தொடர்பாளர்கள்

Wednesday, December 15, 2010

மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் தமிழ்நெறி மாணவர் பண்பாளர் விழா 2010


மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் முதன்மை ஆண்டு நிகழ்வுகளில் குறிப்பிடத் தக்க ஒன்றாக விளங்கும் நிகழ்வே தமிழ் நெறி மாணவர் பண்பாளர் விழாவாகும் . கடந்த பதினோரு ஆண்டுகளாக மிகச் சிறப்பாக நிகழ்த்தப் படும் இந்நிகழ்வில் நாடு தழுவிய அளவில் வாழ்கின்ற இயக்க குடும்பங்களும் இயக்கப் பிள்ளைகளும் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்து கொண்டு பங்களித்துச் சிறப்பு செய்யவர்.

கலந்து கொள்ளும் மாணவர்கள் அனைவரும் தூய தமிழ்ப் பெயரையே சூட்டியிருப்பர். இவர்களில் பெரும்பாலோர் பிறப்பு ஆவணத்திலேயே தூயதமிழ்ப் பெயரைத் தாங்கியவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. தூய தமிழ்ப் பாடல் போட்டி, தமிழிய சிந்தனை தாங்கிய பேச்சுப் போட்டி, தமிழ், தமிழர், தமிழீழப் பாடல்களுக்கான எழுச்சி நடனங்கள், கணினி ஒளிககீற்றுப் போட்டி, சுவரொட்டி வரையும் போட்டி, தமிழுணர்வு நாடகங்கள் முதலானவை இந்நிகழ்வில் சிறப்புற நடைபெறும். தமிழர் வரலாற்றை வெளிப்படுத்தும் திரட்டேடு
அணியப் போட்டியும், தமிழ் கொள்கை வரிகளைத் தாங்கிய தட்டி உருவாக்கும் போட்டி, வண்ணம் தீட்டும் போட்டி முதலானவையும் இடம்பெறும்.

இம்முறை 12 ஆவது முறையாக மலேசியாவில் சொகூர் மாநிலத்தில் யாக்யா அவாள் தமிழ்ப் பள்ளியில் இவ்விழா நிகழ்வுறும். குறள்நெறிச்செல்வர் டத்தோ ஈசுவரன் ( விங் ஆப் நிறுவன நிருவாக இயக்குனர்) அவர்கள் விழாவை திறந்து வைத்து திறப்புரை நிகழ்த்துவார். செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராசன் அவர்கள் நிறைவு செய்து நிறைவுரை நிகழ்த்துவார். மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் அவர்கள் தலைமையேற்று தலைமையுரை நிகழ்த்துவார். இத்திங்கள் 18 .12 .2010 ஆம் நாள் காரிக் கிழமை காலை 8 .30 லிருந்து மாலை 6 .வரை நிகழ்வுறும் இந்நிகழ்விற்கு தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு தமிழின்பம்
பெற அழைக்கப் படுகின்றார்கள்.

No comments:

Post a Comment