தொடர்பாளர்கள்

Thursday, December 13, 2012


தலைநகரில் மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் ஏற்பாட்டில் தமிழ் நெறி மாணவர்  பண்பாளர் விழா 2012

மலேசியத்
தமிழ் நெறிக் கழகத்தின் ஏற்பாட்டில் தமிழ் நெறி மாணவர்  பண்பாளர் விழா 2012 எதிர்வரும் 22.12.2012 ஆம் நாள் காரிக் கிழமை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பிரிக்பீல் விவேகானந்தர் தமிழ்ப் பள்ளி கந்தையா மண்டபத்தில் 8  மணி தொடங்கி மாலை 7 மணி வரை மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெறவுள்ளது. நாடு தழுவிய அளவில் இயக்க மாணவர்களும் குடும்பங்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிப்பர் . இவ்விழா இம்முறை 14 ஆவது ஆண்டாக நிகழ்த்தப் படுவது  குறிப்பிடத்தக்கது.

 தமிழ், தமிழர், தமிழீழம், தமிழ் தேசியம் தொடர்பான பல்வேறு படைப்புகளை இயக்க மாணவர்கள்  திறம்பட படைக்க உள்ளனர்சிறந்த தமிழிய தலைமுறையை உருவாக்கும் நோக்கிலும் தமிழிய உணர்வுடைய இளைய தலைமுறையையும் குடும்பங்களையும் ஒருங்கிணைக்கவும் கட்டமைக்கவும் இவ்விழா கடந்த பதினான்கு ஆண்டுகளாக எழுச்சியுடன் கொண்டாடப் பட்டு வருகின்றது. இவ்விழாவில் கலந்துகொள்ளும் மாணவர்கள் அனைவரும் தூய தமிழ்ப் பெயர் தாங்கியவர்களாக  இருப்பர் .

 மாணவர்களின் தமிழ் சார்ந்த எழுச்சி நடனங்களும் , எழுச்சி நாடகங்களும் இவ்விழாவில் இடம்பெறவுள்ளன . வண்ணம்   தீட்டும் போட்டி , தட்டி, சுவரொட்டி வரையும் போட்டி, திரட்டேடு அணியம் செய்யும் போட்டி கணினி ஒளிகீற்று விளக்கப் போட்டி முதலான பல்வேறு தமிழிய போட்டிகள் இவ்விழாவில் நிகழ்வுறவுள்ளன. முன்பதாகவே பதிவு செய்து விட்ட இயக்க திருக்குறள் வகுப்பு  மாணவர்கள் மட்டுமே இப்போட்டிகளில் பங்குபெற ஒப்புதல் அளிக்கப்படுவர்.

தொழில்முனைவர் வெள்ளையப்பன் அவர்களால் தொடக்கி வைக்கப் படும் இவ்விழாவினை குமுகாயச் சுடர் டத்தோ அசி தசுலிம் அவர்கள் நிறைவு செய்து வைப்பார்கள். விழாவில் பல்வேறு தமிழிய நூல்களும், ஒலி , ஒளி  குறுவட்டுகளும் விற்பனைக்கு வைக்கப் படும். தமிழிய  உணர்வாளர்களும் தேசிய அளவிலான இயக்க உறுப்பினர்களும்  இவ்விழாவில் கலந்து சிறப்பிக்க அழைக்கப் படுகின்றார்கள்.

தொடர்புக்கு : கனல்வீரன் தேசிய பொதுச் செயலர் : 0122466263 தேசிய பொருளர் மு.தமிழ்வாணன்  0164171441

No comments:

Post a Comment

There was an error in this gadget
There was an error in this gadget