கொரோனா ( Corona ) ஒரு சொல்லாய்வு விளக்கம்.
வணக்கம், உலகமெங்கும் ஒரே மொழி கொரோனா மொழி. மாந்தர் அனைவரையும் மொழி, இன, மத, இட, நிற, சாதி, கொள்கை, நாடு , ஆண்டான், அடிமை , ஏழை, பணக்காரன் எனும் வேறுபாடுகள் இன்றி தொற்றிக் கொண்டிருக்கும், ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஒரே மொழி… கண்ணுக்குப் புலப்படாத நுண்ணி, நுண்மியாகிய நச்சில் கொரோனா…………. இதனால் மாந்தர் அனைவரின் வாய்கள் மூடப்பட்டிருக்கின்றன, அவர்கள் வாழும் வீடுகள் மூடப்பட்டிருக்கின்றன, பெரும் கொடிய கருவிகள் அடங்கி ஒடுங்கி மூலையில் கிடக்கின்றன; கிடத்தி வைக்கப் பட்டுள்ளன. எங்கே பறந்து எவரைத் தாக்குவது? எந்த நாட்டைச் சீரழிப்பது? பெரும் வல்லரசுகள் அனைத்தையும் இன்று கண்ணுக்குப் புலப்படாத உன் சிற்றடிக்குக் கீழே இருக்க வைத்து விட்டாயே ? எல்லாம் வல்லவரை… ஏங்கி ஏங்கி அழுது அழுது புலம்பி நெஞ்சம் நெக்கு நெக்குருகி வேண்டி வந்து காத்தருளுமாறு இறைஞ்சிய காப்பிடங்களே இன்று இறுகிய நிலையில் பூட்டுப் போட்டு மூடப்பட்டுக் கிடக்கின்றன…என்னே உன் வேடிக்கை...
கொரோனா இன்று நீயே பேராற்றல் வாய்ந்த ஆனால் கண்ணுக்கே புலப்படாத அற்ப, நுண் சிறு உயிரி….. பேராற்றல் வாய்ந்த பெருந்திமிர் பிடித்தோரைக் கூட உன் பேரைக் கேட்டாலே அஞ்சி நடுங்க வைத்து விட்டாயே….உன்னைப் பற்றிய ஆய்வினைப் பலரையும் செய்ய வைத்த உனக்கு என் முதற்கண் வணக்கம்…
கொரோனா,
Borrowed from Latin corōna (“garland, crown”), from Ancient Greek κορώνη (korṓnē, “garland, wreath”), from Proto-Indo-European *(s)ker- (“to turn, bend”). Doublet of crown.
என்பது ஒரு சிறு ஆங்கில விளக்கமாகும்.
உல் >குல்> குள்> கொள்> கொடு என வளைவுப் பொருளிலேயே கொடுமையைக் குறிக்கும். கொடு > கோடு எனத் திரிந்து வளைவுப் பொருளையே குறிக்கும். கொடு> கோடு> கோடகம் = வளைந்த நிலையில் வட்டமாய்த் தோற்றந் தரும் அரசன் மணிமுடி. டகரம் ரகரமாகத் திரிதல் முறையில் கொடு > கொரு , கோடு> கோடகம் > கோறகம் என மாறும். குள்> குடம்பை> குரம்பை என்றும் திரியும். குல்>குர்> குரங்கு> குரங்குதல் எனின் வளைதல் எனப் பொருள்.
தமிழின் குல் எனும் வளைதற் பொருளில் அமைந்த இவ்வேர் மேலை இந்தோ ஐரோப்பிய மொழிகளில் கெர் > ker எனத் திரிந்து கொரொனாவுக்கு வளைதல் பொருளிலேயே வேராய் அமைந்துள்ளதை ஆராய்கின்ற வேளை தெரிய வருகின்றது.
இந்தோ ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஆராய்ச்சி அறிஞர் போர்க்கோனி அவர்கள் வழியில் ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர் சி. அல்வர்ட்டு வாட்கின்சு அவர்கள் தம் நூலில் கொரொனா எனும் சொல்லுக்குக் கீழ்க்கண்டவாறு விளக்கம் தந்துள்ளார்.
(s)ker- To turn, bend.
Presumed base of a number tantly related derivatives. 1. Extended form *(s)
in nasalized form *(s)kre-n-g-. a. SHRINK, from Old English scrincan, to wither, shrivel up, from Germanic *skrink-; b. variant *kre-n-g-. (i) RUCK2, from Old Norse hrukka, a crease, fold; (ii) FLOUNCE!, from old French fronce, pleat, from Frankish *hrunkjan, to wrinkle. Both (i) and (ii) from Germanic *hrunk-. 2. Extended form *(s)kregh- in nasalized form *skren-gh-. a. RING', from Old English hring, a ring; b. RANCH, RANGE, RANK', RINK; ARRANGE, DERANGE, from Old French renc, reng, line, row; C. RING- HALS, from Middle Dutch rinc (combining form ring-), a ring. a-c all from Germanic *hringaz, something curved, circle. 3. Extended form *kreuk-. a. RIDGE, from Old English hrycg, spine, ridge; b. RUCKSACK, from Old High German hrukki, back. Both a and b from Germanic *hrugjaz. 4. Suffixed variant form *kur-wo-, CURB, CURVATURE, CURVE, CURVET, from Latin curvus, bent, curved. 5. Suffixed extended form *kris-ni-. CRINOLINE, from Latin crinis (< *crisnis), hair. 6. Suffixed extended form *kris-tā-. CREST, CRISTA, CRISTATE, from Latin crista, tuft, crest. 7. Suffixed extended form *krip-so-. CREPE, CRISP, CRISPATE, from Latin crispus (metathesized from *cripsus), curly. 8. Extended expressive form *krīss-. CRISSUM, from Latin crisăre, (of women) to wiggle the hips during copulation. 9. Perhaps reduplicated form *ki-kr-0-. CERCLAGE, CIRCA, CIRCADIAN, CIRCINATE, CIRCINUS, CIRCLE, CIRCUM-, CIRCUS, CIRQUE, SEARCH; CRICOID, RECHERCHÉ, RESEARCH, from Greek kirkos, krikos, a ring. 10. Suffixed o-grade form "kor-ono-. CORONA,
CROWN, KORUNA, KRONA, KRONA?, KRONE', KRONE“, from Greek korönos, curved. 11. Suffixed variant Torm *kur-to-. KURTOSIS, from Greek kurtos, convex. [Pokorny 3. (s)ker-935.) See also extended root
(s)kerb-.
உயிர்ப்பாடும் முக்கழகமாய் விளங்கிய பாவாணர் பெருமகனார்,
உல் > குல் எனும் வேருக்கு
வளைதற் கருத்து, இயன்முறையில் வளைவு, சுருட்சி, வட்டம், வளையம், உருண்டை, உருளை முதலிய பண்புக் கருத்துகளையும்; செயன்முறையில் வளைதல், சுருள்தல், திரிதல், சூழ்தல், சுற்றுதல், சுழலுதல், உருளுதல் முதலிய வினைக்கருத்து களையும் தழுவும்.
வளைவு என்னும் பண்பின் பெயரும், வளைதல் என்னும் வினையின் பெயரும், அப் பண்பையும் வினையையுங் கொண்ட பொருள்களை ஆகுபெயராகக் குறிக்கும்.
என விளக்கம் தருவார். இவ்வேரின் அடிப்படையில் பன்னூற்றுக் கணக்கான சொற்கள் வளைவுப் பொருளில் பிறந்துள்ளதை அப்பெருமகனார் தெள்ளிதின் விளக்கியுரைத்துள்ளார்.
உல் > குல் = வளைதல் பொருள் வேர். உல் > குல்> கொள் > கொடு = வளைவு , கோடு = வளைந்த கோடு.
கொரோனா > வட்டமான மணிமுடி ( மகுடம்) எனப்பொருள்.. அந்த வடிவில் இந்த நச்சு நுண்ணி இருப்பதால் இப்பெயர் இட்டனர். கொவிட் 19> அந்த நுண்ணிகளின் ( microorganism) குடும்பத்தின் இன்றைய பிறப்பு. அனைத்தும் ஒரே குடும்பம் . சிறப்புப் பெயராக கொவிட் 19 எனச் சொல்லலாம்.
வளைதல் பொருளில் தமிழ் வேரினை மூல வேராகக் கொண்டு இந்தோ ஐரோப்பிய மொழியில் crown , corona கொரொனா என வழங்கும் இச்சொல் தமிழில் முற்பட்டு முன் தள்ளி முதன்மையாகி விளங்குதல் பொருளில் மகுடம் எனப்பட்டது.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியில் தரப்பட்டுள்ள விளக்கம் பின்வருமாறு :
மகுடம் - magudam, பெ.(n.) 1. மணிமுடி; crown. 2. தலைப்பாகை வகை. ; head-dress, turban, cresft, tiara. 3. புனைவான உச்சி; anything crest - like, as the ornamental topof a temple car. 4.பல பாடல்க ளில் ஒரே வகையில் வரும் முடிவு; finishing part of stanzas in a poem. in the form ofarefrain.5. கட்டுரை முதலியவற்றின் தலைப்பு; title, caption. 6. சிவாகமம் இருபத் கெட்ட னுள் ஒன்று ; an ancient Saiva scripture, one of 28 civakamam, q.v.7. ஓலைச் சுவடியின் மணி முடிச்சுக் கொண்டை ; ornamental button of an olai book. 8. மாதர் காதணி வகை ; a ear-ornament worn by women 9. மத்தளம் முதலிய வற்றின் விளிம்பு; edge of drums.
; a kind of drum. 11. ஒளிமங்கல்; dimness 10. பறை வகை
of vision, obscurity.
(முகடு (முகடம்) - மகுடம்.]
மகிழ் - மகிழம் முகுளம் - முகுடம் - மகுடம். மொட்டுப் போன்ற கூம்பிய மணி முடி.
முகம் - முகடு = மூக்குப்போன்ற கூரையுச்சி. முகடு = உச்சி, வீட்டின் உச்சி, வாணமுகடு, தலை, உயர்வு. முகடு (முகடம்) > மகுடம். இனி, முகிழ்> முகிழம் - முகுளம் முகுடம் மகுடம் = மொட்டுப் போற் கூம்பிய மணிமுடி என்றுமாம்.
பாவாணரின் வடமொழி வரலாற்றில்,
மகுடம் - மகுட (t ) முகுட (t.)
முகம் - முகடு = மூக்குப்போன்ற கூரையுச்சி. முகடு =1. உச்சி. "முகடுதுமித் தடுக்கிய பழம்பல் லுணவின்” (பெரும்பான் 2. வீட்டின் உச்சி. 3. வானமுகடு. "வானெடு முகட்டையுற்றனன்” (கம்பரா, மருத்து. 30). 4. தலை. "முகடூர் மயிர்கடிந்த செய்கை யாரும்" (தேவா. 936 : 10). 5. உயர்வு. "முனிமை முகடாய மூவா முதல்வ ன்” (சீவக. 1609). முகடு - (முகடம்) - மகுடம் = உச்சி மயிர்முடி, மணிமுடி, தேர்முடி, ஒருபொருட் பலபாட்டுப் பொது முடிவு.
இனி, முகிழ் - முகிழம் - முகுளம் - முகுடம் - மகுடம் = மொட்டுப்போற் கூம்பிய மணிமுடி என்றுமாம்.
“மாமொட் டொடிந்து........மான்றேர் சிதைய” (பாரத. நான்கா. நாள். 24).
பேரா. பரோ. இச் சொல்லைத் தென்சொல்லென்றே கூறுதல் S160T5. (The Sanskrit Language, p. 381).
முகுடம் பிறை வடிவினதென்றும், கிரீடம் குவிந்ததென்றும், மௌலி மும்முனையதென்றும் மா. வி. அ. கூறும்.
என்பது மகுடம் பற்றிய விளக்கமாகும்.
கொரோனாவின் தமிழ்ப்பெயரைப பொருள் ஆய்ந்து புதுவதாக வைத்தல் நலம். முன்பு இதே வட்டப் பொருளில் குருணை நச்சில் எனப் பெயர்ச்சூட்டலாம் என நான் எண்ணியதுண்டு. வட்ட வடிவில் உள்ள நச்சு மருந்து குருணை.. இப்பெயர் தமிழகத்தில் வழக்கில் உண்டு.
அல்லது கோறல் >> கொல்லுதல் எனும் பொருளைத் தரும் வகையில் கோறு+ அனம் > கோறனம் ... எனவும் அமைத்துப் பார்த்தேன்.
இவ்வாறு அமைத்தால் உயிர்க்கொல்லி நச்சில் எனும் பொருளில் ஆங்கிலச் சொல்லுக்கு ஒப்பிய ஒப்பொலிச் சொல்லாக்கக் கோட்பாட்டின் வழி சொல்லமையும். இருப்பினும் தனிச்சொல்லாகவும் இனிய சொல்லாகவும் சொல்லுதற்கு எளியதாகவும் இருத்தல் வேண்டும் என்பதால் கோறனி நச்சில் என ஒப்பொலி முறையில் பெயர் வைக்கலாம் எனக் கருதுகின்றேன்.
( நச்சில்= வைரசு)
உல்> குல் = குத்தல் பொருள் வேர். உல்> குல்> கொல் > கோறு > கோறல் = கொல்லுதல் .
அதே வேளை உல்> குல்>கொல்> கோறு> கோறனம் > கோறனி என வளைவுப் பொருளிலும் இச்சொல் அமையும்.
இங்குக் கொல்லல் கருத்தும் வளைவு கருத்தும் இயைந்து பொருந்தி வரும்.
சொல்லாய்வு அறிஞர் இராம். கி அவர்கள் கொற்றம் எனும் சொல்லுக்கு விளக்கம் தருகையில் அகரமுதலிகளில் பயிலாத வளைவுப் பொருளில் அமைந்த கோட்டை என விளக்கஞ் செய்தார். கொல் + து = கொற்று > கொற்றம் என ஒரு கட்டுரையில் விளக்கியிருந்தார். இங்குக் கொல் > கொற்று என வளைவு பொருளில் திரிதல் முறையைக் காட்டியதே நமக்குச் சிறந்த காட்டாகும்.
வளைவு பொருளில் தமிழில் அமைந்த வேறு சில சொற்களை இங்கு ஒப்பீட்டுகாகக் காணலாம்.
பாவாணரின் வேர்ச்சொல் கட்டுரை
குல் - (குர்) - குரங்கு. குரங்குதல் = வளைதல். “இலைப் பொழில்குரங்கின’’ (சீவக. 657). குரங்கு = வளைவு. “குரங்கமை யுடுத்த மரம்பயி லடுக்கத்து’’ (சிலப். 10 157). 2. கொக்கி. OE. cranc, crinc, E. crank.
குரவை = வட்டமாக நின்று பாடியாடுங் கூத்து.
Gk. koros (orig. a dance in a ring). L. chorus, E. chorus, choir, quirs.
குருளுதல் = சுருளுதல். “குருண்ட வார்குழல்’’ (திருவிசை. திருவாலி. 1:3). குருள் = 1. மயிர்ச்சுருள். 2. பெண்டிர் தலைமயிர் (பிங்.). வ. குருல. LG., Du., O. Fris. krul, G. krol, OE. crol, crul, E. curi.
குருகு = 1. வளையல். “கைகுவி பிடித்துக் குருகணி செறித்த’’ (கல்லா. 44 22). 2. வளைந்த கழுத்துள்ள நீர்ப்பறவைப் பொது. 3. நாரை. “வான்பறைக் குருகின் நெடுவரி பொற்ப’’ (பதிற். 83: 2). 4. ஓதிமம் (அன்னம்). “நீரொழியப் பாலுண் குருகிற் றெரிந்து’’ (நாலடி. 135).
குரகம் = நீர்வாழ் பறவைப் பொது.
AF., OF. grue (crane), OHG., OS. krano, OE. cran, E. crane.
குரங்கு - குறங்கு = கொக்கி. குறங்கு - கறங்கு. கறங்கல் = 1. வளைதடி (அக. நி.). 2. சுழற்சி (பிங்.). கறங்குதல் = 1. சூழ்தல். “கறங்கிருள் மாலைக்கும்’’ (திருவள். 34). 2. சுழலுதல். “பம்பரத்து.... கறங்கிய படிய’’ (கந்தபு. திருநகரப். 28). ம. கறங்ஙு.
கறங்கு = காற்றாடி. “காண்முக மேற்ற........ கறங்கும்’’ (கல்லா. கணபதி). கறங்கோலை = ஓலைக்காற்றாடி.
“கறங்கோலை கொள்ளிவட்டம்’’ (திருமந். 2313).
ON. hringr, OHG., OS., OE. hring, E. ring.
குர் - குறு - குறள் - குறண்டு. குறண்டுதல் = 1. வளைதல்.
2. சுருண்டுகொள்ளுதல். குறண்டல் = கூனல்.
2. சுருண்டுகொள்ளுதல். குறண்டல் = கூனல்.
குறடு = வளைந்த பற்றுக் கருவி, குறடுபோற் பற்றும் நண்டு.
தெ. கொரடு.
குறழ்தல் = குனிதல். “அவனாங்கே பாராக் குறழா’’ (கலித். 65:10)
குறு - கிறு - கிறுக்கு = தலச்சுற்று, கோட்டி (பைத்தியம்). கிறுக்கன்= பித்தன். தெ. கிறுக்கு.
கிறுகிறுத்தல் = சுற்றுதல், தலைச்சுற்றால் மயக்கமாதல். தெ. கிரகிர (giragira). கிறுகிறுவாணம் = காற்றாடிபோற் சுற்றும் பொறிவாணம்.
சொல்லாய்வுப் பேரறிஞர் கு. அரசேந்திரனார் அவர்களும் கொரோனா எனும் சொல்லுக்குத் தனித்து ஆய்வு விளக்கமே செய்துள்ளது குறிப்பிடத் தக்கது. அவர் தமது விளக்கத்தில்
கொரோனா என்ற சொல்லுக்குத் தமிழே மூலமாகும். குட என்ற தமிழ்ச் சொல்லுக்கு வளைவு என்பது பொருள். நாம் தண்ணீர் எடுப்பதற்குப் பயன் படுத்துவது குடமாகும். வண்டியின் சக்கரத்தில் அச்சாணி வெளி வராமல் மூடியிருக்கும் பொருளையும் குடம் என்பர். குட நாடு என்றால் மலை நாடு என்பது பொருள். மலை மேடு பள்ளமாக வளைந்து நெளிந்து இருப்பதால் குட, குட்டம், குடகு , கோடு என்று வளைவு பொருளில் சொல்லமைத்திருந்தனர். திருச்செங்கோடு, விளவங்கோடு, அரவங்கோடு என்றெல்லாம் மலையைக் குறித்துள்ளனர். இதற்கு வளைவுப் பொருளே காரணம். குட , கூடு, கொட்டில், கொடுக்கு, குடில், குடிசை அந்தக் காலத்தில் வட்டமாக சுவர் வைத்துக் கட்டியதால் பெயரமைத்தனர். குடம்பை என உடல் கூட்டினைக் குறிப்பர். குடம்பை , டகரம் ரகரமாகத் திரிதல் முறையில் குரம்பை எனவும் திரியும். இதுவும் வளைவுப் பொருளில் அமைந்ததே. குடங்கர் எனுஞ் சொல்லும் வட்டமாகக் கட்டப்பட்ட வீட்டுக்கு இருக்கின்றது. இச்சொல் திருக்குறளில் இடம்பெற்றுள்ளது. குட எனுஞ் சொல் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்குச் சென்று குர என வளைவுப் பொருளிலேயே வழங்குகின்றது. தட > தர, வந்திடு > வந்திரு, பட்டடை > பட்டரை , அடுப்பங்கடை> அடுப்பங்கரை, தடி ( வெட்டுதல்) > தரி எனத் தமிழிலேயே திரிதல் முறையைக் காண்கிறோம். படகு > பர்கு என பிராகுயி மொழியில் திரிந்துள்ளது. கிரிக்கெட் வளைந்த தடி என்றே ஆங்கிலத்தில் விளக்கப்படுகின்றது. Crown என்ற மணிமுடி எனப் பொருள் தரும் சொல் வளைந்து அழகிய வடிவில் காட்சி தருவதால் வளைவுப் பொருளிலேயே அமைந்தது. கொரோனா கிரௌன் எனுஞ் சொல்லோடு உறவுடையதாகும். 1965 இல் இச்சொல் இந்த நச்சிலுக்குப் பெயராகச் சூட்டப்பெற்றது. இதனைக் கண்டுபிடித்தவர்கள் தைரல் , பைனோ எனும் பெயருடைய இரு அறிவியலாளர்கள் ஆவர். இந்த நச்சிலைப் பற்றி அவர்கள் அக்கால் எழுதிய நூலில் விளக்கியுள்ளனர். ( Tyrrell DA, Bynoe ML. Cultivation of viruses from a high proportion of patients with colds. Lancet. . >
எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆய்வாளர் திரு மணிவண்ணன் அவர்கள் சொல்லாய்வு முக நூல் குழுவில் முள்முடித் தொற்றி எனப் பெயரமைத்திருந்தார். இச்சொல் அந்த நச்சிலின் உருத்தோற்றத்தை நேரடியாகவே விளங்க வைக்கும் வண்ணம் உள்ளதாகவே நான் எண்ணுகின்றேன். இது நற்றமிழ்ச் சொல்லாகவும் இருக்கின்றது. இலக்கண வழக்கில் சொல்வதாக இருந்தால் முண்முடி எனலாம். தொற்றுவதற்கும் ஒட்டுவதற்கும் ஏற்றவகையில் மேற்பரப்பில் முள் போல் நீட்டிக் கொண்டிருக்கும். இந்தச் சொல்லை அமைத்த பெருமைக்குரியவர் திரு. மணிவண்ணன் அவர்களே. அன்னாருக்கு எம் நன்றி.
வைரஸ் என்பதற்குத் தமிழில் நச்சில் எனும் சொல்லையே நான் வழங்கியிருந்தேன். நச்சுயிரி நஞ்சுள்ள அனைத்து உயிரிகளுக்கும் பொதுவானச் சொல்லாகும். எனவே இல் எனும் சிறுமைப் பின்னொட்டைப் பயன்படுத்தி நச்சில் எனின் மிகப் பொருந்துவதாகும். நுண்மி, நுண்ணி என்பன மிகச் சிறிய நுண்ணுயிர்களைப் பொதுவாகக் குறிக்கும் சொல்லாகும். Micro organism என்பதற்கு இவைப் பொருந்தும்.
முடிவாக Corana virus முண்முடி நச்சில் எனப் பொருள் தரினும் தமிழில் வளைவுப் பொருளில் புதுப்புனைவாகவும் ஒப்பொலி முறையிலும் கோறனி நச்சில் எனப் பெயரமைப்பதே பொருந்துவதாக நான் கருதுகிறேன். இது தனிச் சொல்லாகவும் சொல்லுதற்கு எளியதாகவும் இனியதாகவும் அமையும். பயன்படுத்த விரும்புவார், முனைவார் பயன்படுத்தட்டும். இத்தகு சொல்லாக்கத்தை வழங்குதற்கு என்னைப் பெரிதும் தூண்டிய ஊக்கப்படுத்திய என் கெழுதகை பேருறவார் தூய்தமிழ் நெறியர் ஐயா ந. கருப்பையா அவர்கட்கும் எம் கெழுதகை ஆருயிர்த் தோழர் தமிழியல் சொல்லாய்வறிஞர் இர. திருச்செல்வனார் அவர்கட்கும் எம் நெஞ்சார்ந்த நன்றி.
இரா.திருமாவளவன்
No comments:
Post a Comment