தொடர்பாளர்கள்

Wednesday, October 28, 2009

கருணாநிதியின் மனித நேய உணர்வையும் மான உணர்வையும் என்னென்று சொல்வது? தமிழகப் பெருந்தலைவர் பழ.நெடுமாறன்




ஆனால்
நம்முடன் தொப்புள் கொடி உறவு கொண்ட ஈழத்தமிழர்களின் ரத்தத்தால் நனைந்து கறைபடிந்திருக்கிற ராஜபட்சவின் கரங்களைக் குலுக்கி நட்பு பாராட்ட தன் மகள் உள்பட தமிழர்களைக் கொண்ட குழுவையே அனுப்பி உறவு கொண்டாடிய கருணாநிதியின் மனித நேய உணர்வையும் மான உணர்வையும் என்னென்று சொல்வது? தமிழகப் பெருந்தலைவர் பழ.நெடுமாறன்

2009‐ம் ஆண்டு மே 19‐ம் தேதி விடுதலைப் புலிகளை முற்றிலுமாக முறியடித்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. போரின் இறுதி மூன்று நாள்களில் ஏறத்தாழ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். நான்காம் கட்ட ஈழப்போரில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தார்கள்

போர்ப் பகுதியில் இருந்து உயிர் தப்பிய 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை நலன்புரி முகாம்கள் என்ற பெயரில் முள்வேலி முகாம்களில் ராணுவப் பாதுகாப்போடு சிங்கள அரசு அடைத்தது. போர் முடிந்து ஐந்து மாத காலத்துக்கு மேலாகியும் அந்த மக்கள் விடுவிக்கப்பட்டு. தங்கள் ஊர்களுக்கும் வீடுகளுக்கும் திரும்ப அனுமதிக்கப்படவில்லை. முகாம்களில் போதுமான தங்குமிடம், சுகாதார வசதிகள், உணவு, மருந்து ஆகிய எல்லாமே பற்றாக்குறையாக இருந்தது. இதன் விளைவாக தினமும் 200 முதல் 300 பேர் வரை மடிந்துகொண்டிருக்கின்றனர்.

இரண்டாம் உலகப்போரின் போது யூதர்களை வதைக்க ஹிட்லர் அமைத்த முகாம்களைவிட ராஜபட்ச அமைத்த முகாம்கள் மிகமோசமானவை என உலக நாடுகள் குற்றம் சாட்டின. இந்த முகாமில் இருந்த மக்களுக்கு அடிப்படை மனித உரிமைகள், இடப்பெயர்வு, வாழ்வாதாரம், கூடிப்பேசும் உரிமை, குறைகளை முறையிடும் உரிமை ஆகிய எல்லாமே மறுக்கப்பட்டன.ஐ.நா. அமைப்புகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், பிற தொண்டு நிறுவனங்கள் ஆகியவையும் இந்த மக்களுக்கு உதவுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்தியா உள்பட உலக நாடுகள் அளித்த உதவியில் ஒரு சிறு பங்குகூட இந்த மக்களுக்குக் கிடைக்கவில்லை. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் உள்பட பல்வேறு நாடுகள் இந்த முகாம்களில் உள்ள சீர்கேடான நிலைமை குறித்து மிகுந்த கவலையுடன் எச்சரித்தன. அந்த மக்களை விடுவித்து அவர்களது ஊர்களுக்குத் திரும்ப அனுமதிக்கும்படி வலியுறுத்தின. ஆனால் ராஜபட்சவின் கேளாக் காதுக்கு இந்தக் குரல் எட்டவில்லை. இந்த நிலைமையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அனைத்துக் கட்சிக் குழு ஒன்று முகாம்களை பார்வையிட அனுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்டது.

இந்தக் கோரிக்கையைத் திசை திருப்பவும், இலங்கை முகாம்களில் நடக்கும் கொடுமைகளை மறைக்கவும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி தந்திரத் திட்டம் வகுத்தார். அதற்கிணங்க காங்கிரஸ் ‐ தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அனுப்புவதாக அறிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஏன் சேர்க்கவில்லை என்ற கேள்வி எழுந்தபோது, இலங்கை அதிபர் ராஜபட்சவிடமிருந்து தனக்கு வந்த அழைப்பின் அடிப்படையிலேயே இந்தக் குழுவை அனுப்புவதாக முதலமைச்சர் கூறினார். வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் இந்திய அரசை அணுகி அனுமதி பெற்று அவர்கள் போகட்டும் என எகத்தாளம் செய்தார். இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற முறையில் ராஜபட்ச, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அழைப்பு அனுப்பவில்லை. இலங்கை அரசின் அதிபர் என்ற முறையில் தமிழக முதலமைச்சருக்கு அவர் அழைப்பு அனுப்பினார். இது தனிப்பட்ட அழைப்பு அல்ல. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான அழைப்பாகும்.முதலமைச்சர் என்ற முறையில் தனக்கு அனுப்பப்பட்ட அழைப்புக் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முதலமைச்சர் கலந்து ஆலோசித்து அனைத்துக்கட்சி குழுவை அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. அதற்கு ஆழமான உள்நோக்கம் உள்ளது.இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோ, இந்த முகாம்களைப் பார்வையிட இதுவரை அனுமதிக்கப்படவில்லை.சர்வதேசப் பத்திரிகையாளர்களோ அல்லது உள்நாட்டுப் பத்திரிகையாளர்களோ கூட அனுமதிக்கப்படவில்லை. தனது நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையோ பத்திரிகையாளர்களையோ கூட முகாம்களைப் பார்வையிட அனுமதிக்காத ராஜபட்ச, கருணாநிதிக்கு மட்டும் அழைப்பு அனுப்பி அவர் அனுப்பிய தூதுக்குழுவை ராசோபச்சாரத்துடன் வரவேற்று விருந்தளித்து, பரிசுகள் தந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட முகாம்களைப் பார்வையிட அனுமதித்ததன் நோக்கம் என்ன?

முகாம்களில் உள்ள மக்களை உடனே விடுவிக்காவிட்டால் இலங்கைக்கு அளிக்கப்படும் பொருளாதார உதவிகள் நிறுத்தப்படும் என பிரிட்டன் உள்பட பல நாடுகள் எச்சரித்துள்ளன. இந்தச் சூழ்நிலையில் அந்நாடுகளிடம் காட்டுவதற்கு ராஜபட்சவுக்கு ஒரு நற்சான்றிதழ் தேவை. அதை வழங்குவதற்கு அவர் தேர்ந்தெடுத்த நபர்தான் கருணாநிதி ஆவார்.ராஜபட்ச விரும்பியதும் எதிர்பார்த்ததும் நடந்தது. காங்கிரஸ் ‐ தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிங்கள அரசு அழைத்துச் சென்ற இடங்களுக்கு மட்டுமே சென்றார்கள். அவர்கள் காட்டியவற்றை மட்டுமே கண்டார்கள். தாங்கள் விரும்பிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும் என ஒரு போதும் கேட்கவில்லை. இக்குழுவினர் சென்ற இடமெல்லாம், மக்கள் அவர்களிடம் எவ்வாறு தங்களுடைய குமுறல்களையெல்லாம் கொட்டியழுதார்கள் என்பது குறித்து இலங்கையிலிருந்து வெளிவரும் வீரகேசரி, உதயன், வலம்புரி ஆகிய நாளேடுகள் பக்கம் பக்கமாகச் செய்திகளை வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளன.

மலையகப் பகுதிக்கு இந்தக் குழுவினரின் வருகை ஏமாற்றத்தையே அளித்தது என மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையகத் தமிழர்களின் தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் குழுவில் சென்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் கொழும்பு வீரகேசரி நாளேட்டுக்கு அளித்த நேர்காணலில் சர்வதேச நியமங்களுக்கு உள்பட்டே இலங்கையில் அகதி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு மக்களின் பாதுகாப்புக்காகவே முள்கம்பிகள் போடப்பட்டுள்ளன என்று கூறியிருக்கிறார். இன்னொரு காங்கிரஸ் உறுப்பினரான ஜே.எம்.ஆரூண் இலங்கை செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்திய ஊடகங்களில் தெரிவிப்பதைப் போன்று இடம்பெயர் மக்கள் அவலங்களை எதிர்நோக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.இந்தக் குழுவினர் இலங்கை அதிபர் ராஜபட்ச அவருடைய சகோதரர்கள் பசில் ராசபட்ச, கோத்தபய ராஜபட்ச ஆகியோரைச் சந்தித்து அளவளாவியுள்ளனர்.

ராஜபட்சவுக்கு பொன்னாடை போர்த்தியும் பரிசுகள் தந்தும் தங்களின் பக்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அவரும் இவர்களின் விசுவாசத்தை மெச்சி, பரிசுகள் தந்து மகிழ்வித்திருக்கிறார். லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களின் ரத்தக் கறைபடிந்துள்ள ராஜபட்சவின் கரங்களை தமிழர்களே குலுக்கி மகிழ்ந்த அவலம் வரலாறு காணாததாகும். இக்குழுவினரை இலங்கைக்கு அனுப்புவதற்கு 20 நாள்களுக்கு முன்னதாகவே 22‐9‐09‐ல் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, பின்வருமாறு அறிவித்ததை இப்பொழுது நினைவு கூரவிரும்புகிறேன்:

இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து வெளிவரும் தகவல்கள் நமக்குத் திருப்தியை அளிக்கின்றன. தமிழக அரசும் இந்திய அரசும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக இலங்கை அரசின் மூத்த அதிகாரிகளும், அமைச்சர்களும் அவசரமாகக் கூடி தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பான நடவடிக்கைகள் எந்த நிலையில் இருக்கின்றன என ஆய்வு செய்துள்ளனர் என நாளேடுகளில் வெளிவந்த செய்திகளைச் சுட்டிகாட்டியுள்ள முதல்வர், இவையெல்லாம் திருப்தியளிக்கின்றன எனக் கூறியுள்ளார். 20 நாள்களுக்கு முன்னால், முதலமைச்சர் இவ்வாறு அறிவித்த பிறகு இலங்கைக்கு இவரால் அனுப்பப்பட்ட தூதுக்குழுவினர் இந்த அறிவிப்புக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட அறிக்கையை முதலமைச்சரிடம் அளித்திருக்கிறார்கள். இக்குழுவினர் சென்னை திரும்பியதும் முதலமைச்சர் கருணாநிதி மூலம் வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு கூறியிருக்கிறார்கள்:

முள்வேலி முகாம்களில் இருக்கிற மக்களின் துன்பங்கள் குறித்து அதிபர் ராஜபட்சவை நாங்கள் சந்தித்தபோது, அவரிடம் தொகுத்துக் கூறியுள்ளோம். இதனை மனிதாபிமான உணர்வோடு அணுகி, ஆவன செய்வதாக அவர் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார். முகாம்களில் உள்ள தமிழர்களை மறுகுடியமர்த்தும் கோரிக்கையை முன்வைத்தோம். மொத்தத்தில் முகாம்களில் உள்ள தமிழர்களை இலங்கை அரசு மீண்டும் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் நம்பிக்கையை இன்னும் இரண்டு வாரகாலத்தில் இலங்கை அரசு ஏற்படுத்தும் என்று தோன்றுகிறது.

இந்த அறிக்கையை வெளியிட்ட முதலமைச்சர் கருணாநிதி, செய்தியாளர்களிடம் அறிவித்ததில் முக்கியமானவை பின்வருமாறு:

1. 15‐10‐09 முதல் 15 நாள்களில் 58 ஆயிரம் மக்கள், முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள்.
2. அநாதைக் குழந்தைகள் உடல் ஊனமுற்றோர் தொண்டு நிறுவனங்களின் பராமரிப்பில் ஒப்படைக்கப்படுவார்கள்.3. இந்திய அரசு மேலும் உதவினால் நிலக்கண்ணி வெடிகள் விரைவில் அகற்றப்படும்.4. முகாம்களில் உள்ள தமிழ் இளைஞர்கள் யாரும் கடத்தப்படுவதில்லை. கொலைசெய்யப்படுவதும் இல்லை.5. தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து, இலங்கை அரசுக்கு விவரமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் துன்பநிலை தொடராமல் பார்த்துக்கொள்ள இலங்கை அரசு ஒப்புக்கொண்டு அதற்கான ஒத்துழைப்பு இந்தியாவிலிருந்தும் கிடைக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. முதலமைச்சர் பட்டியலிடாத ஒரு சாதனையை குழுவின் தலைவர் டி.ஆர். பாலு கூறியிருக்கிறார். அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, இலங்கையும் ‐ தமிழகமும் தொழில் கண்காட்சி நடத்தி இருநாடுகளிடையேயும் தொழில் வணிகம் பெருகவும், தமிழகம் இலங்கையில் முதலீடு செய்யவும் வழிவகை இதன்மூலம் ஏற்படும் என்று கூறி புளகாங்கிதம் அடைந்திருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற போரில் சிங்களப் படையினர் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது உறுதியாகியிருப்பதைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது வணிகத் தடைவிதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. ஆனால் இலங்கையோடு தொழில் வணிகத்தைப் பெருக்குவதற்கான வழிவகைகளை முதலமைச்சரின் குழு ஆராய்ந்து கூறியுள்ள வெட்கக்கேடு நிகழ்ந்துள்ளது.தான் அனுப்பிய தூதுக்குழுவினர் ராஜபட்சவிடமிருந்து பெற்ற வாக்குறுதிகளை பட்டியலிட்டிருக்கிறார் முதலமைச்சர். ஆனால் அவருடைய அறிவிப்பை மாபெரும் சாதனையாகச் சித்திரித்து சுவரொட்டிகள் அச்சடித்து தி.மு.க.வினர் சென்னையெங்கும் ஒட்டியுள்ளனர். சுவரொட்டியில் உள்ள பசை உலர்வதற்கு முன்னாலேயே முகாமிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அனுப்பப்பட்ட 2,500 தமிழர்கள் நடுவழியில் மறிக்கப்பட்டு மற்றொரு முகாமில் அடைக்கப்பட்டுவிட்டதாகச் செய்திகள் வந்துள்ளன.செப்டம்பர் 15‐ம் தேதியன்று வவுனியா முகாம்களிலிருந்து 2000 தமிழ் அகதிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் இப்போது வேறு எங்கோ சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 11‐ம் தேதியன்று யாழ்ப்பாணம் முகாமில் இருந்து 568 தமிழ் அகதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் கைத்தடி என்ற இடத்தில் மீண்டும் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அம்பாறை, திரிகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட 1706 அகதிகளும் அவரவர் வீடுகளுக்குப் போய்ச் சேராமல் வழியில் எங்கேயோ தடுத்துக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த விவரங்களை மனிதநேய நடவடிக்கைகளுக்கான ஐ.நா. சபையின் ஒருங்கிணைப்பு அலுவலகம் கூறியுள்ளது.

தமிழக மீனவர்கள் துன்ப நிலை தொடராமல் பார்த்துக்கொள்ள இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளது என முதல்வர் கூறிய இரு நாள்களிலேயே அதாவது அக்டோபர் 18‐ம் தேதியன்று ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி அவர்களின் மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்து படகுகளையும் சேதப்படுத்தி விரட்டியடித்த செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை சென்ற தூதுக்குழு தனி முகாமில் அடைக்கப்பட்டுள்ள 12,500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இளம்பெண்கள் குறித்து எதுவும் விசாரித்தறியவில்லை என்பது அதிர்ச்சி தருகிறது. புலிகள் எனக் குற்றம் சாட்டி இவர்கள் பிரித்தெடுக்கப்பட்டு தனி முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஐ.நா.வுக்கான இலங்கைத் தூதுவர் பலித்த கோஹண என்பவர் அக்டோபர் 15‐ம் தேதி பின்வருமாறு கொழும்பில் அறிவித்தார்:

தனி முகாம்களில் உள்ள 12,500 பேர் புலிகளாவர். மேலும் மற்ற முகாம்களில் 10,000 புலிகள் இருக்கக்கூடும். இவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு அழிப்பதே எங்கள் நோக்கம் என்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சரான டேவிட் மிலிபண்ட் பின்வருமாறு கூறியுள்ளார்: இலங்கைப்போரில் பாதிக்கப்பட்டு முகாம்களில் வாழும் 12,500 பேரை விடுதலைப்புலிகள் என்று கூறி, தனி முகாம்களில் சிங்கள அரசு அடைத்து வைத்துள்ளது. ராணுவம் ஆய்வு நடத்திய முறை வெளிப்படையாக இல்லை என்பதால் இவர்கள் உண்மையிலேயே விடுதலைப்புலிகளா என்ற ஐயம் ஏற்பட்டிருக்கிறது.

அவர்களைச் சந்திக்க ஐ.நா. அமைப்புக்கோ அல்லது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கோ இன்றுவரை அனுமதியளிக்கப்படவில்லை என்பதும் கவலையளிக்கிறது என்று கூறியுள்ளார். உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள இந்த முகாமை தமிழகத் தூதுகுழு எட்டிப்பார்க்கவில்லை என்பது மட்டுமல்ல. அதுபற்றிய உண்மையைக் கூட விசாரித்தறிய முற்படவில்லை. எங்கேயோ பிரிட்டனில் இருக்கக்கூடிய வெளியுறவுத் துறை அமைச்சர், இந்த இளைஞர்கள் குறித்துக் கவலைப்படுகிறார். ஆனால் இலங்கைக்கே சென்ற தூதுக்குழுவினர் இதைப்பற்றிக் கொஞ்சமும் கவலையோ பொறுப்புணர்வோ இல்லாமல் நடந்துகொண்டுள்ளனர்.

முகாம்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தும் அங்ககீனமாகியும் உள்ளனர். இயலாத முதியவர்களும் குழந்தைகளும் உள்ளனர். இவர்களுக்கு மருத்துவ வசதிகள் போதுமான அளவுக்கு அளிக்கப்படுகிறதா என்பது குறித்து இக்குழுவினர் விசாரித்து அறிந்ததாகத் தெரியவில்லை.

குடும்பங்கள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு முகாம்களில் பிரித்து அடைக்கப்பட்டுள்ளவர்களை ஒன்றாக வைக்கவேண்டும் என இக்குழுவினர் வலியுறுத்தியதாகவும் தெரியவில்லை.கடற்கரை மாவட்டங்களில் வாழும் மக்கள் மீன் பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி அந்த மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கவேண்டும் என இக்குழுவினர் கேட்டதாகவும் தெரியவில்லை.முகாம்களில் உள்ளவர்களின் முழுமையான பட்டியல் இருக்கிறதா என்று கேட்டு அதைப் பார்வையிட்டு சிலரையாவது அழைத்துப் பேசி உண்மை அறிந்தார்களா என்பதற்கும் சான்று இல்லை. போரின் கடைசிக் கட்டத்தில் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் விவரப்பட்டியலை குழுவினர் கேட்டதாகவும் தெரியவில்லை.

இந்தியா உள்பட உலக நாடுகள் அளித்த உதவி முறையாக செலவிடப்பட்டதா என்பது குறித்து விசாரித்து அறியவோ அல்லது அதைக் கண்காணிக்க சர்வதேச குழு ஒன்று அமைக்கவேண்டும் என்று வலியுறுத்தவோ இக்குழுவினர் எந்த முயற்சியும் செய்ததாகத் தெரியவில்லை.

தமிழகக் குழுவின் பயணம் ராஜபட்சவுக்குச் சாதகமான அறிக்கை அளிப்பதற்காகவே சென்றுள்ளது என்ற சந்தேகம் வலுப்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே தனக்குச் நற்சான்றிதழ் அளித்துவிட்டார்கள் என அவரைக் குறை சொல்லும் நாடுகளுக்கும் ஐ.நா. அமைப்புக்கும் கூற இந்த அறிக்கை ராஜபட்சவால் பயன்படுத்தப்படுமே தவிர முகாம்களில் உள்ள மக்களின் துயரைப் போக்குவதற்கு எள் முனை அளவு கூட உதவாது. போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்கிக்கொண்ட லட்சக்கணக்கான மக்களைக் காப்பாற்ற இந்திய அரசு தவறிவிட்டது. இங்கிருந்து கப்பல்களை அனுப்பி அந்த மக்களைப் பத்திரமாக இந்தியாவுக்குக் கொண்டுவந்திருக்கலாம்.

1983‐ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கொழும்பு நகரில் தமிழர்களுக்கு எதிரான இனவெறிப் படுகொலை தாண்டவமாடியபோது, இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி இரண்டு கப்பல்களை அனுப்பி கொழும்பு நகரில் சிக்கிக்கொண்ட தமிழர்களை மீட்டெடுத்து யாழ்ப்பாணத்தில் கொண்டு சேர்க்க உதவினார். ஆனால் மன்மோகன் சிங் அரசு அந்த மனிதநேய கடமையைக் கூட செய்யத்தவறிவிட்டது. இந்த மாபெரும் தவறை மூடி மறைக்க அவருக்கும் கருணாநிதியின் இந்த நற்சான்றிதழ் உதவும். ôஜபட்சவை போர்க் குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் என உலக நாடுகளின் குரல் வலுத்துவரும் இந்த வேளையில் அவரைச் சந்தித்து பொன்னாடை போர்த்தி பரிசுகள் தந்து மகிழ்ந்த இக்குழுவினரை என்னென்று சொல்வது.

1936‐ம் ஆண்டில் இத்தாலியின் சர்வாதிகாரியாக முசோலினி திகழ்ந்தபோது, காங்கிரஸ் தலைவராக இருந்த ஜவாஹர்லால் நேரு சுவிட்சர்லாந்தில் தனது மனைவி கமலாவின் சிகிச்சைக்காகத் தங்கியிருந்தார். கமலா அங்கேயே காலமானார். இச்செய்தியை அறிந்த முசோலினி சுவிட்சர்லாந்தில் இருந்த இத்தாலியத் தூதர் மூலம் நேருவுக்கு இரங்கல் கடிதம் ஒன்றை அனுப்பினார். அத்துடன் தனது விருந்தினராக ரோம் வந்து தங்கும்படியும் அவருடன் பேச விரும்புவதாகவும் செய்தியனுப்பினார். ஆனால் ஜவாஹர்லால் நேரு, இந்த அழைப்பை ஏற்க மறுத்தார். ஆப்பிரிக்காவில் உள்ள அபிசீனியா மீது படையெடுத்து நச்சு வாயு குண்டுகளை வீசி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஒரு பாசிச சர்வாதிகாரியான முசோலினியின் ரத்தக் கறைபடிந்த கரங்களால் அனுப்பப்பட்ட அழைப்பை ஏற்க மறுக்கிற துணிவு ஜவாஹர்லால் நேருவுக்கு இருந்தது. அபிசீனிய மக்களோடு எத்தகைய ரத்தத் தொடர்பும் நேருவுக்கு இல்லை. ஆனாலும் அவரிடம் இருந்த மனிதநேய உணர்வு அவரை இவ்வாறு செய்ய வைத்தது.

ஆனால் நம்முடன் தொப்புள் கொடி உறவு கொண்ட ஈழத்தமிழர்களின் ரத்தத்தால் நனைந்து கறைபடிந்திருக்கிற ராஜபட்சவின் கரங்களைக் குலுக்கி நட்பு பாராட்ட தன் மகள் உள்பட தமிழர்களைக் கொண்ட குழுவையே அனுப்பி உறவு கொண்டாடிய கருணாநிதியின் மனித நேய உணர்வையும் மான உணர்வையும் என்னென்று சொல்வது?

Monday, October 26, 2009

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பேரமைப்பு மாநாடு


ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பேரமைப்பு மாநாடு

தமிழீழத் தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பேரமைப்பு மாநாடு தமிழ் நாடு தஞ்சையில் எதிர்வரும் திசம்பர் திங்கள் 26, 27 - 12 - 2009 ஆம் நாள் ஐயா பழ.நெடுமாறன் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெறவிருக்கின்றது. இம்மாநாட்டில் உலகத் தமிழர் பலர் கலந்து கொள்ளவிருக்கின்றனர். ஈழத்தமிழர் வரலாறு, போராட்டம் குறித்த முழுமையான செய்திகள் அடங்கிய ஆவணக் களஞ்சியமாக மாநாட்டு மலர் அணியமாகின்றது. உலகத் தமிழர்களின் கட்டுரைகள், கவிதைகள் அடங்கிய மலராக இது வெளிவரும். இது தொடர்பான விளம்பர அறிக்கையை விரைவில் காண்க.

Sunday, October 25, 2009

லெப்.கேணல் நாதன் கப்டன் கயன் ஆகிய வீர மறவர்களுக்கு திருநெறியின் வீர வணக்கம்

சிங்கள சூழ்ச்சியால் 26.10.1996 ஆம் ஆண்டு பாரிசில் படுகொலை செய்யப் பட்ட
லெப்.கேணல் நாதன் கப்டன் கயன் ஆகிய வீர மறவர்களுக்கு திருநெறியின்
வீர வணக்கம்

Saturday, October 24, 2009

"கேப்பையில் நெய் வடிகிறது என்றால் கேட்பாருக்குப் புத்தி எங்கே போச்சு! "


தமிழக அரசை நோக்கி மலேசிய எழுத்தாளரின் மற்றுமொரு கேள்வி!

மலேசியாவின் புகழ்பெற்ற வரலாற்றுப் புதின எழுத்தாளர்
பெரியவர் அ. அரங்கசாமி









அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றோ
செல்வத்தைத் தேய்க்கும் படை.

இதைச் சொல்பவன் யார்? பொய்யா மொழிப் புலவன். அவனின் வாக்கு ஒரு போதும் பொய்க்காது.

பெருங்கடலாய்ப் பெருகிக் கொண்டிருக்கும் இக்கண்ணீர்ப்படை ஆழிப்பேரலையாய் எழுந்து சிங்களக் கொடுங்கோல் அரசை மட்டுமல்ல அதற்குத் துணை போன அத்தனை நாடுகளையும் விழுங்கி அழித்தொழிக்கும்.

ஈழத்தில் மட்டுமல்ல இலங்கை எங்குமே எங்களின் தமிழ்க்கொடி பறக்கும்! அங்கே ஐ.நா அரங்கத்திலும் நம் கொடி அசைந்தாடும்! அந்நாளே நமக்கு நன்னாள்!



"கேப்பையில் நெய் வடிகிறது என்றால் கேட்பாருக்குப் புத்தி எங்கே போச்சு! " என்பது ஒரு பழமொழி. நடவாத நடக்க இயலாத ஒரு செயலை நடந்ததாக எடுத்துக்கட்டி , பொய் சொல்வது என்பதுதான் இதன்பொருள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இதனை இன்று நடைமுறைப் படுத்திக்கொண்டு இருப்பவர் மாண்புமிகு தமிழக முதல்வர் கருணாநிதி என்பதை,உலகமே பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது.

"இன்னும் இரண்டு வாரத்தில் இலங்கை அகதி முகாமுக்குள் அடைபட்டுக்கிடக்கும் அனைத்துத் தமிழர்களும் விடுவிக்கப்பட்டு, தங்களின் சொந்தக் கிரமங்களுக்குத்திரும்பி விடுவர். அதற்கான பணிகள் அத்தனையும் செய்து முடித்து விட்டேன் என்று அறிக்கை விடுகின்றார் தமிழக முதல்வர்.

தமிழக முதல்வரையும் பின்னுக்குத் தள்ளி ஒருபடி மேலே நின்று, "தமிழக முதல்வரின் தூதுவர்களில் ஒருவனாக , இலங்கைக்குச்சென்றபோதே, ஆயிரத்து ஐநூறு பேரை விடுவித்து, அவர்களை, அவர்களின் சொந்த வீட்டுக்கு அனுப்பி விட்டுத்தான் வந்துள்ளேன்." என்று முழு பூசனிக்காயைச் சோற்றுக்குள் மறைத்திருக்கிறார் - அதிபர் ராசபக்சேயின் புதிய தம்பி விபீடணன் தொல் திருமாவளவன் அவர்கள்.

இத்தலைவர்களின் இக்கூற்றுக்கு ஈழத்தமிழர்களோ தமிழகத்தமிழர்களோ மறுப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் கன்னத்தில் அறைந்தார் போன்று சிங்கள முக்கிய அமைச்சர் ஒருவரும் அதிபர் ராசப்பக்சேயும் பதில் அளித்திருக்கின்றனர். எப்படி?

"முகாமுக்குள் அடைப்பட்டுக் கிடக்கும் தமிழ் அகதிகளுக்கு விடுதலையா? அது கனவில் கூட நினைத்துப்பர்க்க முடியாத ஒரு செய்தி! " என்று சிரித்து ஏளனம் செய்திருக்கின்றார் இலங்கை அதிபர் ராசபக்சே!

"முகாமில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் விரைவில் விடுதலையாகப் போகின்றனர் என்ற செய்தியைப் பத்திரிகைகளில் பார்த்துதான் தெரிந்துக்கொண்டேன், மற்றபடி இதுப்பற்றி எங்கள் அமைச்சர் அவைக்கு எதுவுமே தெரியாது " என்று சொல்கின்றார் சிங்கள அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர்.

ஆனால் தமிழக முதல்வரும் , அவர் தூது அனுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் , "இதோ கேப்பையில் நெய் வடிகின்றது ! நெய் வடிகின்றது ! பாருங்கள் ! பாருங்கள்! "என்று தமிழக மக்களுக்கு 'பியாசு கோப்' படம் காட்டி மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர் !

தமிழக முதல்வரின் தூதுக்குழு இலங்கைக்குச் சென்றதனால், முகாம், ஏதிலிகள் (அகதிகள்) அடைந்த ஒரே நன்மை தூதுக்குழுவுக்கு நேர்காணல் அளித்த பலர் காணாமல் போனதுதான். (ஏன் எப்படி )

இதனால்தான் என்னவோ ஈழநாட்டுத் தமிழ் இதழ் ஒன்று இலங்கைக்குச் சென்ற தூதுக்குழுவுக்குச் தலைமைஏற்றுச்சென்ற , தி .ஆர் . பாலுவை " சனீசுவரன் வந்திருக்கிறார் " என்று பாராட்டி இருக்கின்றது !

புறநானூறு கண்ட தமிழக முதல்வர் நடுவண் அரசில் உறுப்பியம் வகிக்கும் நாற்பது தி.மு.க உறுப்பினர்களயும் பதவி துறக்கச் செய்து காங்கிரசு ஆட்சியைக் கவிழ்த்து என் அருமை ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுவேன் என்று அனைத்துக் கட்சிகளின் அவையில் முழங்கி கைத்தட்டல் பெற்றார்.

இந்த வாக்குறுதி என்ன ஆயிற்று? ஒரு காலத்தில் தெற்கு தேய்கிறது வடக்கு வாழ்கிறது என்று வடவரை வசைபாடிய வாய் இன்று சோனியா காந்தியை நாவினிக்க வாழ்த்துவது ஏன்?

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்த தமிழ்நெஞ்சன் தமிழ் வெறியன் தமிழ்த்தொண்டன் அல்ல இன்றைய கருணாநிதி அவர்கள். இன்று தமிழகத்தின் பேரரசர். உலகக் கோடீசுவரர்களின் வரிசையில் இடம் பிடுத்துக் கொண்டவர். தேர்தலில் வெற்றி பெற்ற அருமை மகன் அழகிரிக்கு எழுபது பொன் தங்கமாலை அணிவித்துப் பெருமை பெற்றவர்.

இந்தக் குபேர வாழ்க்கயைக் காப்பாற்றிக் கொள்ளவே இந்தத் தமிழ் இமையம் இன்று வடவரின் காலடியில் வீழ்ந்து கிடக்கின்றது.

சுண்டைக்காய் நாடு இலங்கை அதன் கடற்படை இந்தியக் குடிமக்களான தமிழக மீனவர்களை அன்றாடம் அழித்துக் கொண்டிருக்கின்றது. அந்த ஏழை மீனவர்களின் அழுகுரல் தமிழக முதல்வரின் காதுகளில் விழ வில்லையே! அந்த ஏழைகளுக்காக கருணா நிதியின் கண்கள் கலங்கவில்லையே!

இரத்தத்தின் இரத்தமாம் ஈழத்துத் தமிழ்மக்களைக் காப்பாற்றக் கோரி தன்னையே எரித்துக் கொண்ட மறவர் குல மாணிக்கம் தங்கமகன் முத்துக்குமாரின் தியாகம் கூட கலைஞரின் நெஞ்சைத் தொடவில்லையே ஏன்?

ஏனெனில்,தமிழக முதல்வர் இன்று ஒரு மேட்டுக்குட்டி ! ஏழைகளுக்காக இரங்குவதும் கண்ணீர் வடிப்பதும் கேவலம் என்பது மேட்டுக் குடியினரின் மரபு !

ஒரு வல்லரசு நாட்டின் குடிமகன் ஒருவனுக்கு வெளிநாட்டில் துன்பம் விளைந்தால் - அந்த வல்லரசு பொங்கி எழுகின்றது சம்பந்தப்பட்ட நாட்டிடம் காரணம் கோருகின்றது - கண்டனம் செய்கின்றது . எச்சரிக்கை விடுக்கின்றது .

1983 - கொழும்பு இனக்கலவரத்தில் தமிழினம் அழிக்கப்பட்டபோது, அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையர் அவர்கள், இலங்கை அதிபர் சயவர்த்தானாவை இந்த முறையில் தான் மிரட்டி பணியவைதார். வல்லாண்மை மிக்க ஒரு வல்லரசின் செயல்பாடு இப்படிதான் இருக்க வேண்டும்.

ஆனால், தமிழக மீனவர்கள் நிலையில் இன்றைய இந்திய செயல் பாடு எப்படி இருக்கின்றது என்பதை மானமுள்ளஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும் .

சோனியா காந்தியையும் சிங்கள அரசையும் மகிழ்ச்சி படுத்துவதற்காகவே தமிழர்களுக்கு எதிரான் அனைத்தையும் செய்துக்கொண்டிருக்கின்றது இன்றைய இந்திய அரசு. தமிழக தி. மு .க. கூட்டணி அரசும். தங்களின் நல்வாழ்விற்காக நடுவண் அரசுக்குத் துணை போவதோடு சிங்கள அரசையும் வாழ்த்திகொண்டிருக்கின்றது.

அந்த முறையில்தான் இலங்கை சென்ற தமிழக முதல்வரின் தூதுக்குழுவினர் தமிழினத்தின் முதன்மை பகைவன், கொலைஞனான நவீன இட்லர் ராசபக்சேக்குமாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி, அதிபர் அளித்த விருந்தினை உண்டதோடு அவனுடன் கொஞ்சிக் குலாவி நகைச்சுவை ததும்ப உரையாடி மகிழ்ந்து ஆனந்தராகம் பாடி வந்திருக்கின்றனர் என்றால் இவர்கள் தமிழர்களா?

1948 இல் விடுதலை அடந்து ஆட்சி அதிகாரம் சிங்களர்களின் கையில் கிடைத்ததிலிருந்து சிங்கள அரசு அனைத்து வகையிலும் தமிழினத்தை அழித்துக் கொண்டேதான் இருக்கின்றது.

இந்த அழிவிலிருந்து தப்பிப் பிழைப்பதற்காகத்தான் ஈழமக்கள் உடுத்திய துணியுடன் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். புலம்பெயர்ந்த மக்களின் சொத்துகள் அனைத்தையும் சிங்கள மக்களுக்கு வாரி வழங்கியது சிங்கள் அரசு.

தமிழ் சிற்றூர்கள் சிங்களச் சேரிகளாக மாற்றப் பட்டன. பள்ளி கோயில் வளாகங்கள் சிங்களப் படையின் பாசறைகளாயின. காரணமின்றி தமிழ் இளைஞர்கள் தளை செய்யப்பட்டு (கைது) உசாவல் என்ற போர்வையில் சிறைக்குள் ஆயிரம் ஆயிரமாய் கொன்று குவிக்கப் படுகின்றனர். உலகமே கண்டிராத அளவு சிங்கள வெறிப்படை தமிழ்ப் பெண்களைப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிக் கொன்று குவித்து அவர்களின் உடலை அம்மணப் படுத்தி வீதியில் கிடத்திக் கண்காட்சி நடத்தியிருக்கின்றது.

முகாமுக்குள் ஏதிலிகளாய் வாடிக் கிடக்கின்ற இளைஞர்களையும் இளம் பெண்களையும் கூட சிங்களக் காடையர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களை அனைத்துக் கொடுமைகளுக்கும் ஆளாக்கி, அம்மணப் படுத்தி கைகளைக் கட்டி குருவிகளைச் சுடுவது போன்று இன்றும் சுட்டுக் குவித்துக் கொண்டிருக்கின்றது சிங்களப் பேய்ப் படை.

சிங்கள அரசு செய்கின்ற இக்கொடுமைகள் அனைத்தையும் ஆய்ந்து அறிந்து. உண்மையைத் தெரிந்து கொண்ட ஓர் அமெரிக்கப் பெண்மணி கண்ணீர் விடுகின்றார். "இராசபக்சேயின் அரசை உலக நீதிமன்றத்தில் நீறுத்தி தண்டிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுகின்றார் அக்கண்மணி. யார் இவர்? தமிழினத்துக்குத் தொடர்பே இல்லாத ஒரு வேற்று நாட்டுப் பெண்.

செய்யாத குற்றத்துக்காக தமது தாலியைப் பறித்துவிட்டான் பாண்டிய மன்னன் என்பதற்காக அவனையும் அவனின் நகரையும் அழித்தாள் அன்றைய தமிழச்சி கண்ணகி. அந்தக் கண்ணகி பிறந்த மண்ணில் பிறந்த இன்றைய தமிழச்சி கனிமொழி இலக்கக் கணக்கானத் தமிழச்சிகளின் தாலிகளைப் பறித்திட்ட கயவன் இராசப்பக்சேயின் விருந்தினராகச் சென்று திரும்பி இருக்கின்றார். தமிழ்க் குலப் பெண்களே சொல்லுங்கள் இவர் தமிழச்சியா?

ஈராயிரத்து ஒன்பது மே திங்கள் பதினெட்டாம் நாள் தமிழ்க் குலத்துக்கு ஒரு கரு நாள். இந்தியப் படையும் சிங்களப் படையும் இணைந்து நின்று ஒரே நாளில் ஈழமண்ணில் ஐம்பதாயிரம் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து இட்லரையும் வென்ற நாள் அது.

வெள்ளைக் கொடி ஏந்தி சென்ற வீரமறவன் நடேசனையும் அவரது குழுவினரையும் பொதுமக்களையும் கொஞ்சமும் இரக்கமின்றி சுட்டுத் தள்ளி பேயாட்டம் ஆடி நின்றதும் அந்த நாளில்தான்.

இத்தகையத் தமிழினப் படுகொலை நடந்தேறிய பிறகும் நவீன இட்லர் இராசபக்சேயிடம் ஒரு தமிழன் கை குலுக்கி உறவாட நினைக்கிறான் என்றால் அவன் தமிழனே அல்ல!

புலிகளை விட்டுப் பிரிந்து வாருங்கள் உங்களை வாழவைக்கிறோம் என்று வெற்று வாக்குறுதி அளித்த உலக ம்காப் பொய்யன் இராசபக்சேயின் பேச்சை நம்பி ஏமாந்து இன்று முகாம்களில் நிரந்தர நரகத்தில் உழன்று கொண்டிருக்கின்ற மக்களை சிங்கள அரசு ஒரு போதும் உயிரோடு விடுதலை செய்யப் போவதே இல்லை. அவர்கள் அனைவரையுமே புலிகள் என்று முத்திரைக் குத்தி வைத்திருக்கின்றது சிங்கள அரசு. எனவே அம்மக்கள் அனைவரையும் சாகடிப்பது என்பதுதான் சிங்கள் அரசின் முடிந்த முடிபு. இந்த உண்மையைத்தான் முகாமில் உள்ள மக்களை விடுவிப்பது என்பது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு செயல் என்று சொல்லாமல் சொல்லி இருக்கின்றார் அதிபர் இராசபக்சே!

ஆக முகாம்களில் அன்றாடம் செத்துக் கொண்டிருக்கும் நம் இரத்தத்தின் இரத்தங்களை விடுவிக்கின்ற பொறுப்பு உலகத் தமிழர்களின் கைகளில் தான் இருக்கின்றது என்பதை உண்மைத் தமிழன் ஒவ்வொருவரும் உள்ளத்தில் பதித்துக் கொள்ளல் வேண்டும்.

கிழக்கே உதிக்கின்ற கதிரவன் ஒருகால் மேற்கே உதிப்பினும் உதிக்கலாம். ஆனால் சிங்களப் பேரினவாத அரசு தமிழினத்துக்குச் சம உரிமை வழங்கி அவர்களை வாழவைக்கும் என்ற பேச்சுக்கே இனி இடம் இல்லை. இதுதான் உண்மை! உண்மை! உண்மை!

மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு வாழ்ந்த இனம் தமிழினம். அந்த மானம் காக்கப்படல் வேண்டும். வீடணப் புத்தி கொண்ட தமிழ் இரண்டகர்களைக் கண்டு அஞ்சித் தளர்ந்து விடக் கூடாது தமிழினம்.

'வலியோர் சிலர் எளியோர் தமை
வதையே புரிகுவதா?
குகைவாழ் ஒரு புலியே உயர்
குணமேவிய தமிழா!
கொலை வாளினை எடடா! மிகு
கொடியோர் செயல் அறவே!'

தமிழ்மறவன் தன்மானப் புலவன் பாரதிதாசன் நம்மைத் தட்டி எழுப்புகின்றான்! உலகத் தமிழின மறவர்களே! திண் தோள் தட்டி எழுவீர் ! எழுவீ ர்!

"இனி இது பொறுப்பது இல்லை - தம்பி !
எரி தழல் கொண்டு வா!
கதிரை வைத்திழந்தான் - அண்ணன்
கையை எரித்திடுவோம்!

என்று தருமனின் இளையோன் வீமன் பொங்கி எழுந்தமை போன்று பொங்கி எழுந்து விட்டனர் மறத்தமிழர் .

பேரினவாத சிங்கள அரசை அழிப்பதற்கு இனிக் கொத்துக் குண்டுகள் கூடத் தேவையில்லை. அல்லல்பட்டு ஆற்றாது அழுகின்ற இலக்கக் கணக்கான ஈழத்தமிழர்களின் கண்ணீர்ப் படையே அதை அழித்து விடும்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றோ
செல்வத்தைத் தேய்க்கும் படை.

இதைச் சொல்பவன் யார்? பொய்யா மொழிப் புலவன். அவனின் வாக்கு ஒரு போதும் பொய்க்காது.

பெருங்கடலாய்ப் பெருகிக் கொண்டிருக்கும் இக்கண்ணீர்ப்படை ஆழிப்பேரலையாய் எழுந்து சிங்களக் கொடுங்கோல் அரசை மட்டுமல்ல அதற்குத் துணை போன அத்தனை நாடுகளையும் விழுங்கி அழித்தொழிக்கும்.

ஈழத்தில் மட்டுமல்ல இலங்கை எங்குமே எங்களின் தமிழ்க்கொடி பறக்கும்! அங்கே ஐ.நா அரங்கத்திலும் நம் கொடி அசைந்தாடும்! அந்நாளே நமக்கு நன்னாள்!


எழுந்தது மறவர் படை!
மலர்ந்தது தமிழ் ஈழம்!

வாழ்க! வளர்க! தமிழன் வீரம்!




தொடரும்

Wednesday, October 21, 2009

இல்லம் தோறும் தமிழ் நூலகம் அமைப்போம்

இல்லம் தோறும் தமிழ் நூலகம் அமைப்போம் எனும் திட்டத்தின் அடிப்படையில் அரிய தமிழ் நூல்களை நாம் இங்கு அறிமுகம் செய்கின்றோம். இந்நூல்களைப் படிப்பதன் வாயிலாக நாம் நமது இனம் மொழி பண்பாடு கலை நாகரிகம் முதலானவற்றைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். வாங்கிப் படியுங்கள். இயன்றால் தமிழ்ப் பள்ளிக் கூடங்களுக்கு வாங்கி அன்பளிப்பு செய்யுங்கள். நூல்களின் விலைகள் மலேசிய வெள்ளியில் குறிப்பிடப்பட்டுள்ளன. அடுத்த இடுகையில் இவற்றைக் காண்க. அஞ்சல் செலவு தனி.

மேல் விளத்தங்களுக்கு கீழ்க் காணும் தொலைப்பேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்க. 016 3262479 (மலேசியா) மின்னஞ்சல் muthanmozhi@yahoo.com.my

இல்லம் தோறும் தமிழ் நூலகம்

இல்லம் தோறும் தமிழ் நூலகம் 10 தொகுப்புகள் மட்டும்





மலேசிய வெள்ளி



வருங்காலத்தமிழகம்


6.00


அறிவுசுரங்கம் அப்பாதுரையார்




17.00



அறிவு சுடர்


6.00


ஆத்திசூடியும் கொன்றை வேந்தனும் 2.00


தமிழ் தந்த இன்பம்

6.00


சங்க கால புலவர்

10.00


நோபல் பரிசு பெற்ற இயல். அறிஞர்கள் 10.00


நோபல் பரிசு பெற்ற இயல். அறிஞர்கள் 2 10.00


ஆத்தி சூடி


2.00


நோபல் பரிசு பெற்ற இயல். அறிஞர்கள் 3 10.00


நோபல் பரிசு பெற்ற இயல். அறிஞர்கள் 4 10.00


கொன்றை வேந்தன்

2.00


வினா விடை 1


3.00


வினா விடை 2


3.00


வினா விடை 3


3.00


வினா விடை 4


3.00


உங்களுக்குத் தெரியுமா 9
3.00


இலெமுரியா அல்லது குமரிக் கண்டம் 15.00


உங்களுக்குத் தெரியுமா 10
3.00


உங்களுக்குத் தெரியுமா 11
3.00


உங்களுக்குத் தெரியுமா 1
2.00


உங்களுக்குத் தெரியுமா 2
2.00


உங்களுக்குத் தெரியுமா 3
2.00


உலக அறிவியல் 1

2.00


உலக அறிவியல் 2

2.00


உங்களுக்குத் தெரியுமா 4
2.00


உங்களுக்குத் தெரியுமா 5
2.00


உங்களுக்குத் தெரியுமா 6
2.00


உங்களுக்குத் தெரியுமா 7
2.00


உங்களுக்குத் தெரியுமா 8
2.00


நல்வழி


2.00


வள்ளுவர் தமிழ் இலக்கணம் 1
5.00


இன்னா நாற்பது

3.00


நறுந்தொகை


3.00


மூதுரை


2.00


களவழி நாற்பது

2.00


கார் நாற்பது


3.00


நன்னெறி


2.00


வள்ளுவர் தமிழ் இலக்கணம் 2
3.00


வள்ளுவர் தமிழ் இலக்கணம் 3
5.00


வள்ளுவர் தமிழ் இலக்கணம் 4
5.00


வள்ளுவர் தமிழ் இலக்கணம் 5
6.00


இசையும் யாழும்

30.00


நம் நாட்டுக் கப்பற் கலை
30.00


தமிழர் சாவக கலைத் தொடர்புகள் 17.00


ஆதித்த நல்லூரும் பொருநை வெளி 20.00


தமிழர் வரலாறு இன்றைய நோக்கில் 30.00


தமி்ழர் நாகரிகமும் சிந்துவெளி
12.00


தொன்மைச் செம்மொழி தமிழ்
12.00


தமிழரின் தோற்றமும் பரவலும்
12.00


காலக் குறிப்பகராதி

12.00


திராவிட நாகரிகம்

18.00


தமிழர் சரித்திரம்

25.00


சிந்து வெளி தமிழர்

20.00


சாமிசர்மா நூல் திரட்டு 1
35.00


சாமிசர்மா நூல் திரட்டு 2
22.00


சாமிசர்மா நூல் திரட்டு 3
25.00


சாமிசர்மா நூல் திரட்டு 4
15.00


சாமிசர்மா நூல் திரட்டு 5
25.00


சாமிசர்மா நூல் திரட்டு 6
22.00


சாமிசர்மா நூல் திரட்டு 7
42.00


சாமிசர்மா நூல் திரட்டு 8
35.00


சாமிசர்மா நூல் திரட்டு 9
35.00


சாமிசர்மா நூல் திரட்டு 10
47.00


சாமிசர்மா நூல் திரட்டு 11
30.00


சாமிசர்மா நூல் திரட்டு 12
32.00


சாமிசர்மா நூல் திரட்டு 13
20.00


சாமிசர்மா நூல் திரட்டு 14
22.00


சாமிசர்மா நூல் திரட்டு 15
20.00


சாமிசர்மா நூல் திரட்டு 16
20.00


சாமிசர்மா நூல் திரட்டு 17
33.00


சாமிசர்மா நூல் திரட்டு 18
25.00


சாமிசர்மா நூல் திரட்டு 19
36.00


சாமிசர்மா நூல் திரட்டு 20
42.00


கட்டுரை பயிற்சி

5.00


இனிக்கும் இலக்கணம்

6.00


நிறுத்தற்குறிகளும் பயிற்சியும்
5.00


தமிழில் அறிவியல்

5.00


வள்ளுவர் தமிழ் இலக்கணம் 6
10.00


இந்திய அறிவியல் அறிஞர்கள்
6.00


தமிழ் நெறி கரணங்கள்

10.00


திரு.வி.க.தமிழ்க்கொடை(26)
512.00


நாவலர் தமிழ் உரைகள்(24)
580.00


மொழி ஞாயிறு


5.00


தேவநேயம்(13)


300.00


தொல்காப்பியம்(16)

420.00


தமிழ் இலக்கணப் பேரகராதி(18)
480.00


தி.வை.சதாசிவ ஆய்வுகள்(9)
170.00


சான்றோர் பார்வை பண்டாரத்தார் 15.00


செவ்வியல் இலக்கியம்(15)
690.00


தமிழக வரலாற்று வரிசை(12)
315.00


மொத்தம்


4543.00






இல்லம் தோறும் தமிழ் நூலகம்
2 ஆம் தொகுப்பு



29 தொகுப்புகள் மட்டும் (29 பேருக்கு)


வருங்காலத் தமிழகம்

6.00

அறிவு சுரங்கம் அப்பாதுரையார் 17.00

அறிவு சுடர்


6.00

ஆத்திசூடியும் கொன்றை வேந்தனும் 2.00

தமிழ் தந்த இன்பம்

6.00

நோபல் பரிசு பெற்ற இயல். அறிஞர்கள் 10.00

நோபல் பரிசு பெற்ற இயல். அறிஞர்கள் 2 10.00

ஆத்தி சூடி


2.00

நோபல் பரிசு பெற்ற இயல். அறிஞர்கள் 3 10.00

நோபல் பரிசு பெற்ற இயல். அறிஞர்கள் 4 10.00

கொன்றை வேந்தன்

2.00

வினா விடை 1


3.00

வினா விடை 2


3.00

வினா விடை 3


3.00

வினா விடை 4


3.00

உங்களுக்குத் தெரியுமா 9
3.00

இலெமுரியா அல்லது குமரிக் கண்டம் 15.00

உங்களுக்குத் தெரியுமா 10
3.00

உங்களுக்குத் தெரியுமா 11
3.00

உங்களுக்குத் தெரியுமா 1
2.00

உங்களுக்குத் தெரியுமா 2
2.00

உங்களுக்குத் தெரியுமா 3
2.00

உலக அறிவியல் 1

2.00

உலக அறிவியல் 2

2.00

உங்களுக்குத் தெரியுமா 4
2.00

உங்களுக்குத் தெரியுமா 5
2.00

உங்களுக்குத் தெரியுமா 6
2.00

உங்களுக்குத் தெரியுமா 7
2.00

உங்களுக்குத் தெரியுமா 8
2.00

நல்வழி


2.00

வள்ளுவர் தமிழ் இலக்கணம் 1
5.00

இன்னா நாற்பது

3.00

நறுந்தொகை


3.00

மூதுரை


2.00

களவழி நாற்பது

2.00

கார் நாற்பது


3.00

நன்னெறி


2.00

வள்ளுவர் தமிழ் இலக்கணம் 2
3.00

வள்ளுவர் தமிழ் இலக்கணம் 3
5.00

வள்ளுவர் தமிழ் இலக்கணம் 4
5.00

வள்ளுவர் தமிழ் இலக்கணம் 5
6.00

இசையும் யாழும்

30.00

நம் நாட்டுக் கப்பற் கலை
30.00

தமிழர் சாவக கலைத் தொடர்புகள் 17.00

ஆதித்த நல்லூரும் பொருநை வெளி 20.00

தமிழர் வரலாறு இன்றைய நோக்கில் 30.00

தமி்ழர் நாகரிகமும் சிந்துவெளி
12.00

தொன்மைச் செம்மொழி தமிழ்
12.00

தமிழரின் தோற்றமும் பரவலும்
12.00

காலக் குறிப்பகராதி

12.00

திராவிட நாகரிகம்

18.00

தமிழர் சரித்திரம்

25.00

சிந்து வெளி தமிழர்

20.00

கட்டுரை பயிற்சி

5.00

இனிக்கும் இலக்கணம்

6.00

நிறுத்தற்குறிகளும் பயிற்சியும்
5.00

தமிழில் அறிவியல்

5.00

வள்ளுவர் தமிழ் இலக்கணம் 6
10.00

இந்திய அறிவியல் அறிஞர்கள்
6.00

தமிழ் நெறி கரணங்கள்

10.00

மொழி ஞாயிறு


5.00

தி.வை.சதாசிவ ஆய்வுகள்(9)
170.00

சான்றோர் பார்வை பண்டாரத்தார் 15.00

செவ்வியிலக்கியல்(15)

690.00

தமிழக வரலாற்று வரிசை(12)
315.00

மொத்தம்


1658.00



இல்லம் தோறும் தமிழ் நூலகம்

3 ஆம் தொகுப்பு


48 தொகுப்புகள் மட்டும் (48 பேருக்கு )

வருங்காலத் தமிழகம்

6.00
அறிவு சுரங்கம் அப்பாதுரையார் 17.00
அறிவு சுடர்


6.00
ஆத்திசூடியும் கொன்றை வேந்தனும் 2.00
தமிழ் தந்த இன்பம்

6.00
நோபல் பரிசு பெற்ற இயல். அறிஞர்கள் 10.00
நோபல் பரிசு பெற்ற இயல். அறிஞர்கள் 2 10.00
ஆத்தி சூடி


2.00
நோபல் பரிசு பெற்ற இயல். அறிஞர்கள் 3 10.00
நோபல் பரிசு பெற்ற இயல். அறிஞர்கள் 4 10.00
கொன்றை வேந்தன்

2.00
வினா விடை 1


3.00
வினா விடை 2


3.00
வினா விடை 3


3.00
வினா விடை 4


3.00
உங்களுக்குத் தெரியுமா 9
3.00
இலெமுரியா அல்லது குமரிக் கண்டம் 15.00
உங்களுக்குத் தெரியுமா 10
3.00
உங்களுக்குத் தெரியுமா 11
3.00
உங்களுக்குத் தெரியுமா 1
2.00
உங்களுக்குத் தெரியுமா 2
2.00
உங்களுக்குத் தெரியுமா 3
2.00
உலக அறிவியல் 1

2.00
உலக அறிவியல் 2

2.00
உங்களுக்குத் தெரியுமா 4
2.00
உங்களுக்குத் தெரியுமா 5
2.00
உங்களுக்குத் தெரியுமா 6
2.00
உங்களுக்குத் தெரியுமா 7
2.00
உங்களுக்குத் தெரியுமா 8
2.00
நல்வழி


2.00
வள்ளுவர் தமிழ் இலக்கணம் 1
5.00
இன்னா நாற்பது

3.00
நறுந்தொகை


3.00
மூதுரை


2.00
களவழி நாற்பது

2.00
கார் நாற்பது


3.00
நன்னெறி


2.00
வள்ளுவர் தமிழ் இலக்கணம் 2
3.00
வள்ளுவர் தமிழ் இலக்கணம் 3
5.00
வள்ளுவர் தமிழ் இலக்கணம் 4
5.00
வள்ளுவர் தமிழ் இலக்கணம் 5
6.00
இசையும் யாழும்

30.00
நம் நாட்டுக் கப்பற் கலை
30.00
தமிழர் சாவக கலைத் தொடர்புகள் 17.00
ஆதித்த நல்லூரும் பொருநை வெளி 20.00
தமிழர் வரலாறு இன்றைய நோக்கில் 30.00
தமி்ழர் நாகரிகமும் சிந்துவெளி
12.00
தொன்மைச் செம்மொழி தமிழ்
12.00
தமிழரின் தோற்றமும் பரவலும்
12.00
காலக் குறிப்பகராதி

12.00
திராவிட நாகரிகம்

18.00
தமிழர் சரித்திரம்

25.00
சிந்து வெளி தமிழர்

20.00
கட்டுரை பயிற்சி

5.00
இனிக்கும் இலக்கணம்

6.00
நிறுத்தற்குறிகளும் பயிற்சியும்
5.00
தமிழில் அறிவியல்

5.00
வள்ளுவர் தமிழ் இலக்கணம் 6
10.00
இந்திய அறிவியல் அறிஞர்கள்
6.00
தமிழ் நெறி காரணங்கள்

10.00
மொழி ஞாயிறு


5.00
செவ்வியல் இலக்கியம்(15)
690.00
தமிழக வரலாற்று வரிசை(12)
315.00
மொத்தம்


1473.00




இல்லம் தோறும் தமிழ் நூலகம்

4 ஆம் தொகுப்பு


13 தொகுப்புகள் மட்டும் (13 பேருக்கு)

வருங்காலத் தமிழகம்

6.00
அறிவு சுரங்கம் அப்பாதுரையார் 17.00
அறிவு சுடர்


6.00
ஆத்திசூடியும் கொன்றை வேந்தனும் 2.00
தமிழ் தந்த இன்பம்

6.00
நோபல் பரிசு பெற்ற இயல். அறிஞர்கள் 10.00
நோபல் பரிசு பெற்ற இயல். அறிஞர்கள் 2 10.00
ஆத்தி சூடி


2.00
நோபல் பரிசு பெற்ற இயல். அறிஞர்கள் 3 10.00
நோபல் பரிசு பெற்ற இயல். அறிஞர்கள் 4 10.00
கொன்றை வேந்தன்

2.00
வினா விடை 1


3.00
வினா விடை 2


3.00
வினா விடை 3


3.00
வினா விடை 4


3.00
உங்களுக்குத் தெரியுமா 9
3.00
இலெமுரியா அல்லது குமரிக் கண்டம் 15.00
உங்களுக்குத் தெரியுமா 10
3.00
உங்களுக்குத் தெரியுமா 11
3.00
உங்களுக்குத் தெரியுமா 1
2.00
உங்களுக்குத் தெரியுமா 2
2.00
உங்களுக்குத் தெரியுமா 3
2.00
உலக அறிவியல் 1

2.00
உலக அறிவியல் 2

2.00
உங்களுக்குத் தெரியுமா 4
2.00
உங்களுக்குத் தெரியுமா 5
2.00
உங்களுக்குத் தெரியுமா 6
2.00
உங்களுக்குத் தெரியுமா 7
2.00
உங்களுக்குத் தெரியுமா 8
2.00
நல்வழி


2.00
வள்ளுவர் தமிழ் இலக்கணம் 1
5.00
இன்னா நாற்பது

3.00
நறுந்தொகை


3.00
மூதுரை


2.00
களவழி நாற்பது

2.00
கார் நாற்பது


3.00
நன்னெறி


2.00
வள்ளுவர் தமிழ் இலக்கணம் 2
3.00
வள்ளுவர் தமிழ் இலக்கணம் 3
5.00
வள்ளுவர் தமிழ் இலக்கணம் 4
5.00
வள்ளுவர் தமிழ் இலக்கணம் 5
6.00
இசையும் யாழும்

30.00
தமிழர் சாவக கலைத் தொடர்புகள் 17.00
ஆதித்த நல்லூரும் பொருநை வெளி 20.00
தமி்ழர் நாகரிகமும் சிந்துவெளி
12.00
தொன்மைச் செம்மொழி தமிழ்
12.00
தமிழரின் தோற்றமும் பரவலும்
12.00
காலக் குறிப்பகராதி

12.00
திராவிட நாகரிகம்

18.00
தமிழர் சரித்திரம்

25.00
சிந்து வெளி தமிழர்

20.00
கட்டுரை பயிற்சி

5.00
இனிக்கும் இலக்கணம்

6.00
நிறுத்தற்குறிகளும் பயிற்சியும்
5.00
தமிழில் அறிவியல்

5.00
வள்ளுவர் தமிழ் இலக்கணம் 6
10.00
இந்திய அறிவியல் அறிஞர்கள்
6.00
தமிழ் நெறி கரணங்கள்

10.00
மொழி ஞாயிறு


5.00
செவ்வியல் இலக்கியம்(15)
690.00
தமிழக வரலாற்று வரிசை(12)
315.00
மொத்தம்


1413.00