தொடர்பாளர்கள்

Wednesday, July 6, 2011

மலேசியத் தமிழ் நெறிக் கழக ஏற்பாட்டில் பாவணரின் அஞ்சல் தலை வெளியீடும் அன்னாரின் இறுதி உரை குறுவட்டு வெளியீடும் மிகச் சிறப்பாக நிகழ்ந்தேறியது















































அண்மையில் மலேசியத் தமிழ் நெறிக் கழக பத்துமலைக் கிளை இளைஞர் பிரிவினரின் ஏற்பாட்டில் கோலாலம்பூரில் சோமா அரங்கத்தில் மாணவர் எழுச்சி விழாவும் மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவணரின் அஞ்சல் தலை வெளியீடும் அன்னாரின் இறுதி உரை குறுவட்டு வெளியீடும் மிகச் சிறப்பாக நிகழ்ந்தேறியது.மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் முயற்சியால் மலேசியாவில் உயிர்ப்பாடும் முக்கழகம் மொழிநூன் முனைவர் ஞா.தேவ நேயப் பாவாணருக்கு அஞ்சல் தலை வெளியீடு செய்யப் பட்டது பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய செய்தியாகும். தம் வாழ் நாள் முழுவதும் தமிழின் மீட்சிக்காகவே ஈகம் செய்து உழைத்த பேற்றுக்குரிய பேரறிஞர் பாவாணர். வேர் சொல்லாராய்ச்சித் துறையில் தனித்தன்மை பெற்று மூலமாகவும் அனைவருக்கும் பேராசானாகவும் வழிகாட்டியாகவும் விளங்குபவர் பாவாணர் ஒருவரே. தமிழே உலக முதற்றாய் மொழி . தமிழனே உலகில் முதன் மாந்தன், தமிழன் பிறந்தகம் தென் கடலுள் மூழ்கியிருக்கும் குமரிக் கண்டமே , திராவிட மொழிகளுக்கெல்லாம் தாயாகவும் உலக மொழிகளுக்கெல்லாம் வேராகவும் இருப்பது தமிழொன்றே. எனும் கோட்பாடுகளை வலியுறுத்தி அரிய நூல்கள் பலவற்றைப் பாவாணர் எழுதினார்.

கோலாலம்பூரில் 26.06 .2011 ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 2 மணிக்கு சோமா அரங்கத்தில் தமிழ் நெறி மாணவர் எழுச்சி விழாவும் பாவாணரின் இறுதிப் பேச்சு, 1964 ஆம் ஆண்டு காணப் பெற்ற நேர்காணல் குறுவட்டு வெளியீடும் பாவாணரின் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடும் சிறப்பாக நிகழ்ந்தது . இந்நிகழ்வில் மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தேசியத் தலைவர் திருமாவளவன் அவர்களும் தமிழறிஞர் இர.திருச்செல்வம் அவர்களும் , தேசியப் பொருளர் மு.தமிழ்வாணன் அவர்களும், மூத்தத் தலைவர் இரா.தமிழழகனார்
அவர்களும், பாவாணர் பெருந்தொண்டர் ஐயா பாஞ்சா சர லிங்கம் அவர்களும் சிங்கையிலிருந்து பாவாணர் பெருந்தொண்டர் ஐயா கொவலங் கண்ணனார் அவர்களைப் படிநிகர்த்து தமிழ்த் திரு கவி அவர்களும் சிறப்பாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். தமிழ் நெறி மாணவர்களின் தமிழிய எழுச்சிக் குரிய ஆடல், பாடல், பேச்சு முதலான நிகழ்வுகளும் இடம்பெற்றன. பாவணரின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் நாடகமாக நடித்துக் காட்டினர். இந்நிகழ்வு தமிழ் நெறி இளையோர்களால் சிறப்பான முறையில் வழிநடத்தப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.