against the current", from *proti-hxp-o-. In Tamil, Ap means water, and has references in poetry.
Root / lemma: ab-
English meaning: water, river
German meaning: `Wasser, Fluß'
Note:
From Root / lemma: akʷā- (more properly ǝkʷā): ēkʷ- : `water, river' [through the shift -gʷ- > -b-, -kʷ- > -p- attested in Greek, Illyrian and Celtic languages] derived Root / lemma: ab- : (water, river) and Root / lemma: ā̆p-2 : `water, river'.
Material: Lat. amnis f., late m. c (*abnis); air. ab (*aba) Gen. abae `river', besides abann, cymr. afon, orn. bret. auon, gall. brit. FlN Abona, derived cymr. afanc `beaver, water demon, dwarf', to mir. abac (*abankos) `beaver, dwarf', schweiz.-frz. avañ `pasture' (*abanko-); lett. FlN Abava.
The West German FlN in -apa, nhd.-affa, probably go back partly to usually lost westgerm. *ap-(idg. *ab-), partly in ven.-ill. ap- (idg. *ap-).
rum. apă `water'
References: WP. I 46 f., WH. I 40, Feist 19a, 579a, GIPatSR. II 134.
See also: compare also āp-2 `water, river' and abō(n) `ape'.
Page(s): 1
மேலை மொழிகட்கும் வேரையும் வேர்ப்பொருள் தரும் கருத்து வளர்ச்சியையும் தமிழில்தான் காண முடியும்... இத்தகு வேர் விளக்கம் இன்னும் இன்னும் விரியும் பின்னும் பின்னும் வரும்...ஒப்பாரைப் பற்றி நமக்குக் கவலையில்லை.. ஒரு நாள் வரும் இந்த உலகம் இதனை உணரும்...
இரா.திருமாவளவன்
No comments:
Post a Comment