தொடர்பாளர்கள்
Friday, November 10, 2017
Wednesday, November 8, 2017
பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா?
– வாலாசா வல்லவன்
வழக்கறிஞர் பா. குப்பன் என்பவர் ‘தமிழரின் இனப்பகை ஈ. வெ. ரா’ என்ற ஒரு நூலை எழுதியுள்ளார். அந்நூலில் பல வரலாற்றுப் பொய்களையும் பல வரலாற்றுத் திரிபுகளையும் செய்துள்ளார். அவர் சமீபகாலமாக ம.பொ.சியின் பக்தராக மாறியுள்ளதால் ம.பொ.சியின் வரலாற்றுப் புரட்டல்களை அவரது சீடகோடிகள் இன்றும் செய்து வருவதில் வியப்பொன்றுமில்லை.
தமிழ் மக்களுக்கு உண்மை வரலாறுகள் தெரியவேண்டும். தமிழினத்திற்கு உண்மையான எதிரிகள் யார், உண்மையான தோழர்கள் யார் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டால்தான் நாம் மேற்கொண்டிருக்கும் இலட்சியப் பயணத்தின் இறுதியில் வெற்றி கொள்ளமுடியும். பா.குப்பன் தன்னுடைய நூலின் தொடக்கத்திலேயே என்னுரையில் பக் 31இல் (அவர் தமிழ் எண்ணில் பக்க எண் கொடுத்துள்ளார்)
“இமய மலைக்கும் விந்திய மலைக்கும், கங்கை ஆற்றுக்கும் சிந்து ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த ஆரிய வர்த்தத்திலிருந்த சூத்திரப் பட்டத்தைத் தமிழர்களுக்குச் சூட்டி இழிவுபடுத்தினார் ஈ.வெ.ரா. தமிழர்களைப் பிராமணர்கள் ‘சூத்திரன்’ என்று அழைத்ததாகக் கூறிய ஈ.வெ.ரா. ‘சூத்திரர், சூத்திரர்’ என்று திரும்பத் திரும்பச் சொல்லித் தமிழரிடம் ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கினார்” என்று கூறுகிறார். இது எவ்வளவு உலக மகா பொய் என்பது வரலாறு படித்த அனைவருக்கும் தெரியும்.
திருவள்ளுவர் காலத்திலேயே 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டில் ஆரியம் ஊடுருவித் தமிழர்களை இழிவுபடுத்தியது. என்பதற்கு திருவள்ளுவரே சான்று.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”
என்று திருவள்ளுவர் எழுத வேண்டிய காரணமென்ன? பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு இருந்ததால் தானே. அதுமட்டுமன்றி 1500 ஆண்டுகளுக்கு முன்பு அரசாட்சி செய்த பல்லவ மன்னர்கள் மனுதர்மப்படி ஆட்சி நடத்தியுள்ளதையும், 1000 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி செய்த இராசஇராச சோழன் பல ஆயிரக்கணக்கான வட நாட்டு ஆரியப் பார்ப்பனர்களை வரவழைத்து அவர்களுக்குப் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைப் ‘பிரம்மதேயம்’, ‘சதூர்வேதிமங்கலம்’ என்கிற பெயர்களில் தானமாகக் கொடுத்து, அவர்கள் சொல்படி (நால்வருணத் தர்மப்படி) ஆட்சி நடத்தியதையும் டாக்டர் இராசமாணிக்கனாரின் ‘பல்லவர் வரலாறு’, சாதாசிவ பண்டாரத்தாரின் ‘பிற்காலச் சோழர் சரித்திரம்’, முதலான நூல்களில் கல்வெட்டு ஆதாரங்களோடு உள்ளன.
மேலும் பாண்டியர் கால ஆட்சிகளிலும் பார்ப்பன நால் வருண ஆட்சியே நிலை பெற்றிருந்தது. ஒரு பாண்டிய மன்னனுடைய பெயரே ‘முதுகுடுமிப் பெருவழுதி’ ஆகும். ஒரு சோழ அரசனுடைய பெயர் ‘மனுநீதிச் சோழன்’ என்றும் உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் தமிழ் அரசர்கள் அரசு ஆண்ட பொழுதிலும் வேற்று மொழி அரசர்கள் தமிழகத்தில் அரசு ஆண்ட போதிலும் ஆரியப் பார்ப்பன ஆதிக்கமும் அவர்களுடைய செல்வாக்கும் உச்ச நிலையில் இருந்ததைத் தமிழக வரலாறு நன்கு உணர்த்துகிறது. ஆனால் குப்பன் கேட்கிறார் எந்த ஆரிய மன்னன் தமிழ் நாட்டை ஆண்டான் என்று. இவருடைய வாதத்தை என்ன என்று சொல்வது. வழக்குரைஞர் பா.குப்பன் எழுதுகிறார் வடக்கே இருந்த நால்வருணத்தையும் சூத்திரப் பட்டத்தையும் பெரியார் கொண்டு வந்து தமிழர்மேல் சுமத்துகிறார் என்று. இது எவ்வளவு பச்சையான பொய்யும் வரலாற்றுத் திரிபுமாகும்.
பா.குப்பன் ஒரு வழக்குரைஞர். இந்துச் சட்டத்தைப் படித்திருப்பார் என்று நினைக்கிறேன். இந்துச் சட்டத்தின் முகவுரையிலேயே எடுத்த எடுப்பிலேயே இந்துக்களை நான்கு வருணங்களாகப் பிரித்து உள்ளதைத் தெளிவாக அறியலாம். பெரியார் பிறப்பதற்கு முன்பே ஆங்கிலேயர்கள் 1863 ஆம் ஆண்டிலேயே இந்துச் சட்டத்தைத் தொகுத்தார்கள். அதன் பிறகு 1955 இல் அதில் சில மாற்றங்களை இந்திய அரசு செய்தது. இன்றும் பார்ப்பனர்கள் பூசாரிகளாக உள்ள பெரிய கோவில்களில் பிறசாதியினர் பூசை செய்ய முடியாது. தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
சூத்திரப் பட்டத்தை ஒழிக்கப் போராடிய பெரியாரைப் பார்த்துத் தமிழர்களிடம் தாழ்வு மனப் பான்மையை ஏற்படுத்தினார் என்பது எவ்வளவு புரட்டு. குப்பனுடைய பாட்டைனையும், பூட்டனையும் 10 வயதுப் பார்ப்பன இளைஞன் கூட டே, போடா, வாடா என்று தான் அழைத்தான். அவர்கள் என்னசாமி என்றுதான் கூறினார்கள். இந்த நிலைமையை ஒழித்தது யார்? பெரியாரல்லவா? தமிழர்களுக்குத் தன் மான உணர்ச்சி யூட்டிய பெரியாரைப் பார்த்துத் தாழ்வு மனப் பான்மையை உருவாக்கினார் என்பது குப்பனுடைய பேதமையைக் காட்டுகிறது.
குப்பன் இந்த நூலில் பெரியார் மீது வைத்திருக்கும் மிகப் பெரிய குற்றச் சாட்டு எல்லைப் போராட்டத்தில் பெரியார் துரோக மிழைத்து விட்டார் என்பதுதான். அந்த நூலில் இச்செய்தி பல பக்கங்களில் உள்ளது.
அக்குற்றச் சாட்டில் ஒரு துளி கூட உண்மை இல்லை. ம.பொ.சி ஒரு பொய்யர், வரலாற்றுப் புரட்டர் அவர் தனக்கு, சாதகமாகவும் திராவிடர் இயக்கங்களுக்கு விரோதமாகவும் உண்மைக்கு மாறான பல செய்திகளை எழுதியுள்ளார். ‘புதியத் தமிழகம் படைத்த வரலாறு’, ‘எனது போராட்டம்’ ஆகிய நூல்களில் அப்பொய்களை எழுதியுள்ளார். அதைப் படித்துவிட்டு ம.பொ.சியின் சீடர்கள் அப்பொய்களையே திரும்பத் திரும்பக் கூறிவருகின்றனர்.
உண்மையில் எல்லைப் போராட்டம் நடத்தியவர்கள் அதை ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டமாக நடத்தவில்லை. ம.பொ.சி. வடக்கெல்லை போராட்டம் நடத்தியபோது ‘தமிழரசுக் கழகம்’ என்ற பெயர் வைத்துக் கொண்டிருந்தாலும் 1953இல் காமராசர் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் வரையில் காங்கிரசுக் கட்சியில்தான் இருந்தார். காங்கிரசுக் கட்சியை விட்டு வெளியே வந்த பிறகும் கூட அவருடைய சிந்தனைப்போக்கு இந்திய தேசியத்திலேயே குடிகொண்டிருந்தது. அதற்கு அவருடைய ‘எனது போராட்டம்’ நூலே சாட்சி.
தெற்கெல்லைப் போராட்டம் நடத்திய மார்ஷல் நேசமணி ‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு’ என்ற பெயரிலேயே அமைப்பை வைத்திருந்தார். கொச்சி, திருவிதாங்கூரிலுள்ள தமிழ்ப் பிரதேசங்களைத் தமிழ்நாட்டுடன் இணைப்பது மட்டுமே எங்கள் குறிக்கோள். மற்றபடி காங்கிரசுக்கும் எங்களுக்கும் கொள்கை வேறுபாடு கிடையாது என்று வெளிப்படையாக அறிக்கை விட்டவர் (நம் நாடு 1-9-54). எல்லைப்போராட்டம் நடத்தியவர்கள் அடிப்படையில் இந்தியத் தேசிய வாதிகளாகவே இருந்தார்கள். நேசமணி 1957இல் இந்தியத் தேசிய காங்கிரசில் சேர்ந்தார், வடக்கெல்லைப் போராட்டத் தளபதி கே. விநாயகம் 1952 முதல் பிரஜா சோசலிஸ்டு கட்சி சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர். 1957 இல் இந்தியத் தேசியக் காங்கிரசில் சேர்ந்தார். இருவரும் 1957 இல் காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற உறுப்பினர் ஆனார்கள். ம.பொ.சி கடைசியாகக் காங்கிரசில் சேர்ந்தார். ஆக இவர்களில் யாரும் தமிழ் இன விடுதலைக்கான உண்மையான போராளிகள் அல்ல.
இனி எல்லைப் போராட்டங்களைக் குறித்துச் சற்றுப் பார்ப்போம். பிரதமர் நேரு 1953இல் அமைத்த நீதிபதி வாஞ்சு குழு தன் பரிந்துரையில் சென்னை ஆந்திராவின் தற்காலிக தலைநகராக 3-5 வருடங்கள் இருக்க வேண்டும். (அறிக்கை பக் 6) ஆந்திராவின் உயர்நீதி மன்றம் 5 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சென்னையில் இருக்கவேண்டும். (அறிக்கை பக் 8) சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரி பொறியியல் கல்லூரிகளில் ஆந்திர மாணவர்களுக்கு 36சதவீத இடங்களை 25 ஆண்டுகளுக்கு ஒதுக்கித் தரவேண்டும். (அறிக்கை பக் 12-13) பிரிந்து போகும் ஆந்திர மாநிலம் புதிய தலைநகரை உருவாக்குவதற்குச் சென்னை மாகாண அரசு இரண்டரை கோடி ரூபாய் தர வேண்டும். (அறிக்கை பக் 26) இது வாஞ்சிக் குழுவின் பரிந்துரையாகும். தமிழகத்தின் வடக்கெல்லையான சித்தூர், திருப்பதியையும் இக்குழுதான் ஆந்திராவிற்கு அளித்தது.
இந்தப் பரிந்துரைகளைக் கண்டித்துத் தமிழ்நாடே கொதித்து எழுந்தது.
ஆந்திரா பிரச்சனை குறித்துத் திராவிடர் கழக மத்திய நிர்வாகக்குழு 11-1-1953இல் நிறைவேற்றிய தீர்மானம்
(எ) ஆந்திர நாடு பிரிவினை விஷயத்தில் ஆந்திரர்கள் பிடிவாதமாக இருப்பதால் ஆந்திரநாட்டைப் பிரிக்கும் விஷயத்தில் காலதாமதம் செய்யாமல் உடனடியாகப் பிரித்து விடவேண்டுமென்று இக்கமிட்டி தெரிவித்துக் கொள்ளுகிறது.
அப்படிப் பிரிப்பதில் ஆந்திரநாட்டினரிலேயே சிலர் பிரிவினைக்கு முட்டுக்கட்டை போடுகிற மாதிரியில் தாங்கள் பிரிந்துபோன பின்பும் எஞ்சியுள்ள சென்னை நாட்டில் தங்களுக்குச் சில உரிமையோ சலுகையோ அதாவது பொது நீதிமன்றம், பொது கவர்னர் முதலியவை சென்னையிலிருக்க வேண்டுமென்று கேட்பதையும், சென்னையைத் தற்காலிக தலைநகரமாக இருக்க இடம் தரவேண்டுமென்பதையும், இக்கூட்டம் கண்டிப்பதுடன், அப்படிப்பட்ட உரிமைக்கோ சலுகை முதலியவற்றிற்கோ மத்திய சர்க்கார் இடம் கொடுக்குமானால் தமிழர்களின் அதிருப்திக்கும், கிளர்ச்சிக்கும் ஆளாகவேண்டி நேரிடுமென்று மத்திய சர்க்காருக்கு எச்சரிக்கை செய்கின்றது.
இதே சமயத்தில் திராவிடர் கழகம் ராஜ்ய பிரிவினையைப் பற்றிய தனது கருத்தைக் தெரிவித்துக் கொள்ளுகின்றது. அதாவது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி நாடுகள் சேர்ந்த சென்னை ராஜ்யம் மத்திய (இந்திய யூனியன்) ஆட்சியின் எவ்வித சம்பந்தமுமில்லாத தனிச் சுதந்திர ராஜ்யமாகப் பிரிக்கப்படவேண்டும் என்பதே அதன் முடிந்த கருத்தாகும். இந்த நிலையில் சென்னை ராஜ்ஜியத்திலிருந்து எந்த மொழி நாடு பிரிந்து போனாலும் மீதியுள்ள மொழி நாடு அல்லது நாடுகள் பூரண சுதந்திரமுள்ள தனி அரசு நாடாக ஆக்கப்பட வேண்டுமென்று முடிவு செய்து கொண்டு இருக்கிறதுடன் இந்த கொள்கைக்குக் கட்டுப்பட்டுப் பிரிவினைக் கிளர்ச்சி செய்யும் எந்த மொழி நாட்டாருடனுடம் யாருடனும் திராவிடர் கழகம் கூடுமான அளவு ஒத்துழைக்க முன்வரும் என்று தெரிவித்துக் கொள்கின்றது.
பி) எந்தக் காரணத்தைக் கொண்டும் மத்திய அரசாங்கத்தார் சென்னை நகரத்தையும் அதைச் சேர்ந்த எந்த பாகத்தையும் சேர்த்து கமிஷனர் ராஜ்யமாக (Part C State) ஆக்கவோ கூடாதென்றும் இக்கமிட்டி வற்புறுத்தித் தெரிவித்துக் கொள்ளுகிறது.
(சி) பிரிட்டிஷ் ஆட்சி இருந்த காலத்தில் அவர்கள் நிர்வாக வசதிக்கு ஆக அமைத்துக் கொள்ளப்பட்ட ஜில்லா எல்லையில் தமிழ் பெரும்பான்மையாகப் பேசப்படும் பிரதேசத்தையும், தெலுங்கு பெரும்பான்மையாகப் பேசப்படும் பிரதேசத்தையும் ஒன்றாக ஒரே ஜில்லாவாக அமைத்திருந்தினர். சித்துhர் ஜில்லாவில் திருத்தணி முதலிய பெரும்பாலாக தமிழ் பேசும் மக்களடங்கிய பிரதேசங்கள் இருப்பதனால் இப்போது மொழியை அடிப்படையாகக் கொண்ட நாடே பிரிக்கப்படுவதனால் ஒரு மொழி பேசும் நாட்டுடன் வேறு மொழி பேசும் பெரும்பான்மையான மக்களைக் கொண்ட பிரதேசம் சேர்க்கப்படுவதென்பது மொழிவாரி பிரிவினை தத்துவத்திற்கே எதிர்ப்பானது என்பதோடு வேறு மொழி பேசும் மக்களுக்கும் இடையூறானது. ஆதலால் இந்த மொழிவாரி நாடு பிரிவினையில் சித்துhர் ஜில்லாவிலுள்ள தமிழ் மொழி அதிகமாகப் பேசும் பிரதேசத்தைக் கண்டிப்பாகத் தமிழ் நாட்டுடன் சேர்க்க வேண்டுமென்று இக்கமிட்டி தீர்மானிக்கிறது. (விடுதலை 12-1-1953)
1-2-53 ஆம் தேதி தமிழ் முஸ்லிம்கள் சார்பில் சென்னை கடற்கரையில் நடைபெற்ற “சென்னை தமிழருக்கே” என்ற சர்வக்கட்சி கூட்டத்தில் இலட்சகணக்கான மக்கள் மத்தியில் பேசிய பெரியார் “எங்களுடைய கொள்கைப்படி நாங்கள் பிரிவினை கேட்பது எல்லாம் இந்த மாதிரியான பிரிவினை அல்ல, நாடு பிரிய வேண்டும், எப்படிப்பட்ட பிரிவினை என்றால் பர்மா பிரிந்தது போல... அந்நியர் சுரண்டலற்ற தனி நாடு வேண்டும் என்பதுதான். ஆனால் பிரிய வேண்டுமென்பவர்களைச் சந்தோஷமாகப் பிரித்து அனுப்பிவிடுவோம். சுயநலக்காரர்களோடு சண்டை போட்டுக் கொண்டிருப்பதைவிட வெளியே அனுப்பிவிடுவது நல்லது.
மற்றபடி இரண்டு, மூன்று பிரச்சனைகள் சொல்லப்படுகின்றன; அதாவது ஆந்திரா ஐ கோர்ட், சர்க்கார் காரியாலயம், தலைநகர் முதலியவைகள் எல்லாம் சென்னையில் கொஞ்ச நாளைக்காவது இருக்க வேண்டும் என்கிறார்கள். எப்போது போகிறோம் என்று போகிறார்களோ, அவர்களுக்கு இங்கு என்ன வேலை? ஒரு வீட்டில் பாகப்பிரிவினை எல்லாம் செய்யப்பட்ட பிறகு சமையல் மட்டும் கொஞ்ச நாளைக்கு இங்கே செய்துகொள்கிறேன் என்பது என்ன நியாயம்?
அடுத்தபடியாக கமிஷனர் மாகாணமாக சென்னையை ஆக்கவேண்டும் என்று ஆந்திரர்கள் சொல்வதைப் பற்றிக் கூறவேண்டுமானால் மடத்தை விட்டுப் போகின்ற ஆண்டிக்கு நந்தவனத்தைப் பற்றி என்னக் கவலை. மற்றும் நஷ்ட ஈடு கேட்பது என்பதும் அப்படித்தான் நியாயமில்லாத கோரிக்கையாகும் என்று ஆந்திரர்களைக் கண்டித்துப் பேசினார். (விடுதலை 3-2-53)
சென்னை நகர மேயர் செங்கல்வராயன் முதலமைச்சர் இராசாசியைக் கலந்து ஆலோசித்து அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். முதலமைச்சர் இராசாசி அக்கூட்டத்திற்குப் பெரியாரையும் அழைக்கும்படி கூறினார்.பெரியாருக்கு மட்டும்தான் நேரு பயப்படுவார் என்பது இராசாசிக்கு நன்கு தெரியும். அக்கூட்டத்திற்குப் பெரியாரை அழைக்க மேயர் செங்கவல்வராயனும் ம.பொ.சியும் வந்தனர். பெரியார் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு இரண்டு இலட்சம் மக்களிடையே எழுச்சியுரை ஆற்றினார். ஆந்திரர்களின் அக்கிரமத்திற்கு முடிவுகட்ட ஓரு நாள் கடையடைப்பும் வேலைநிறுத்தமும் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள்விடுத்தார். அக்கூட்டத்தில் எம். பக்தவச்சலம், எஸ்.என். கரையாளர், பி.டி. ராசன், மீனாம்பாள் சிவராஜ், ம.பொ.சி. உட்பட பலர் பேசினர். மேயர் நன்றி கூறினார். (விடுதலை 17-2-1953) வாஞ்சு அறிக்கை வெளிவருவதற்கு முன்பிருந்தே அதன் செய்திகள் கசிய ஆரம்பித்த காலம் முதலே விடுதலையில் அதன் ஆசிரியர் குத்தூசி குருசாமி மத்திய அரசைக் கண்டித்தும், ஆந்திரர்களைக் கண்டித்தும், வாஞ்சு அறிக்கையைக் கண்டித்தும்7-1-1953 முதல் பல தலையங்கங்கள் எழுதியுள்ளார்.
ம.பொ.சியின் பொய்
“மேயர் தமது சொந்தப் பொறுப்பில் 16.3.53 அன்று திருவல்லிக்கேணி கடற்கரையில் கூட்டம் நடத்த முயன்றார். பெரியார் ஈ.வெ. ராவையும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்குமாறு ராஜாஜி கூறினார்.
நான் அவர்தான் சென்னை ஆந்திராவுக்குப் போனாலும் தமிழ் நாட்டிலிருந்தாலும் திராவிடத்தில் தானே இருக்கப் போகிறது என்று சொல்லிவிட்டாரே! தமிழ்நாட்டில் தான் இருக்க வேண்டுமென்ற கொள்கையின் அடிப்படையில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு அவர் வருவாரா?” என்றேன். இந்தக் கூட்டத்தில் நாயக்கர் பேசுவதை நான் விரும்புகிறேன் என்று அவரிடம் சொல்லுங்கள் அவர் வருவார் என்று சொன்னார். (ம.பொ.சி. எனது போராட்டம் பக் 623) இது எவ்வளவு பெரிய வரலாற்றுப் பொய். திராவிடர் கழக மத்தியச் செயற்குழு 11.1.1953இல் சென்னை தமிழகத்திற்கே சொந்தம் தற்காலிகத் தலை நகராகக் கூட ஆந்திராவிற்குக் கொடுக்கக்கூடாது என்று கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும். 1.2.53இல் சென்னை கடற்கரையில் இலட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் சென்னையில் ஆந்திரர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லையென்று கண்டித்துப் பேசிய பிறகும் 16.3.53 கூட்டத்திற்கு அழைக்க வந்த ம.பொ.சி இராஜாஜியிடம் கூறியதாக ‘எனது போராட்டம்’ என்ற நூலில் எழுதியுள்ளது எவ்வளவு பெரிய வரலாற்று மோசடி. உண்மையில் ம.பொ.சியின் குருநாதர் இராஜாஜி தான் சென்னை ஆந்திரர்களின் தற்காலிகத் தலைநகராக இருக்கவேண்டும் என்று விரும்பினார். இதோ ம.பொ.சியே கூறுகிறார். “மாநாகராட்சியின் சிறப்புக்கூட்டம் நடைபெற இருக்கும் செய்தியைப் பத்திரிகைகளில் பார்த்ததும் மேயரையும் என்னையும் ராஜாஜி தமது இல்லத்திற்கு அழைத்துப் பேசினார்”. ஆந்திர அரசுக்குத் தற்காலிமாகக் கூட சென்னையில் இடம் தரக்கூடாது என்ற வாசகத்தை நீக்கிவிடுமாறு மேயரையும் என்னையும் ராஜாஜி கேட்டுக் கொண்டார். மேயர் அவர்கள் வெகு சுலபத்தில் அதற்கு இணங்கிவிட்டார். நான் பிடிவாதமாக மறுத்து விட்டேன். நிபந்தனை எதுவும் இல்லாமலே ஆந்திர அரசுக்கு சென்னையில் இடம் தரத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும் தயாராக இருப்பதை நான் அறிவேன். (ம.பொ.சி. எனது போராட்டம் பக் 632) சென்னையில் ஆந்திராவுக்கு தற்காலிகமாகக் கூட தலைநகரமாக இருக்க அனுமதிக்கக் கூடாது என்று சொன்ன பெரியாரைத் துரோகி என்பதும், ஆந்திரத் தலைநகர் தற்காலிகமாகச் சென்னையில் இருக்க வேண்டும் என்று சொன்ன இராஜாஜியைத் தலைவர் என்பதும் இராஜாஜியைத் தமிழ்ப் பார்ப்பனர் என்பதும் வேண்டுமென்றே பெரியார் அவரை எதிர்க்கிறார் என்பதும் எவ்வளவு பெரிய வரலாற்று மோசடி என்பதை இதன்மூலம் அறியலாம்.
15.2.53 சென்னை மாவட்ட திராவிடர் கழக செயற்குழு 22.2.53 அன்று சென்னைக்கு வரும் குடிஅரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத்துக்குக் கருப்புக் கொடி காட்டத் தீரமானித்தது. (விடுதலை 16.2.53) அன்றே திராவிடர் கழக மத்திய செயற்குழு கூடி இந்தியக் குடி அரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் சென்னைக்கு வரும் அன்றே “தமிழக உரிமைப் பாதுகாப்பு நாள்” தமிழக மெங்கும் கொண்டாடும்படி தீர்மானம் நிறைவேற்றியது (விடுதலை 16.2.53)
திட்டமிட்டபடி இராசேந்திர பிரசாத்துக்குக் குத்தூசி குருசாமி தலைமையில் ஆயிரக்கணக்கானத் தொண்டர்கள் கருப்புக்கொடி காட்டினர். காவல் துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் சில தி.க. தோழர்களுக்கு மண்டையும் உடைந்தது.
22.2.53 அன்று வாஞ்சு அறிக்கைக் கண்டன நாள் தி.க. தோழர்களால் தமிழகம் முழுவதும் கடைப் பிடிக்கப்பட்டது.
தமிழ் நாட்டைச் சேர்ந்த 32 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடு கருதாமல் புதுதில்லியில் 1953 மார்ச் 23 பிரதமர் நேருவைச் சந்தித்து, ஆந்திரத்தின் தற்காலிகத் தலைநகரமோ, உயர்நீதி மன்றமோ சென்னையில் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தினர். (விடுதலை 4-3-53)
இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகுதான் நேரு ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என்றார்.
தெற்கெல்லைப் போராட்டத்தைப் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்
இந்தியாவில் உள்ள மாநிலங்களை மொழிவழியாகப் பிரித்து அமைக்க நேருவின் தலைமையிலான இந்திய அரசு நீதிபதி பசல் அலி தலைமையிலான குழுவை 29.12.53இல் அமைத்தது. அக்குழுவில் கே.எம். பணிக்கர் என்ற மலையாளியும் குன்சுரு என்ற உ.பி.காரரும் உறுப்பினர்களாக இருந்தனர். அக்குழு 30.9.1955இல் தங்கள் பரிந்துரையை இந்திய அரசுக்கு அளித்தது. 267பக்க அறிக்கையில் பக்81 முதல் பக்89 வரை தமிழகத்தைப் பற்றியது.
அக்குழுதான் தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட 4 தாலுக்காக்களைக் கேரளாவுக்குக் கொடுக்கவேண்டும் என்று சிபாரிசு செய்தது. மார்ஷல் நேசமணி தலைமையில் 1946 முதலே திருவாங்கூர், கொச்சி பகுதியில் உள்ள தமிழ்ப்பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடி வந்தனர். இந்த அறிக்கை வெளிவந்தவுடன் அவர்களுடைய போராட்டமும் அதிகரித்தது. தமிழகமும் கொந்தளித்து எழுந்தது. 10.7.54 முதலே விடுதலையில் திருவாங்கூர் தமிழர் கிளர்ச்சிக்கு ஆதரவான தலையகங்கள் எழுதப்பட்டு வந்தது.
21.11.1955 முதல் 24.11.1955 வரை தமிழகச் சட்டமன்றத்தில் இந்த குழுவின் அறிக்கை மீது விவாதம் நடைபெற்றது. மலையாளிகளும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினரும் தவிர எல்லோருமே தேவிகுளம் பீர்மேடு தமிழகத்துடன் இணைய வேண்டும் என்று பேசினர், தமிழக நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் தேவிகுளம் பீர்மேடு தமிழகத்திற்குச் சொந்தம் என்பதை ஆதாரங்களுடன் விளக்கினார். இறுதி நாளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தேவிகுளம் பீர்மேடு தமிழகத்திற்குச் சேரவேண்டுமென்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் அதற்கு எதிராக 18 வாக்குகளும் கிடைத்தன. பின்னாளில் உச்சநீதி மன்ற நீதிபதியாக இருந்த வி.ஆர். கிருஷ்ணய்யர் (CPI) உள்பட எதிர்த்து வாக்களித்தனர். தமிழகப் பொதுவுடைமைக்கட்சி உறுப்பினர்கள். ப. ஜீவானந்தம், ஞ. இராமமூர்த்தி, கல்யாண சுந்தரம் உட்பட 13 சட்டமன்ற உறுப்பினர்கள் நடுநிலைமை வகித்தனர். தீர்மானம் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக நிறைவேறியது.
தமிழகச் சட்டமன்றத் தீர்மானத்தை ஆதரித்து விடுதலையில் தலையங்கம் எழுதினார் குத்தூசி குருசாமி (விடுதலை 25.11.1955) நேரு, பசல் அலி குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வைத்தார். 16.12.1953 முதல் 23.12.53 வரை விவாதம் நடைபெற்றது. நேசமணியும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் எவ்வளவோ எடுத்துக்கூறியும் நேரு தமிழகச் சட்டமன்றத் தீர்மானத்தைப் புறக்கணித்துத் தேவிகுளம் பீர்மேடு கேரளாவுக்கே சொந்தம் என்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டார்.
தமிழக முதல்வரையும், நிதிஅமைச்சர் சி.சுப்பிரமணியத்தையும் டெல்லிக்கு அழைத்துத் தேவிகுளம் பீர்மேடு கேரளாவுக்குச் சொந்தம் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
தமிழக சட்டமன்றத்தில் சி.சுப்பிரமணியம் தேவிகுளம், பீர்மேடு கேரளாவுக்கே சொந்தம் என்று மசோதா கொண்டுவந்தார். 28.3.56 முதல் 31.3.56 வரை நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் விவாதத்தில் பங்கேற்கக் கூடாது என்று கொரடா உத்தரவைப் பிறப்பித்து, இது மேலிட உத்தரவு இதைமீற முடியாது என்று கூறித் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கும் விடாமலே நிறைவேற்றினார். அப்போதுதான் முதலைமைச்சர் குளமாவது மேடாவது என்று சட்டமன்றத்திலேயே பேசினார்.
உண்மையான தமிழர்களின் எதிரி நேருவே என்பதை உணர்ந்த பெரியார் மலையாளிகளைத் தமிழகத்தை விட்டு வெளியேறும் படியான கிளர்ச்சி செய்யாத வரையில் தில்லி பணியாது என்று மதுரைப் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். (விடுதலை 18.1.56)
‘தில்லி அநீதிக்கு மேல் அநீதி தேவிகுளம் பீர்மேடு தாய்த் தமிழகத்திலிருந்து துண்டிக்கப்படுகின்றன’ என்று 17.1.56 அன்று விடுதலையில் தலையங்கம் எழுதப்பட்டது. 15.2.56 அன்று மன்னார் குடியில் பொதுக்கூட்டத்தில் பேசிய பெரியார் பார்ப்பான், வடநாட்டான், மலையாளி போன்ற அந்நியனெவனும் வெளியேற்றப்பட வேண்டியவனே. மலையாளிகளைத் தமிழ் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டாமா என்று ஆவேசப்பட்டார். (விடுதலை 16.2.56) ஆக தமிழகம் தன் மண்ணை இழந்தது. திராவிடம் பேசியதாலா (அ) இந்தியம் பேசியதாலா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ‘தமிழரசுக் கழகம்’ என்ற பெயரில் போலிக் கட்சி வைத்துக் கொண்டு நேருதான் என் தலைவர், காந்திதான் என் தலைவர், சத்தியமூர்த்திதான் என் தலைவர் இராஜாஜிதான் என் தலைவர் என்று கூறி இந்தியத் தேசியத்திற்குக் காவடி தூக்கிய ம.பொ.சி தான் தமிழினத்துரோகி. தி.மு.கவும், வடக்கு எல்லை தெற்கு எல்லைப் போராட்டங்களில் தீவிரமாக பங்கெடுத்து கொண்டது.
ம.பொ.சி வட எல்லைப் போராட்டத்தில் பெரியாரின் மீது பொய்யையும், புளுகையும் அவிழ்த்துவிட்டதைப் போலவே தெற்கெல்லைப் போராட்டத்திலும் மிகப்பெரிய பொய்யை அவிழ்த்து விட்டார்.
“பெரியார் ஈ.வெ.ரா எப்போதும் எதிலும் ஒரு தனிப்போக்கோடு நடந்து கொள்ளக்கூடியவரல்லவா? பசல் அலி கமிஷன் பரிந்துரையிலும் தமது வழக்கப்படித்தான் அவர் நடந்துகொண்டார். திருச்சியிலுள்ள தமது மாளிகையில் ‘தினத்தந்தி’ (தேதி கொடுக்கப்படவில்லை) நிருபர்க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் “தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின் கரை, கொச்சி, சித்தூர் ஆகிய பகுதிகள் பற்றி எனக்குக் கவலை இல்லை. மலையாளத்துடன் அவைகளைச் சேர்க்க வேண்டியதுதான். சமீபத்தில் சர்தார் பணிக்கர் வந்திருந்தார். அவரை நான் சந்தித்துப் பேசினேன். தொழிலுக்காகத் தமிழர்கள் அங்கு (தேவிகுளம், பீர்மேடு) வந்தார்களே ஒழிய நிலம் மலையாளத்தைதான் சேர்ந்தது என்று பணிக்கர் சொன்னார். நானும் சரி என்று சொல்லிவிட்டேன்” (எனது போராட்டம் பக் 758) தினத்தந்திக்குக் குத்தூசி குருசாமி வைத்த பெயரே (டெய்லிடூப்) என்பதாகும். ம.பொ.சியும், தினத்தந்தி ஆதித்தனும் வேண்டுமென்றே பெரியாரின் மீது அவதூறுகளைப் பரப்பி வந்தனர்.
ஆதித்தனார் 1952-57 வரை பிரஜா சோஷலிஸ்டு கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அக்கட்சியின் கொச்சி முதலமைச்சர் பட்டம் தாணுப்பிள்ளை 11 தமிழர்களைச் சுட்டுக் கொன்றார். அக்கட்சி கொச்சி சட்டசபையில் தேவிகுளம் பீர்மேடு கேரளாவுக்கே சொந்தம் என்று கூறியபோதும் தினத்தந்தி ஆதித்தன் அக்கட்சியின் செயல்பாடுகளை எதிர்க்கவில்லை. ம.பொ.சியைப் போன்றே பெரியார் மீது ஏதாவது பொய் சொல்லிக் கொண்டிருப்பது அவரது வாடிக்கை. பெரியாருக்கென்று விடுதலை நாளேடு இருக்கிறது. எங்காவது தேவிகுளம், பீர்மேடு மலையாளிக்கு சொந்தம் என்று இருக்கிறதா என்று யாராவது காட்ட முடியுமா?
1956 முதல் பெரியார் மறையும் வரை “தமிழ்நாடு தமிழருக்கே” என்று முழங்கி வந்தார். இவரா தமிழினப் பகைவர், தமிழினத்துரோகி?
பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட் டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு.
முதல் பாகம் தொடர்ச்சி
“மேயர் தமது சொந்தப் பொறுப்பில் 16.3.53 அன்று திருவல்லிக்கேணி கடற்கரையில் கூட்டம் நடத்த முயன்றார். பெரியார் ஈ.வெ. ராவையும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்குமாறு ராஜாஜி கூறினார்.
நான் அவர்தான் சென்னை ஆந்திராவுக்குப் போனாலும் தமிழ் நாட்டிலிருந்தாலும் திராவிடத்தில் தானே இருக்கப் போகிறது என்று சொல்லிவிட்டாரே! தமிழ்நாட்டில் தான் இருக்க வேண்டுமென்ற கொள்கையின் அடிப்படையில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு அவர் வருவாரா?” என்றேன். இந்தக் கூட்டத்தில் நாயக்கர் பேசுவதை நான் விரும்புகிறேன் என்று அவரிடம் சொல்லுங்கள் அவர் வருவார் என்று சொன்னார். (ம.பொ.சி. எனது போராட்டம் பக் 623) இது எவ்வளவு பெரிய வரலாற்றுப் பொய். திராவிடர் கழக மத்தியச் செயற்குழு 11.1.1953இல் சென்னை தமிழகத்திற்கே சொந்தம் தற்காலிகத் தலை நகராகக் கூட ஆந்திராவிற்குக் கொடுக்கக்கூடாது என்று கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும். 1.2.53இல் சென்னை கடற்கரையில் இலட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் சென்னையில் ஆந்திரர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லையென்று கண்டித்துப் பேசிய பிறகும் 16.3.53 கூட்டத்திற்கு அழைக்க வந்த ம.பொ.சி இராஜாஜியிடம் கூறியதாக ‘எனது போராட்டம்’ என்ற நூலில் எழுதியுள்ளது எவ்வளவு பெரிய வரலாற்று மோசடி. உண்மையில் ம.பொ.சியின் குருநாதர் இராஜாஜி தான் சென்னை ஆந்திரர்களின் தற்காலிகத் தலைநகராக இருக்கவேண்டும் என்று விரும்பினார். இதோ ம.பொ.சியே கூறுகிறார். “மாநாகராட்சியின் சிறப்புக்கூட்டம் நடைபெற இருக்கும் செய்தியைப் பத்திரிகைகளில் பார்த்ததும் மேயரையும் என்னையும் ராஜாஜி தமது இல்லத்திற்கு அழைத்துப் பேசினார்”. ஆந்திர அரசுக்குத் தற்காலிமாகக் கூட சென்னையில் இடம் தரக்கூடாது என்ற வாசகத்தை நீக்கிவிடுமாறு மேயரையும் என்னையும் ராஜாஜி கேட்டுக் கொண்டார். மேயர் அவர்கள் வெகு சுலபத்தில் அதற்கு இணங்கிவிட்டார். நான் பிடிவாதமாக மறுத்து விட்டேன். நிபந்தனை எதுவும் இல்லாமலே ஆந்திர அரசுக்கு சென்னையில் இடம் தரத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும் தயாராக இருப்பதை நான் அறிவேன். (ம.பொ.சி. எனது போராட்டம் பக் 632) சென்னையில் ஆந்திராவுக்கு தற்காலிகமாகக் கூட தலைநகரமாக இருக்க அனுமதிக்கக் கூடாது என்று சொன்ன பெரியாரைத் துரோகி என்பதும், ஆந்திரத் தலைநகர் தற்காலிக மாகச் சென்னையில் இருக்க வேண்டும் என்று சொன்ன இராஜாஜியைத் தலைவர் என்பதும் இராஜாஜியைத் தமிழ்ப் பார்ப்பனர் என்பதும் வேண்டுமென்றே பெரியார் அவரை எதிர்க்கிறார் என்பதும் எவ்வளவு பெரிய வரலாற்று மோசடி என்பதை இதன்மூலம் அறியலாம்.
15.2.53 சென்னை மாவட்ட திராவிடர் கழக செயற்குழு 22.2.53 அன்று சென்னைக்கு வரும் குடிஅரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத்துக்குக் கருப்புக் கொடி காட்டத் தீர்மானித்தது. (விடுதலை 16.2.53) அன்றே திராவிடர் கழக மத்திய செயற்குழு கூடி இந்தியக் குடிஅரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் சென்னைக்கு வரும் அன்றே “தமிழக உரிமைப் பாதுகாப்பு நாள்” தமிழகமெங்கும் கொண்டாடும்படி தீர்மானம் நிறைவேற்றியது (விடுதலை 16.2.53)
திட்டமிட்டபடி இராசேந்திர பிரசாத்துக்குக் குத்தூசி குருசாமி தலைமையில் ஆயிரக்கணக்கானத் தொண்டர்கள் கருப்புக் கொடி காட்டினர். காவல் துறையினரின் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலால் சில தி.க. தோழர்களுக்கு மண்டையும் உடைந்தது.
22.2.53 அன்று வாஞ்சு அறிக்கைக் கண்டன நாள் தி.க. தோழர்களால் தமிழகம் முழுவதும் கடைப் பிடிக்கப்பட்டது.
தமிழ் நாட்டைச் சேர்ந்த 32 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடு கருதாமல் புதுதில்லியில் 1953 மார்ச் 23 பிரதமர் நேருவைச் சந்தித்து, ஆந்திரத்தின் தற்காலிகத் தலைநகரமோ, உயர்நீதி மன்றமோ சென்னையில் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தினர். (விடுதலை 4-3-53)
இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகுதான் நேரு ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என்றார்.
தெற்கெல்லைப்போராட்டத்தைப் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களை மொழிவழியாகப் பிரித்து அமைக்க நேருவின் தலைமையிலான இந்திய அரசு நீதிபதி பசல் அலி தலைமையிலான குழுவை 29.12.53இல் அமைத்தது. அக்குழுவில் கே.எம். பணிக்கர் என்ற மலையாளியும் குன்சுரு என்ற உ.பி.காரரும் உறுப்பினர்களாக இருந்தனர். அக்குழு 30.9.1955இல் தங்கள் பரிந்துரையை இந்திய அரசுக்கு அளித்தது. 267பக்க அறிக்கையில் பக்81 முதல் பக்89 வரை தமிழகத்தைப் பற்றியது.
அக்குழுதான் தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட 4 தாலுக்காக்களைக் கேரளாவுக்குக் கொடுக்கவேண்டும் என்று சிபாரிசு செய்தது. மார்ஷல் நேசமணி தலைமையில் 1946 முதலே திருவாங்கூர், கொச்சி பகுதியில் உள்ள தமிழ்ப்பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடி வந்தனர். இந்த அறிக்கை வெளிவந்தவுடன் அவர்களுடைய போராட்டமும் அதிகரித்தது. தமிழகமும் கொந்தளித்து எழுந்தது. 10.7.54 முதலே விடுதலை யில் திருவாங்கூர் தமிழர் கிளர்ச்சிக்கு ஆதரவான தலையகங்கள் எழுதப்பட்டு வந்தது.
21.11.1955 முதல் 24.11.1955 வரை தமிழகச் சட்டமன்றத்தில் இந்த குழுவின் அறிக்கை மீது விவாதம் நடைபெற்றது. மலையாளிகளும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினரும் தவிர எல்லோருமே தேவிகுளம் பீர்மேடு தமிழகத்துடன் இணைய வேண்டும் என்று பேசினர், தமிழக நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் தேவிகுளம் பீர்மேடு தமிழகத்திற்குச் சொந்தம் என்பதை ஆதாரங்களுடன் விளக்கினார். இறுதி நாளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தேவிகுளம் பீர்மேடு தமிழகத்திற்குச் சேரவேண்டுமென்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் அதற்கு எதிராக 18 வாக்குகளும் கிடைத்தன. பின்னாளில் உச்சநீதி மன்ற நீதிபதியாக இருந்த வி.ஆர். கிருஷ்ணய்யர் (ஊஞஐ) உள்பட எதிர்த்து வாக்களித்தனர். தமிழகப் பொதுவுடைமைக்கட்சி உறுப்பினர்கள். ப. ஜீவானந்தம், ஞ. இராமமூர்த்தி, கல்யாண சுந்தரம் உட்பட 13 சட்டமன்ற உறுப்பினர்கள் நடுநிலைமை வகித்தனர். தீர்மானம் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக நிறைவேறியது.
தமிழகச் சட்டமன்றத் தீர்மானத்தை ஆதரித்து விடுதலையில் தலையங்கம் எழுதினார் குத்தூசி குருசாமி (விடுதலை 25.11.1955) நேரு, பசல் அலி குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வைத்தார். 16.12.1953 முதல் 23.12.53 வரை விவாதம் நடைபெற்றது. நேசமணியும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் எவ்வளவோ எடுத்துக்கூறியும் நேரு தமிழகச் சட்டமன்றத் தீர்மானத்தைப் புறக்கணித்துத் தேவிகுளம் பீர்மேடு கேரளாவுக்கே சொந்தம் என்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டார்.
தமிழக முதல்வரையும், நிதிஅமைச்சர் சி.சுப்பிரமணியத்தையும் டெல்லிக்கு அழைத்துத் தேவிகுளம் பீர்மேடு கேரளாவுக்குச் சொந்தம் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
தமிழக சட்டமன்றத்தில் சி.சுப்பிரமணியம் தேவிகுளம், பீர்மேடு கேரளாவுக்கே சொந்தம் என்று மசோதா கொண்டுவந்தார். 28.3.56 முதல் 31.3.56 வரை நடைபெற்ற விவாதத்தில் காங்கிரசுஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் விவாதத்தில் பங்கேற்கக் கூடாது என்று கொறடா உத்தரவைப் பிறப்பித்து, இது மேலிட உத்தரவு இதைமீற முடியாது என்று கூறித் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கும் விடாமலே நிறைவேற்றினார். அப்போதுதான் முதலைமைச்சர் குளமாவது மேடாவது என்று சட்டமன்றத்திலேயே பேசினார்.
உண்மையான தமிழர்களின் எதிரி நேருவே என்பதை உணர்ந்த பெரியார் மலையாளிகளைத் தமிழகத்தை விட்டு வெளியேறும் படியான கிளர்ச்சி செய்யாத வரையில் தில்லி பணியாது என்று மதுரைப் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். (விடுதலை 18.1.56)
‘தில்லி அநீதிக்கு மேல் அநீதி தேவிகுளம் பீர்மேடு தாய்த் தமிழகத்திலிருந்து துண்டிக்கப்படுகின்றன’ என்று 17.1.56 அன்று விடுதலையில் தலையங்கம் எழுதப்பட்டது. 15.2.56 அன்று மன்னார் குடியில் பொதுக்கூட்டத்தில் பேசிய பெரியார் பார்ப்பான், வடநாட்டான், மலையாளி போன்ற அந்நியனெவனும் வெளியேற்றப்பட வேண்டியவனே. மலையாளிகளைத் தமிழ் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டாமா என்று ஆவேசப்பட்டார். (விடுதலை 16.2.56) ஆக தமிழகம் தன் மண்ணை இழந்தது. திராவிடம் பேசியதாலா (அ) இந்தியம் பேசியதாலா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ‘தமிழரசுக் கழகம்’ என்ற பெயரில் போலிக் கட்சி வைத்துக் கொண்டு நேருதான் என் தலைவர், காந்திதான் என் தலைவர், சத்தியமூர்த்திதான் என் தலைவர் இராஜாஜிதான் என் தலைவர் என்று கூறி இந்தியத் தேசியத்திற்குக் காவடி தூக்கிய ம.பொ.சி தான் தமிழினத்துரோகி. தி.மு.கவும், வடக்கு எல்லை தெற்கு எல்லைப் போராட்டங்களில் தீவிரமாக பங்கெடுத்து கொண்டது.
ம.பொ.சி வட எல்லைப் போராட்டத்தில் பெரியாரின் மீது பொய்யையும், புளுகையும் அவிழ்த்துவிட்டதைப் போலவே தெற்கெல்லைப் போராட்டத்திலும் மிகப்பெரிய பொய்யை அவிழ்த்து விட்டார்.
“பெரியார் ஈ.வெ.ரா எப்போதும் எதிலும் ஒரு தனிப்போக்கோடு நடந்து கொள்ளக்கூடியவரல்லவா? பசல் அலி கமிஷன் பரிந்துரையிலும் தமது வழக்கப்படித்தான் அவர் நடந்துகொண்டார். திருச்சியிலுள்ள தமது மாளிகையில் ‘தினத்தந்தி’ (தேதி கொடுக்கப்படவில்லை) நிருபர்க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் “தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின் கரை, கொச்சி, சித்தூர் ஆகிய பகுதிகள் பற்றி எனக்குக் கவலை இல்லை. மலையாளத்துடன் அவைகளைச் சேர்க்க வேண்டியதுதான். சமீபத்தில் சர்தார் பணிக்கர் வந்திருந்தார். அவரை நான் சந்தித்துப் பேசினேன். தொழிலுக்காகத் தமிழர்கள் அங்கு (தேவிகுளம், பீர்மேடு) வந்தார்களே ஒழிய நிலம் மலையாளத்தைதான் சேர்ந்தது என்று பணிக்கர் சொன்னார். நானும் சரி என்று சொல்லிவிட்டேன்” (எனது போராட்டம் பக் 758) தினத்தந்திக்குக் குத்தூசி குருசாமி வைத்த பெயரே (டெய்லிடூப்) என்பதாகும். ம.பொ.சியும், தினத்தந்தி ஆதித்தனும் வேண்டுமென்றே பெரியாரின் மீது அவதூறுகளைப் பரப்பி வந்தனர்.
ஆதித்தனார் 1952-57 வரை பிரஜா சோஷலிஸ்டு கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அக்கட்சியின் கொச்சி முதலமைச்சர் பட்டம் தாணுப்பிள்ளை 11 தமிழர்களைச் சுட்டுக் கொன்றார். அக்கட்சி கொச்சி சட்டசபையில் தேவிகுளம் பீர்மேடு கேரளாவுக்கே சொந்தம் என்று கூறியபோதும் தினத்தந்தி ஆதித்தன் அக்கட்சியின் செயல்பாடுகளை எதிர்க்கவில்லை. ம.பொ.சியைப் போன்றே பெரியார் மீது ஏதாவது பொய் சொல்லிக் கொண்டிருப்பது அவரது வாடிக்கை. பெரியாருக்கென்று விடுதலை நாளேடு இருக்கிறது. எங்காவது தேவிகுளம், பீர்மேடு மலையாளிக்கு சொந்தம் என்று இருக்கிறதா என்று யாராவது காட்ட முடியுமா?
1956 முதல் பெரியார் மறையும் வரை “தமிழ்நாடு தமிழருக்கே” என்று முழங்கி வந்தார். இவரா தமிழினப் பகைவர், தமிழினத்துரோகி?
பெரியார் முழக்கம் 08102015 இதழ்
Friday, November 3, 2017
Subscribe to:
Posts (Atom)